வெள்ளி, 22 ஜூன், 2012

குளு குளு கொடநாட்டில் ஜெயலலிதா மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிற

மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிறபோது கொடநாட்டில் ஒய்வு! பொன்முடி பேச்சு!
                                                                                                   
அதிமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் 22.06.2012 சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி,

காலையிலே செயற்குழு, மாலையிலே தீர்மானம், இரவிலே பொதுக்கூட்டம். இந்த ஒரு நாளில் கலைஞர் இப்படி பாடுகிறாரே என்று சொன்னார்கள். இந்த ஒரு நாள் மட்டுமல்ல, தலைவர் கலைஞர் என்று அரசியலில் அடியெடுதது வைத்தாரோ அன்றிருந்து இன்று 89வது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிற இந்தக் காலம் வரை உழைப்பு. அந்த உழைப்புத்ôன் இந்த இயக்கத்தை கட்டிக்காக்கிறது என்பது வரலாற்று உண்மை. எந்தக் காலத்திலும் ஓய்வு எடுக்கத் தெரியாத தலைவர். விலைவாசி மக்களுக்கு  குளு குளு கோடை வாசம் ஜெயலலிதாவுக்கு

இன்று பார்த்தீர்களா தமிழகத்திலே மேட்டூரிலே காவிரியில் இருந்து தண்ணீரே வரவில்லை என்று பத்திரிக்கை செய்தி. கரண்ட் இல்லாதபோதே கரண்ட் கட்டணம் 4 மடங்காக அதிகமாகிவிட்டதாக செய்தி. விலைவாசி பறந்துகொண்டிருக்கிறது என்று செய்தி. ரோமாபுரியை ஆண்ட மன்னன் நீரோ, ரோம் பற்றி எரிகிறபோது பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக என்று வரலாறு சொல்லும். இங்கே மக்கள் எல்லாம் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறபோது, அம்மையார் மட்டும் கொடநாட்டில் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கிறார்.
வாக்களித்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா. கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 24 மணி நேரமும் தமிழனுக்காக, தமிழ் இனத்திற்காக, ஈழத்தில் வாழுகிற தமிழனுக்காக எண்ணி சிந்தித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிற இந்த தலைவர் கலைஞரை மறந்துவிட்டு, எங்கோ இருந்து வந்த ஒன்றுக்கு இடம் கொடுத்ததன் விளைவு இன்று என்ன ஆகியிருக்கிறது என்று பாருங்கள்.
தமிழக மக்கள் விலைவாசியால் துடித்துக்கொண்டிருக்கிறபோது, இந்த அரசியலே குடியரசுத் தலைவர் தேர்தலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறபோது, குடிநீர் கிடைக்குமா கிடைக்காதா என்று சென்னை மக்கள் முதல் அனைவரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, காவிரி டெல்டா மக்கள் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என்று அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அம்மையார் ஓய்வுக்குச் சென்றுவிட்டார். இவ்வாறு பேசினார்

கருத்துகள் இல்லை: