சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் கையடக்கத் தொலைபேசியை திருடிய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டபோது அவரது கையடக்கத் தொலைபேசியை குறித்த நபர் களவாடி, மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிய களவாடிய நபருக்கு 06 மாதகால கடூழிய சிறைத்தண்டனையும், 6000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ நீதிமன்றத்தினால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக