சரத் பொன்சேகா மற்றும் பெட்ரிகா ஜேன்ஸினால் இலங்கை இராணுவத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டதாகவும், தனிப்பட்ட ரீதியில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டதாகவும் சவேந்திர சில்வா சாட்சியமளித்துள்ளார்.
வெள்ளைக் கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அரச பிரதி வழக்கறிஞர் வசந்த நவரட்ண பண்டார மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை குறுக்கு விசாரணை செய்தார்.
சரணடைந்த போராளிகளை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் தமக்கு உத்தரவு எதனையும் பிறப்பித்திருக்க வில்லை என சவேந்திர சில்வா கூறினார்.
இதேவேளை, வழக்கின் ஐந்தாவது சாட்சியமாக சேனுகா செனவிரட்னவை அறிவிக்குமாறு அரச பிரதி வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதன்படி வழக்கு எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக