செவ்வாய், 16 நவம்பர், 2010

எதிர்வரும் தைமாத முற்பகுதியில் இலங்கையில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடலுக்கு உதவுங்கள்

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
பிபரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களான முருகபூபதி (அவுஸ்திரேலியா), கலாநிதி ஞானசேகரம் ( இலங்கை) ,ருவரின் முயற்சியாலும் முன்னெடுக்கப்படும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல் எதிhவரும் தைமாதம் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம் பெறுகிறது.
இந்த ஒன்று கூடலுக்குப் பலநாடுகளிலும் வதியும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்தும் கிட்டத்தட்ட 40- 50 எழுத்தாளர்கள் இம்மகாநாட்டுக்கு வரவிருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டது.
இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் எழுத்தாளர்கள் பலபிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள் ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ற எழுத்துப்பாணி இருக்கிறது. வித்தியாசமான இலக்கியக் கண்ணோட்டங்கள், அரசியற் கருத்துக்கள் இருக்கின்றன. இவர்களின் எழுத்தை வாசிக்கவென்று ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வாசகர் வட்டமும் இருக்கிறது. பிரிவுகளும் பிரச்சினைகளும் இலக்கியத் துறையில் பரவலாக நடக்கும் யதார்த்தனமான விடயஙகளாகும்.
காலத்துக்காலம் சமுதாய விழிப்புக்களையுண்டாக்கும் படைப்பாளிகள் தோன்றுவதுண்டு. அவர்களை வசைபாடவும் விமர்சிக்கவும் என்றம் பலர் தோன்றுவார்கள்.
1960 களில் அமெரிக்க எழுத்தாளர் ஹரோல்ட் றாபின்சன் இந்தியாவில் தெரியப் பட்டிருந்த அளவு 'த கில்லிங் ஒவ் மொக்கிங்போர்ட்'(1960) எழுதிய பெண்மணி ஹார்ப்பர் லீயைப் பலருக்குத் தெரியாது.
மேற்குறிப்பிட்ட இருவரும் மிகவித்தியாசமான விடயங்களைத் தங்கள் எழுத்தின் கருவாகக்கொண்டிருந்தவர்கள்.
ஹறோல் றாபின்சன், என்ன விதமான விடயங்களை எழுதினார் என்று பலருக்கத தெரியும்.
ஹார்ப்பர் லீ, அமெரிக்க வெள்ளையினத்தில் ஒருபகுதியினரின் ஆதிக்க ஆளுமையையும் இனவெறியையும்; சுட்டிக்காட்டினார். 1812மு; ஆண்டு ' அங்கிள் றொபின்ஸ் கபின்'என்ற நாவல் வெளிவந்தபின் ஏற்பட்ட பதிய முற்போக்கு உணர்வு எழுச்சி, அக்கால கட்டத்தில் அமெரிக்காவின் வெள்ளையினத்தினரிடம்; அடிமைகளாகவிருந்த கறுப்பு மக்களின் விடுதலைக்கு அத்திவாரம் போட்டது. 1834ல் அமெரிக்காவில் அடிமைத் தனம் ஒழிக்கப்பட்டது. அதுபோல் ஹார்ப்பா லீயின் நாவலும் அமெரிக்காவில் கறுப்பு மக்களின் சுயசிந்தனையைத் தூண்டிய காரணிகளில் ஒன்றாகவிருந்தது.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் இலக்கியம் பல ஆரோக்கியமான படைப்பாளர்களை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் சமுதாயக்கொடுமைகளுக்கு எதிராக கொடி தூக்கியவர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தளர்கள். இலங்கை எழுத்தாளர்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது;. இலக்கியத்தைக் காசுக்கு விற்காதவன் இலங்கை எழுத்தாளன். எழுத்தின் மூலம் வாழவேண்டிய வறுமையற்ற ”செல்வ மனம் படைத்தவன்” இலங்கைத் தமிழ் எழுத்தாளன். தங்களின் சுய கருத்துக்களைச் சொன்ன குற்றத்தால், தமிழ்த்தேசிய பாசிசத்தால் அணைந்து போகாத அவர்களின் சுதந்திர எழுத்துக்களால் பலி கொள்ளப் பட்டவர்கள் பல இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள்.
சமுதாய விழிப்புணர்வான எழுத்துக்களைப் படைப்பவர்கள் இலங்கை எழுத்தாளர்கள். சாதிக்கொடுமைக்கு எதிரான காத்திரமான படைப்புக்களை ஆரம்ப காலத்தில்த் தந்தவர்கள் டொமினிக் ஜீவா, டானியல், சே.யோகநாதன், அகத்தியர் போன்ற பல முற்போககு இலங்கை எழுத்தாளர்களாகும்.
ஆக்கமான இலக்கிய விமர்சனம் என்ற ஒப்பற்ற சித்தாந்தை தமிழ் இலக்கிய உலகுக்கு உருவாக்கியவர் அமார் கைலாசபதி அவர்கள்.
இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் வளர்க்க இலங்கைத் தமிழர்களால் எடுக்கப் படும் முயற்சிகள் அளப்பரியன. புதிய கருத்துக்கள், எழுத்து நடைகள், பரந்த கண்ணோட்டம் என்ற பல பரிமாணங்களால் உலக இலக்கிய தரத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலர், அவர்களிற் சிலர் (எல்லோர் பெயரையும் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும) கனடாவில் வாழும் திரு அ. முத்துலிங்கம், ஜேர்மனி பொ. கருணாகரமூர்த்தி, பாரிஸ் கலாமோகன போன்ற ஒருசிலராகும்.
இலங்கையில்,,இலங்கைத் தமிழருக்கு மட்டுமே சொந்தமான நாட்டுக்கூத்தை ஆராய்ந்து எழுதிய கிழக்கிலங்கைக் கலாநிதி மௌனகுருவின் எழுத்துச் சேவை மதிப்புக்குரியது.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப்பணியால் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் வளத்துக்கும் பாரிய பணியைச்செய்கிறார்கள். தாயை வணங்குவதுபோற் தமிழன் தமிழை வணங்குபவன் இலங்கைத் தமிழன். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் இலங்கைவாழ் எழுத்தாளர்கள் பல வருடங்களுக்குப்பின் இலங்கையில் ஒன்று கூட முனையும்போது அதைத் தடுப்பது நல்ல காரியமல்ல.
தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல் இலங்கையில் நடப்பதால் பல நன்மைகள் இலங்கை இலக்கியத் துறைக்குக் கிடைக்கும். இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் இலங்கையிற் தெரியப் படவும் கவுரவிக்கப் படவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். புதிய படைப்புக்கள் எழுதப்படவும் பிரசுரிக்கவும் இந்த ஒன்று கூடல் உந்து கோலாகவிருக்கும். இதை ஏன் யாரும் எரிச்சலுடன் பார்க்கவேண்டும் என்று புரியவில்லை.
இலங்கைத் தமிழ் எழுத்தாளனின் உணர்வை யாரும் விற்பனைக்கு வாங்க முடியாது. பெரும்பான்மையான இலங்கை எழுத்தாளர்கள் சுதந்திர சிந்தனையுள்ளவர்கள். பல முற்போக்கு எழுத்தாளர்கள் பிரசாரக் கவிதைகள், இலக்கியங்களால் களங்கப் படுத்த முடியாதவர்கள்.
எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையும் அல்லது அவனின் எழுத்து வளத்தை அழிப்பதையும் அவன் வாழும் சமுதாய உணர்வு வரையறுக்கிறது. அண்மைக்காலங்களில் இருந்த 'தமிழ்ச்சமுதாய உணர்வு' என்ற போர்வையில் இளம் கவிஞர் செல்வி தொடக்கம் பல அற்புதமான படைப்பாளிகளைத் தமிழ்த்தேசிய வாதிகள்; பலிவாங்கினார்கள்;.
அப்படியான ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு கூட்டம் இன்று இலங்கைத் தமிழர் ஒன்று கூடலையும் எதிர்க்கிறது. வஞ்சக உணர்வுடனும் தாங்களால் இப்படி ஒரு கூட்டத்தை இலங்கையில் நடத்த முடியவில்லையே என்ற வயிற்றெரிச்சலாலும்;; வசைபாடுகிறது. அவர்களின் கேவலமான மனத்தாங்கலைக் மறைத்துக்கொண்டு இக்கூட்டத்துக்கு அரசியற் சாயம் பூசுகிறார்கள் அவர்களுக்கு ஒத்துப்பாட இந்திய எழுத்தாளர்களையும் கூட்டுச்சேர்த்திருக்கிறார்கள்.
எதிர்ப்புக் கடிதத்தில் கையெழுத்துப்போட்டிருக்கும் ஒரு சில இந்திய எழுத்தாளர்கள் எனது நண்பர்கள். இவர்களின் போக்கு எனக்கு மனவேதனைனைத் தந்தது. இலங்கை எழுத்தாளர்களின் ஒன்று கூடல் பற்றி யாரோ ஒரு கேவலமான கூட்டம் பரப்பும் மூன்றாம்தர விளக்கங்களை நம்பியவர்களா இவர்கள் என்ற ஆதங்கம் மனத்தை வாட்டியது.
காழ்ப்புணர்ச்சிக்காரரின் இலங்கை ஒன்று கூடலுக்கான எதிர்ப்புக் கடிதத்துக்குக் கையெழுத்திட்ட,,இலக்கியத் துறையில் நான் மிகப் பெரு மதிப்பு வைத்திருக்கும் கோவை ஞானி ஐயா அவர்களைத் தொடர்பு கொண்டபோது' அம்மா, நான் இதுபற்றி கலாநிதி ஞானசேகரம் அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அவர் சொன்ன பதில்கள் திருப்தியாயிருந்தது. பல நாடுகளிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் முழுச் சுதந்திரத்துடனும் பங்கு பற்றும் இந்த மகா நாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று சொன்னார்.
காழ்ப்புணர்ச்சிக்காரர்களின் கடிதத்தின் பிரதி 'உயிர்மை; பத்திரிகையில் வெளிவந்திருப்பதாக அறிந்தவுடன், லண்டனில் வாழும் நாவலாசிரியர் விமல் குழந்தைவேலு (எனது தம்பி) என்னுடன் தொடர்பு கொண்டார்.
வர் இந்தக் வயிற்றெரிச்சல் எதிர்ப்பாளர்களிடம் கேட்கும் கேள்வி,' இந்தியத் தமிழ் இலக்கியத்தறைக்குள் இலங்கை எழுத்தாளர்கள் பலர் பல துறைகளில் உறவு கொண்டிருக்கிறார்கள். எங்கள் படைப்புகளின் பிரசுரத்திற்கு அவர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது, உயிர்மை ஆசிரியர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களர் ஒன்று கூடலுக்கு எதிர்ப்புச்சொல்வதற்கு முதல் எனது புத்தகத்தைப் பிரசுரம் செய்ய என்னிடம் பணம் வாங்கி விட்டு ஏன் கடந்த மூன்று வருடங்களாக ஏமாற்றுகிறார் எனபதற்கு நேர்மையான பதில் சொல்ல வேண்டும்'
இலங்கைத் தமிழர்கள்பற்றி எழுதிப் பிழைக்க எத்தனையோ தமிழ் ஊடகங்கள் இருக்கின்றன.
உதாரணமாக, இலங்கையில் நடந்த போராட்டத்தின் கடைசியில் மரணமடைந்த பிரபாகரனின் பிரேதத்தை நாற்காலியில் வைத்த ஊடக வியாபாரம் செயதவர்கள் தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள். பிரபாகனுக்கு மரண அஞசலி கூடச்செய்யாமல் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கற்பனைக் கதை கட்டும் 'நக்கீரன்'போன்ற சில ஊடகவாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
கடந்த வருடம் கேரளாவில் இலங்கை அரசுக்க எதிராகப் புலம் பெயர்ந்த தமிழர்களும் இலங்கைச் சிங்களவர்களும் நடத்திய கூட்டத்தில் ,ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டதாக கீற்று என்ற இணையத்தளத்தில்; செய்திவந்த. அந்த நேரம் நான் எனது பேரக்குழந்தைகளுடன் லண்டனில் விளையாடிக்கொண்டிருந்தேன.; இந்தச் செய்திபற்றிய உண்மையான தகவல்களைத் தரும்படி கீற்று ஆசிரியருக்கு எழுதினேன் பதிலேயில்லை. இதுதான் இந்திய ஊடகவாதிகளின் பணி!
இலங்கை எழுத்தாளர்களைப்பற்றி எப்படியும் எழுதலாம் என்று இந்த மேதாவிகள் நினைக்கிறார்கள்.,இலங்கையிலுள்ள தமிழ் பாஸிஸ சிந்தனைக்கப்பால் சுதந்திர சிந்தனையுடன் செயற்பட நினைப்பவர்கள் கேவலமாக வையப்படுகிறார்கள். அரசியற் சாயம் பூசப்படுகிறார்ள் கலாநிதி ஞானசேகரனும் முருகபூபதியும் ,இந்த சிறுமைத் தனத்துக்கு அப்பாற்பட்ட சுதந்திர சிந்தனையுள்ள கௌரவமான படைப்பாளிகள்.;. எந்த அரசியல் வாதத்திற்கும்; விலைபோகாத தமிழ் உணர்வாளர்கள். காலத்துக்காலம் தங்கள் கருத்தை மாற்றும் சில இலங்கைக் 'காலநிதிகள்' அல்ல இவர்கள்.
தாங்கள் கொண்ட நல்ல பணிக்குத் தங்களிடமள்ள சிறு சேமிப்பையும் கொடுப்பவர்கள்.
இவ்வருடம் தைமாத முற்பகுதியில் கொழும்பு தமிழச்சங்கத்தில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில், இவர்கள் இருவரையம் இவர்களின் எழுத்தின்மூலம் தெரிந்துகொண்டு இவர்களின் முயற்சிக்க கௌரவம் கொடுக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான இலங்கை இளம் எழுத்தாளர்களை நேரிற் கண்டிருக்கிறேன்.
இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் மகாநாடு இலங்கைத் தமிழருக்குப் புதிய விடயமல்ல. இலங்கைத் தமிழர்கள் தாங்கள் போகுமிடமெல்லாம் தமிழ் வளர்க்கும் உணர்வுடன் பத்திரிகைகளையும் பள்ளிக் கூடங்களையும், தமிழ்க்கடவுள் முருகனுக்குக் கோயில்களையும்; கட்டுபவர்கள். இலக்கியச் சந்திப்புக்களை ஒவ்வொருவருடமும் ஐரோப்பாவின் நகரங்களில் நடத்துபவர்கள்.
முருகபூபதி அவுஸ்திரேலியரில் பல ஆண்டுகளாக இலக்கிய ஒன்று கூடல்களைச் செய்து கொண்டிருக்கிறார்.
சில கேள்விகள்;.
இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல் இலங்கையில் நடப்பதை எதிர்க்கும் இலங்கைப் பொறாமைக் கூட்டத்துடன் சேர்ந்து பாடும் தமிழக எழுத்தாளர்களிடம, நடக்கவிருக்கும் ஒன்று கூடலுக்கு ஆதரவளிக்கும் இலங்கை எழுத்தாளர்கள் கேட்கவேண்டிய கேள்விகள்:


1.கடந்த 60 வருடங்களாக எத்தனையோ சிங்கள அரசுகள் வந்து போயிருக்கிறன. அதுபற்றி எந்த தாக்கமுமின்றி தொடர்ந்து தமிழுக்குச்சேவைசெய்யும் கொழும்பு தமிழச்சங்கததின் விடயங்களை அரசியலானவை என்னவென்று சட்டென்று கண்டுபிடித்தீர்கள்;?;

2.கொழும்பு தமிழ்ச்சங்கம் மாதம்தோறும் ஒன்று கூடல்கள் வைக்கின்றன. அங்கு பல விடயங்கள் கலந்துரையாடப் படுகின்றன, அந்தக் கலந்துரையாடல்களின் ஒரு பரிமாணம்தான இந்த ஒன்று கூடலும். அது ஏன் உங்களுக்கு வயிற்றெரிச்சலைத் தருகிறது?

3.கொழும்பு தமிழ்ச்சங்கம் எங்கும் கிடைக்க முடியாத அரும் பெரும் பொக்கிஷங்களாகப் பல்லாயிரம் தமிழ் நூல்களைப் பராமரிக்கிறது அவை உங்கள் அனுமதியிலா பாதுகாக்கப் படவேண்டும்?

4.இலங்கையில் எப்போதும் பல தமிழக் கழகங்கள், நூற்றுக்கணக்கான கோயில்கள், இந்து மாமன்றங்கள் இருக்கின்றன. இலங்கைக்கோயிலில் இலங்கை வாழ் தமிழன் தமிழிற் தேவாரம் பாடினால் அதுவம் அரசியலா?

5.பாடல் பெற்ற தலங்களாகப் பல உயரிய சமயக்கோயில்கள் இருக்கின்றன, அங்கு நடைபெறும் சமய,கலைவிழாக்களிலும் கைபோடுவீர்களா?

6.உலகம் அறிந்த இலங்கை அறிஞர்களான விபுலானந்தருக்கு விழா வைக்க உங்கள் எதிர்ப்பு இருக்குமா?

7.இலங்கை கம்பன் கழக விழாக்கள் திறமையாக நடத்தப்படுபவை, அதற்கும் வசை நடக்குமா?

8.இலங்கையிலேயே உயரமான கோயிலாகத் தமிழரின் நுவரெலியா அனுமார் கோயில் இருக்கிறது, பூசைகள், பாடல்கள் பிரசித்தமானவை. தமிழொலி வான் பிளக்கும் அதுவும் அரசியலா?


இந்திய மேதைகளிடம் இலங்கைத் தமிழர் தயவுடன்கேட்டுக்கொள்வது,

இதுவரை நீ+ங்கள் எங்களுக்குச் செய்த உதவி;களுக்கு நன்றி, போதும் எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள.

தமிழை எங்கள் தாயென்று நினைத்துத் தயவு செய்து உதவுங்கள்:


நடக்கவிருக்கம் ஒன்று கூடலுக்கு நிதியுதவி தேவை. இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் உதவவேண்டும் இலங்கை வீரகேசரிப் பத்திரிகை 40.000 ரூபாய்களைத் தமிழுக்குத் (ஒன்று கூடலுக்கு) தானம் வழங்கியதாகக் கேள்விப்படடேன், மிகவும் நன்றி.; நான்கு நாட்கள் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்குப் பெரும் தொகை தேவை.

மகாநாட்டுக்கு வருபவர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவற்றை ஒழுங்கு செய்ய நிதி தேவை. அத்துடன் மண்டப வாடகை, போக்குவரத்து, மகாநாட்டு மலர் என்பனவற்றுக்கும் தாராள மனம் படைத்த தமிழரிடம் இந்த ஒன்று கூடல் அமைப்பாளர்கள் நிதியுதவியை எதிர்பார்க்கிறார்கள்.


புலம் பெயர்ந்த நாடுகளில் ஓரு பிறந்த தின விழாவுக்கு எவ்வளவோ செலவளிக்கும் நாங்கள் எங்கள் தாய்மொழிக்கு விழா எடுகக உதவி செய்யத் தயங்கக்கூடாது. எங்கள் நிதியுதவிகளை அனுப்பவேண்டியதற்கான தகவல்கள்;:

 
Tamil Writers association,

Hattan National bank,

Wellawatta Branch,

SWIFT Code ---HBLKLILX

Branch No: 7083009,

A/C No: 0090 10448539

கருத்துகள் இல்லை: