நேயர் 1: வணக்கம
அறிவிப்பாளர்: வணக்கம். உங்களது வீட்டின் தொலைக்காட்சி ஒலியை குறைத்து விட்டு பேசுங்கள் ( தனக்குள் எத்தனை தரம் சொன்னாலும் தொலைக்காட்சி சத்தத்தை குறைக்காதுகள் செவிடுகள்)
நேயர் 1: சிங்களவனுக்கு பாடம் படிப்பிக்கவேணும். அவன் ஒண்டும் தரமாட்டான். நாங்கள் யாரெண்டு காட்டவேண்டும். 13வது திருத்தச்சட்டம் எல்லாம் சரிவராது……. பேசிக்கொண்டே போ
அறிவிப்பாளர் குறக்கிடுகிறார் தயவு செய்து தலைப்புக்குள் வந்து கதையுங்கள்.
நேயர் 1. தமிழ்மக்களுக்கு தனிநாடுதான் தீர்வு. அப்பத்தான் சிங்களவன் திருந்துவான். 13வது திருத்தச் சட்டத்தால் அவன் திருந்தமாட்டான்.
அறிவிப்பாளர்: நன்றி நேயரே தங்கள் கருத்துக்கு நன்றி. அழைப்பில் இணைந்திருக்கும் அடுத்த நேயர் வணக்கம
நேயர் 2: இப்ப என்ன நிகழ்ச்சி போகுத
அறிவிப்பாளர். அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி. 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடிக் கொண்டிருக்கிறம்.
நேயர் 2: அப்படியா நான் வேறு ஏதொ நிகழ்ச்சியெண்டு வந்து விட்டன். பிறகு வாறன
அறிவிப்பாளர்: அழைப்பில் இணைந்திருக்கும் அடுத்தநேயர் வணக்கம்.
நேயர்;: 3 வணக்கம். தலைப்பை ஒருக்கா சொல்லமுடியுமோ. இப்பதான் வேலையால வந்தனான்.
அறிவிப்பாளர்: 13வது திருத்தச்சட்டம் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறோம
நேயர் 3: 13வது திருத்தச்சட்டம் கட்டயாம் கொண்டு வரப்பட வேண்டும். நியுமரலாஜில் 13வது நம்பர் ராசியான நம்பரில்லை. 13வது நம்பரில் கொட்டல்களில் றூம் வைக்கமாட்டார்கள். அப்படியிருக்க 13வது திருத்தச்சட்டம் கொண்டு வருவது முக்கியமானது. 12 அரைச்சட்டம் அல்லது 14வது சட்டம் கொண்டு வரவேண்டும். 13வது சட்டம் இருக்கும் வரை தமிழ்மக்களுக்கு நிம்மதியில்லை. நன்றி வணக்கம்.
அறிவிப்பாளர்: அழைப்பில் இணைந்திருக்கும் அடுத்த நேயர். வணக்கம
நேயர் 4: வணக்கம். என்னுடைய கருத்து முதற்கருத்துச்சொன்னவரின் கருத்துத்தான். என்ர மகன் 13ந்திகதியில்தான் பிறந்தவன். அவன் பிறந்தநாளில் இருந்து எனக்கு ஓரெ கஷ்டமாக இருக்கு. எனக்கே அந்த நம்பரில் கஷ்டமாக இருக்கென்றால் தமிழ்மக்களுக்கும் 13வது சட்டத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஓரெயடியாக 13வது சட்டத்தை எடுத்து விட்டால் நல்லது.
அறிவிப்பாளர்: அழைப்பில் இணைந்திருக்கும் அடுத்த நேயர். வணக்கம
நேயர் 5: வணக்கம் 13வது திருத்தச்சட்டத்தால் தமிழ்த்தேசியத்திற்கு எதுவித நன்மையுமில்லை. தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனம் ஒன்றுதான் தமிழ்மக்களுக்கு சரியான தீர்வு. தலைவர் கட்டாயம் ஒரு நாள் வருவார். துரொகிகளுக்கு சரியான பாடம் படிப்பிப்பார். 13வது திருத்தச்சட்டம் பற்றி கதைப்பவர் துரொகிககள். நீங்களும் துரொகிகள்.
அழைப்பு துண்டிக்கப் படுகிறத
அறிவிப்பாளர்: நல்லது நேயர்களே நேரம் நிறைவடைந்து விட்டது. எமது அரசியல் ஆய்வாளர் இறுதியாக தனது கருத்தை தெரிவிப்பார்.
அரசியல் ஆய்வாளர்: இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நேயர்கள் அனைவரும் நல்ல கருத்துக்களைச் சொன்னார்கள். இப்படியான ஆரொக்கியமான கருத்துக்கள் தொடர்ந்தும் வரவேண்டும். இந்த வானொலி ஒன்றுதான் பயனுள்ள அரசியல் கலந்துரையாடலை செய்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வானொலி ஊடாக அரசியல் கலந்துரையாடலை செவிமடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இன்று கலந்து கொண்ட நான்கு நேயர்கள் சாட்சி
தமிழ்மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைப்பதற்கு இப்படியான கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும். இன்று 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக தங்களுக்கு ஒரு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என கருதுகிறேன்.
வானொலி கலையகத்தில் அறிவிப்பாளர் நக்கீரனும் அரசியல் ஆய்வாளர் அறிவழகனும் வாராவாரம் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறார்கள். 10.00மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி 10.15க்கு ஆரம்பமாகிறது.
வணக்கம் நேயர்களே!
இன்றைய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம். எம்முடன் கலையகத்தில் அரசியல் ஆய்வாளர் அறிவழகன் இந்நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். நாங்கள் கதைத்து முடித்ததும் நேயர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
அறிவிப்பாளர். நேயர்களே! 13வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களுக்கு எந்தளவிற்கு பயனளிக்கும் என்பதை நாங்கள் விரிவாக பார்க்கவேண்டும். 13வது திருத்தச்சட்டம் எப்படி வந்தது. 12வது திருத்தச்சட்டம் சரிவராததால்தான் 13வது திருத்தச்சட்டம் வந்தது. 13வது திருத்தச்சட்டம் சரி வராட்டி 14வது திருத்தச்சட்டம் கொண்டு வரவேண்டும். இப்படியே ஒவ்வொரு சட்டத்த்தையும் திருத்த வேண்டும். தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுதோ இல்லையோ சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
அரசியல் ஆய்வாளர்: நல்ல கருத்தைச்சொன்னீர்கள். 13வது திருத்தச்சட்டம் என்றால் என்ன இழவு என்று தமிழ்மக்களுக்குத் தெரியாது. எங்களுக்கும் தெரியாது. தெரியாது எதுவோ அதைத்தான் நாங்கள் கதைக்கவேண்டும். இந்த நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களுக்கும் இது என்ன வென்றும் தெரியாது. ஆனால் அவர்களும் இதுபற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவேண்டும். அறிவிப்பாளர் சொன்னதுபோல 13வது திருத்தச்சட்டம் என்பது 12வது சட்டத்திற்கும் 14வது சட்டத்திற்கும் இடையே உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வந்தால் தமிழ் மக்களுக்கு நல்லத
அறிவிப்பாளர்: நேயர் அழைப்பை ஏற்படுத்தி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம். 012346253739
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக