தென்னாசியாவில் மிகச் சிறந்த நாடு இலங்கை
- நியூஸ்வீக்
உலக நாடுகளில் நாட்டு மக்களுக்கு சுகாதாரம் மற்றும் சிறந்த வாழ்க்கை வசதிகளை வழங்குவதில் உலகின் 66 ஆவது இடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் தென்னாசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைவிடவும் முதன்மையான இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. நியூஸ்வீக் (Newsweek) சஞ்சிகை அண்மையில் மேற்கொண்டுள்ள, THE WORLD'S BEST COUNTRIES என்ற கருத்துக் கணிப்பொன்றிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் 100 நாடுகளை பட்டியலிட்டுள்ள நியூஸ்வீக் சஞ்சிகை இந்தியாவுக்கு 78 ஆவது இடத்தையும், பங்களாதேசுக்கு 88 ஆவது இடத்தையும் பாகிஸ்தானுக்கு 89 ஆவது இடத்தையும் வழங்கியுள்ளது.
உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்தும் சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்;களைப் பெற்றுள்ளன. இப்பட்டியலில் அமெரிக்கா 11ஆவது இடத்திலும் ஜேர்மனி 12ஆவது இடத்திலும் பிரித்தானியா 14ஆவது இடத்திலும் சீனா 59ஆவது இடத்திலும் உள்ளது. இந்த 100 சிறந்த நாடுகளுக்கான பட்டியல் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தரம், பொருளாதார முன்னேற்றம், அரசியல் சூழ்நிலை என்ற வகையீட்டின் கீழ் பட்டியல் படுத்தப்பட்டிருந்தன.
பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் சகல துறைகளிலும் நாடுபூராகவும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. நாட்டில் நிலவும் அமைதி சூழலைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு விதித்திருந்த பயணத்தடைகளை நீக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
THE WORLD'S BEST COUNTRIES

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக