செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு ; 4 முறை கைது வாரன்ட்டுக்கு பிறகு மதானி

பெங்களூருவில் கடந்த 2008 ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஒரு வாரம் முகாமிட்டு கர்நாடக போலீசார் மதானியை இன்று கைது செய்தனர். முன்னதாக அளித்த பேட்டியில் மதானி இது தனக்கு எதிராக பின்னப்பட்ட அரசியல் சதி வலை என கூறியுள்ளார்.

பெங்களூரு குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 15 பேர் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கில் இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் 15 ம் தேதி கோர்ட் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் மதானியை கைது செய்ய முடியாமல் போனது . தற்போது 4 வது முறை பிடிவாரன்ட் உத்தரவு வந்தது . இன்று ( செவ்வாய்க்கிழமை ) தான் இறுதி நாள் என்றும் போலீசாருக்கு கோர்ட் கெடு விதித்திருந்தது.

இதனையடுத்து கர்நாடக போலீசார் கேரளாவில் முகாமிட்டனர். இவரது நடவடிக்கையை கண்காணித்தனர். மதானி கைது செய்யக்கூடுமோ என்ற காரணத்தினால் மதானி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடினர்.

ஆம்புலன்சில் வந்தாரா மதானி ? : இந்நிலையில் மதியம் அவர் கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார். கர்நாடக, கேரள் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சிறிய தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஆம்புலன்சில் வந்தாரா : இவர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் கிளம்பியதாகவும், இவர் ஆஸ்பத்திரியில் சேர முயற்சித்ததாகவும் , இந்நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட போது தனது ஆதவாளர்களுக்கு முத்தம் கொடுத்து கண்ணீர் விட்டார் மதானி.



திரும்பி வருவேனா : மதானி பேட்டி: முன்னதாக இன்று காலையில் நிருபர்களிடம் பேசி மதானி , இது எனக்கு எதிராக பின்னப்பட்ட அரசியல் சதி வலை ,  நான் ஒன்றும் அறியாதவன். பெங்களூரு சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் சரண் அடைய முற்பட்ட போது போலீசார் என்னை கைது செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். அந்த குற்றவாளிகள் யாரும் என்னுடன் பேசவில்‌லை என்றார் . மேலும் அவர் கூறுகையில்; நான் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டால் திரும்பி வருவேனா என்பது எனக்கு தெரியாது.

இப்போது கர்நாடகா என்று சொல்வார்கள், பின்னர் மும்பை, குஜராத், ஏன் உலக வர்த்தக மையம் வரை நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று கூட சொல்வார்கள் . இவ்வாறு மதானி கூறினார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் போதிய ஆதாரம் இல்லை என விடுதலையானார் .

முருகன் - கும்பகோணம்,இந்தியா
2010-08-17 16:55:42 IST
மதானி ஒரு தேச துரோகி.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டாலும் இம்முறை தப்பிக்க முடியாது.தண்டிக்கப்பட வேண்டிய துரோகியே...
VVD - ME,இந்தியா
2010-08-17 16:55:20 IST
He is not an innocent man. Madani was released from Prison first. Then removed from the case, because DMK was supporting him to threaten the witness. He is not an innocent as many people are trying to convey in Dinamalar....
ச.mani - vallanadu,இந்தியா
2010-08-17 16:52:44 IST
3 முறை பிடி வாரன்ட் கொடுத்தும் கைது செய்ய இவ்வளவு தயக்கம் ஏன் காவல்துறைக்கு?. இதிலிருந்து தெரிகிறது மதானிக்கு அரசியல் பலம் உள்ளது என்பது. வெட்கப்பட வேண்டியது மக்கள்தான். அவரு பேட்டி கொடுப்பாராம்? அரசியல் சதின்னு சொல்வாராம்,...
மோகன் - kmu,இந்தியா
2010-08-17 16:50:26 IST
இந்த முறை நீ தப்பமுடியாது .தவறு செய்தவன் தண்டனை அடைந்தே தீரவேண்டும் ....
Vaidyanathan - Hyderabad,இந்தியா
2010-08-17 16:47:51 IST
நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி பெரும் உத்தமன். இது இந்தியா. நிரூபிக்கப்பட்டாலும் ஜாலி தான்....
சேகர் - Sinagpore,சிங்கப்பூர்
2010-08-17 16:40:04 IST
என்றைக்குமே ஆயுதம் ஏந்தி யாருமே எந்த ஒரு பிரச்சினையிலும் வெற்றி பெற்றதாய் அதுவும் உள்நாட்டில்..நடக்கவே நடக்காது. இன்றைக்கு உங்களுக்கு வந்த "இதே" பயம்..திரும்ப வருவேனா என்கிற நிலையை அன்றைக்கு தன்னுயிர் இழந்தோர் நிலையை என்னிப்பார்த்தீரா? உங்களின் மீது குற்றம் இல்லை என்கிறபோது நீங்கள் கோவையில் பெற்ற அதே வெற்றியை பெறுவீர்கள். இந்தியா என்றைக்கும் நீதியில் "வழுவியதாய்" சரித்திரம் இல்லை..ஒரு சில அரசியல் வாதிகளின் பிள்ளைகள் விஷயத்தில் மட்டுமே விதி விலக்கு..கவலை படாதீர்கள் மதானி அவர்களே.. உப்பை தின்னவன் மட்டுமே தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்..நீங்கள் உப்பை தின்னாதபோது "இந்த வேண்டாத பயம்" எதற்கு? உங்களை கெடுப்பதே உங்களோடு கூட இருப்பவர்கள்தான் என்பதை இனியாவது உணருவீர்கள் என்றே நம்புகின்றேன்...
mannan - riyadh,சவுதி அரேபியா
2010-08-17 16:35:24 IST
பதவியை கையில் வைத்துள்ள காவிகள் அரசியலில் நிலைத்து நிற்பதற்கு குண்டை அவர்களே வைத்து வெடிக்க செய்து ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே நோக்கம். இது முழுக்க முழுக்க ஹிந்து தீவிரவாதிகளின் சதி வேலை....
கலை - தமிழ்நாடு,இந்தியா
2010-08-17 16:19:22 IST
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் போதிய ஆதாரம் இல்லை என விடுதலையானார் . பல வருடம் சிறைசாலையில் இருந்து ,குற்றம் செய்யாமல்,பின் விடுதலையானார் எனபது குறிப்பிட ஒன்று..... சந்தேகம் என்ற பெயரில் இப்படியா ? நிரபராதிக்கு நேர்ந்த கெதி இது ...........
ராமன் - ராம்நாடு,இந்தியா
2010-08-17 16:16:07 IST
இவன் என்ன சின்ன பையன் , இவனை விட பெரிய ஆளு கசாப் அவணே குற்றத்தை ஒப்புக்கொண்டும் தண்டனை கிடைக்கவில்லை. அங்கேயும் மத்திய அரசு ஆட்சி தான். எப்படியும் தப்பித்து விடுவான். இல்லையென்றால் சிறுபான்மையர் ஒட்டு கிடை
 

1 கருத்து:

THE WAY TO PEACE சொன்னது…

இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!


சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!