புதன், 18 ஆகஸ்ட், 2010
கட்சிகளில் காங்கிரஸ் பணக்கார கட்சியாக நம்பர்-1 இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் பணக்கார கட்சியாக நம்பர்-1 இடத்தில் உள்ளது. எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக பார்லிமென்ட்டில் விவாதம் நடந்து தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சிகள் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளன. மத்திய தகவல் ஆணையம் அளித்துள்ள தகவலின்படி காங்கிரஸ் கட்சி நம்பர்-1 இடத்தை பெறுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மொத்த வருமானம் ரூ.497 கோடியாகும். இதன் மூலம் அதன் சொத்து மதிப்பு ரூ.1518 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்துபடியாக பா.ஜ., ரூ.754கோடி, பகுஜன் சமாஜ் ரூ.358கோடி, மார்க் கம்யூ., ரூ.339கோடி, சமாஜ்வாடி ரூ.263கோடி, ராஷ்டிரிய ஜனதாதளம், தேசியவாத காங்., ரூ.109கோடி, இந்திய கம்யூ., ரூ.7கோடி என அடுத்த இடத்தில் உள்ளன. இது ஒவ்வொரு கட்சியின் சொத்து மதிப்பு மட்டுமே, எம்.பி., எம்.எல்.ஏ., சொத்து மதிப்பு அல்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக