காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடு பணிகளில் பெரும் நிதி முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. இது பற்றி மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் போட்டிக்கு மேலும் ஒரு பின்னடைவாக மத்திய அரசு நிறுவனங்கள் என்.டி.பி.சி, பவர்கிரிட் நிறுவனங்கள் காமன்வெல்த் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து திடீரென விலகி உள்ளன.
ரூ.50 கோடிக்கு ஸ்பான்சர் ஒப்பந்தம் செய்திருந்த என்.டி.பி.சி நிறுவனம் ஏற்கனவே ரூ.20 கோடி வழங்கி இருந்தது. மேற்கொண்டு ஸ்பான்சர்ஷிப்பை தொடருவதில்லை என்று முடிவு செய்திருக்கும் என்.டி.பி.சி. நிறுவனம், முன்பு வழங்கப்பட்ட தொகை எதற்காக, எப்படி செலவிடப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசின் அதிகாரிகள் மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதே போல் பவர்கிரிட் நிறுவனம் ரூ.10 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. இப்போது காமன்வெல்த் போட்டிக்காக எந்த தொகைலுயும் வழங்குவதில்லை என்று அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி மீதான ஊழல் புகார்களே, மேற்கண்ட இரு நிறுவனங்களும் பின்வாங்குவதற்கு காரணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக