வடக்கிலிருந்து முழுமையாக இராணுவ முகாம்களை அகற்றுவது சாத்தியமற்றது – பாதுகாப்பு செயளார்
வடக்கில் சிவில் நிர்வாகத்தை படிப்படியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால், வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது. இராணுவ முகாம்கள் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை போன்ற நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்படுகின்றன. முக்கியமாக வன்னியில் காடு மற்றும் கடற்பகுதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ தெரிவித்தார்.
மேலும், வன்னியில் மக்களினதோ தனியானரிதோ காணிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களையும் இராணுவ நிலையங்களையும் அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம். அதுவும் அரசாங்க கட்டடங்கள் உள்ள பகுதிகளிலும் இராணுவ நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் காலை 9.30 க்கு அமர்வு ஆரம்பமாகியது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஏனைய ஆறு உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண் டனர். பிற்பகல் நடைபெற்ற அமர்விலேயே பாதுகாப்பு செயலாளர் கலந்துகொண்டு சாட்சியமளித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது: எந்தளவு பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இலங்கை இராணுவம் தோற்கடித்துள்ளது என்பதனை இன்று அதிகமானோர் மறந்துவிட்ட னர். புலிகள் எந்தளவுக்கு பலமாக இருந்தனர் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த 2005 ஆம் ஆண்டு நான் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றபோது வடக்கின் பல பகுதிகளிலும் கிழக்கின் பல பகுதிகளிலும் புலிகள் நிலைகொண்டிருந்தனர்
30 ஆயிரம் உறுப்பினர்கள்
அப்போது புலிகள் அமைப்பில் 30 ஆயிரம் போராளிகள் காணப்பட்டனர். சிறுவர் போராளிகளும் காணப்பட்டனர். எங்கள் இராணுவத்தினரிடம் இருந்த அதேவகையான அனைத்து ஆயுதங்களும் அன்று புலிகளிடம் காணப்பட்டன. மேலும் தரைப் படை, வான்படை, கடற்படை என பல பிரிவுகள் இருந்தன. பல உபகரணங்களை வைத்திருந்தனர். தற்கொலை குண்டுதாகளையும் வைத்திருந்தனர்.

கனரக நவீன ஆயுதங்களை புலிகள் கொண்டிருந்தனர்
ஈராக்கில் உள்ள குழுக்கள் நடத்தும் தற்கொலை குண்டு தாக்குதலை ஒரே வருடத்தில் இலங்கையில் புலிகள் நடத்தியிருந்தனர். இலங்கையில் உற்பத்தி செய்யப்படாத நவீன ஆயுதங்களை புலிகள் வைத்திருந்தனர். எமது இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் புலிகளிடம் காணப்பட்டன. கனரக ஆயுதங்களை கொண்டிருந்தனர்.

152 மில்லி மீற்றர் 130 மில்லி மீற்றர் 120 மில்லி மீற்றர் என ஆயுதங்களை கொண்டிருந்தனர். இதுவரை காலம் பயன்படுத்தாத ஆயுதங்களும் புலிகளிடம் இருந்தன. தற்போது அவை கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றமை அனைவருக்கும் தெரியும். ஏவுகணைகளும் காணப்பட்டன. மேலும் புலிகள் சிவிலியன்களுக்கும் பயிற்சி வழங்கியிருந்தனர். அதற்கு மக்கள் படை என்று பெயரிடப்பட்டிருந்தது.
புலிகளின் இராணுவ நோக்கம்
அதாவது புலிகள் ஒரு சிறிய குழு அல்ல. மாறாக மிகவும் பலம்வாய்ந்த பயங்கரவாத அமைப்பாகும். மேலும் புலிகளிடம் கடந்த 2005 ஆம் ஆண்டு தெளிவான இராணுவ நோக்கம் காணப்பட்டது. அதனை நாங்கள் அறிந்துகொண்டோம். அவர்கள் முகாம்களை அமைத்த விதத்தைக்கொண்டு எவ்வாறான திட்டத்துடன் இருந்தனர் என்பதனை புரிந்து கொள்ள முடியும். அவர்களின் எதிர்கால இராணுவ நோக்கத்தை அன்று நாங்கள் கண்டுகொண்டோம்.

திருகோணமலையில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டிருந்தனர்
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். இந்நிலையில் புலிகள் திருகோணமலை கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருந்தனர். அதனூடாக இராணுவ தொடர்பாடலை துண்டிக்க எண்ணியிருந்தனர். எனினும் அதிஷ்டவசமாக அவர்களின் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தோற்கடித்தோம்.

தமிழ் தலைவர்களை கொலை செய்தனர்
இதேவேளை புலிகள் தமிழ் தலைவர்களையும் கொலை செய்தனர். அல்பிரட் துரையப்பா மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் உள்ளிட்ட அதிகளவான தமிழ் தலைவர்களையும் சிங்கள தலைவர்களையும் கொலை செய்தனர். சிவிலியன்களை அதிகளவில் கொலை செய்தனர். சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கொலை செய்தனர். இதுதான் விடுதலை புலிகளின் பின்னணியாகவிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக