செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும்

சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியதற்காக மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான துரைரெட்ணம் அத்துடன் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு கே.ஜெயராஜீ ஆகியோரை மன்றில் ஆஜராகுமாறு
இன்று மட்டக்களப்பு மஜிஸ்திரேட் உத்தரவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுபற்றி தெரியவருவதாவது.
கடந்த 11.08.2010 திகதி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரி பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் ஒரு கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடாத்தியது. இந்த பேரணியானது கல்லடியில் உள்ள பேச்சி அம்மன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.
அங்கு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடத்தில் மேற்படி சங்கத்தின் தலைவர் திரு கே.ஜெயராஜீ அவர்களால் பட்டதாரிகளின் கோரிக்கைகள் உள்ளடங்கிய ஒரு மகஜர் கையளிக்கப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டமானது சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டதாக கூறி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தபோதே மேலுள்ளவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: