வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஆட்கடத்தல் அதிகரித்திருப்பதாக கனடியப் பிரதமர, கடுமையான சட்டத்தை அமுல

எம்.வி.சன் சீ கப்பலில் கடந்த வாரம் வன்கூவரை வந்தடைந்த 492 தமிழர்கள் மீது முதலாவதுகட்ட விசாரணையை ஆரம்பிப்பதற்காக அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கனடியன் நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குடியேற்றவாசிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை செய்து விசாரணை நடத்தவேண்டுமென கனடியப் பிரதமர் ஸ்டீபன் கார்பர் கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் இந்த விடயத்தில் கணிசமான அளவு காணப்படுவதாகவும் நிதியீட்டுவதற்கான ஆட்கடத்தல் விடயங்களும் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது எல்லைகளின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பாளிகளாகும். அதேசமயம், ஆட்களை வரவேற்பதற்கும் வரவேற்காமல் இருப்பதற்குமான பொறுப்பு எம்மைச் சார்ந்தது என்று அவர் நிருபரிடம் கூறியதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. நாங்கள் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை கொண்டவர்கள். ஆனால், அதேநேரம் சாதாரணமான முறையில் அல்லாமல் ஆட்கள் இங்கு வருவது தொடர்பாக மக்கள் கவலையடைந்துள்ளனர் என்ற நான் நினைக்கிறேன். இந்த விடயம் கணிசமான அளவுக்கு பாதுகாப்புத் தொடர்பான கவலைகளுக்கு இட்டுச்செல்கின்றது என்ற பிரதமர் கார்பர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: