சனி, 21 ஆகஸ்ட், 2010

தஞ்சை பெரியகோயிலுக்கு ஆபத்தா?

புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின்
ஆயிரமாவது ஆண்டு விழா அரசு விழாவாக அடுத்த மாதம் 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில் கோயிலின் பிரம்மாண்ட கோபுரத்தின் தென்கிழக்கு பகுதியில் 40 அடி தூரத்தில் சுமார் 400 அடி ஆழத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆழ்குழாய் கிணறுதோண்டப்பட்டிருக்கிறது.
இந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டால்,  நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு,  அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த வெற்றிடம் ஏற்பட்டு,  அந்த வெற்றிடத்தின் காரணமாக மண் சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மண் சிதைவு ஏற்படும் போது இந்த பிரம்மாண்ட கோபுரத்தில் விரிசல் ஏற்படவும்,  வாய்ப்புள்ளது.இதனால் இந்த ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு
தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினரால் தஞ்சை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒடடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று
கோரிக்கை குரல் எழுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை: