இலங்கையர் ஜேர்மனியில் செனற்றராக தெரிவு
ஜேர்மனியில் வாழும் பிரபல கோடீஸ்வர வர்த்தகரும் ,இலங்கையருமான 70 வயது உடைய கிரு கரன் ஜேர்மனிய செனற்றர்களில் ஒருவராக நியமிக்கப்பட இருக்கின்றார். அந்நாட்டின் இராண்டாவது மிகப் பெரிய நகரமான ஹம்பேர்க் ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொருளாதார விவகாரங்களுக்கான செனற்றராக நியமிக்கப்பட உள்ளார்.
செனற்றர் அஸ்சல் ஜெடஸ்கோ என்பவரின் இடத்துக்கு இவர் நியமிக்கப்படுகின்றார். வெளிநாடு ஒன்றில் இருந்து குடியேற்றவாசியாக சென்ற ஒருவர் ஜேர்மனியில் செனற்றர் ஆகின்றமை இதுவே முதல் தடவை ஆகும். இவர் சுமார் 30 வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் குடியேறி இருந்தார்.
Written By ilankainet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக