வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

அய்யோ . ஆளை விடு! - நடிகையிடம் கோபித்துக் கொண்ட காதலன்!

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாப் பாடகியுமான பிரிட்னி ஸ்பியர்ஸுக்கும் சுத்தத்துக்கும் ரொம்ப தூரமாம்.

ஒரு கட்டத்துக்கு மேல் இதைச் சகித்துக்கொள்ளாத பிரிட்னியின் காதலன் ஜாஸன் ட்ரவிக், 'நாத்தம் சகிக்கல... முதல்ல சுத்தமா இரு... இல்லன்னா ஆளைவிடு' என்று கடுப்புடன் கூறிவிட்டாராம். அது மட்டுமல்ல, வாரக் கடைசியில் போகவிருந்த ஜாலி ட்ரிப்பையும் கேன்சல் செய்துவிட்டாராம்.

பிரிட்னியைப் பொறுத்தவரை, ஒரே உடையை தொடர்ந்து ஒரு வாரம் கூட அணிவாராம். தலை முடியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள மாட்டாராம். அட, உடம்புக்கு நல்ல வாசனைத் திரவியங்களையாவது பயன்படுத்துவாரா என்றால் அதுவும் இல்லையாம்.

'கையில் கிடைக்கும் ஏதாவது உடையை அணிவார்... அதையும் வாரத்துக்குமூன்று முறை கூட அணிவதுண்டு', என்கிறார்கள் அவரது தோழிகள்.

சமீபத்தில் உடலை பளிச்சென்று காட்டும் ஒரு உடையை வாங்கிய பிரிட்னி, அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக உபயோகித்தாராம். இதைப் பார்த்த அவரது காதலன் ஜாஸன், 'இந்த உடையின் நாற்றம் சகிக்கவில்லை. இத்துடனே நீ வருவதாக இருந்தால் ஆளை விடு... நீ மட்டும் போய் வா. இனி நீ சுத்தமாக இருந்தால் மட்டுமே நான் உடன் வருவேன்' என்று கடுப்பாகக் கூறிவிட்டாராம்.

'இத்தனை வருஷப் பழக்கத்தை எப்படி ஒரே நாளில் மாத்திக்கிறது' என்று சிணுங்களோடு, குளித்துவிட்டு, வேறு உடை அணிந்து கொள்ள சம்மதித்தாராம். இந்த மாதிரி தர்மசங்கடமான காரணங்களுக்காக காதல் முறிந்து போவதை அவர் விரும்பாததும் இந்த மன மாற்றத்துக்கு முக்கிய காரணமாம்!

கருத்துகள் இல்லை: