கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற் றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்றுமுன்தினம் பாதுகாப்புச் செயலாளர் அளித்த சாட்சியம் பல விட யங்களைத் தெளிவுபடுத்துவதாக அமைந்திருந்தது.
வட மாகாணம் இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப் படுகின்றது என்றும் அங்கு இராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன என்றும் சிங்களக் குடியேற்றம் இடம் பெறுகின்றது என்றும் எதிரணியினர் குற்றச்சாட்டு களை முன்வைக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடிக்கடி இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றது. சில பத்திரிகை களிலும் இவ்வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.
அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வமாகவும் ஆணித்தர மாகவும் மறுப்பு வெளிவராத நிலையில், குற்றச்சாட்டுக ளில் உண்மை இருப்பதாக மக்கள் கருதத் தொடங்குவர். இக்குற்றச்சாட்டுகளில் ஏதாவது உண்மை இருப்பின் அது ஜனநாயக பெறுமானங்களுக்கு முரணானது. நாட்டின் ஒரு பகுதியில் மாத்திரம் இராணுவ நிர்வாகம் நடைபெறுவதும் ஏதேனுமொரு பிரதேசத்தின் சனத்தொகை விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும் வகையில் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பாரபட்சமான செயற்பாடுகள்.
எதிரணியினரின் குற்றச்சாட்டுகளில் சிறிதளவேனும் உண்மை இல்லை என்பதைப் பாதுகாப்புச் செயலாளர் தனது சாட் சியத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். வட மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொறுப்பு பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவத்தினர் தங்குவதற்கான ‘பராக்’குகள் அமைக்கப்படுகின்றனவே யொழிய இராணுவக் குடியிருப்புகள் அங்கு அமைக்கப் படவில்லை என்றும் பொது மக்கள் தங்கள் சொந்த இட ங்களுக்குச் செல்ல முடியும் என்றும் பாதுகாப்புச் செயலா ளர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். தனியார் காணிக ளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருக்கின்றார்.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் அரச படை கள் வெற்றியீட்டியதைச் சாதாரண நிகழ்வாகப் பார்க்க முடி யாது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் புலிகளின் செய ற்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களும் இழந்த உரிமைகளும் ஏராளம். இந்தத் துயரங்களுக்கு முடிவு கட்டி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக் குத் திரும்புவதற்கான சூழ்நிலையை அரச படையினரின் வெற்றி ஏற்படுத்தியிருக்கின்றது. இது இழக்கக் கூடாத வெற்றி. நிரந்தரமாக நிலைக்க வேண்டிய வெற்றி.
புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்த போதிலும் அவர்களின் பிரசன்னம் முற்று முழுதாக இல்லாது போய்விட்டது என கூற முடியாது. எனவே தான் இராணுவத்தின் பிரசன்னம் சில காலத்துக்கு அவசியமாகின்றதென்றும் பொது மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவத்தினரின் பிரசன்னம் படிப்படியாக நீங்கும் என்ற உறுதி மொழியைப் பாதுகாப் புச் செயலாளர் தனது சாட்சியத்தில் அளித்துள்ளார்.
வடக்கு மக்களுக்கு இன்று பிரதானமாகத் தேவைப்படுவது நீடித்து நிலைக்கும் நிம்மதி. மூன்று தசாப்த கால இருண்ட யுகம் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக் கூறுகளை முற்றாக இல்லாதொழிப்பதன் மூலமே நீடித்து நிலைக்கும் நிம்மதியைப் பெற முடியும். அதற்காகவே இராணுவப் பிரசன்னம் சிறிது காலத்துக்குத் தேவைப்படுகின்றது என்ற அரச தரப்பு வாதத்தில் நியாயம் இல்லாமலில்லை.
வட பகுதி மக்களின் நிலையான நிம்மதிக்குப் பொது மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் இல்லாதிருப்பது எவ்வ ளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவம் பெறுகின் றது மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான சாத்தி யக் கூறுகள் இல்லாதிருப்பது. இவையிரண்டும் நிம்மதிக் கான முன்தேவைகள்.
பின்னைய முன்தேவை விரைவில் நிறைவேறி மக்களுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த் தனை.