சனி, 21 ஆகஸ்ட், 2010

ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரத்தை சேமித்து

மங்கலகிரி: நாட்டில் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கம் அடைந்து கவலை தருகின்ற நிலையில் ஒரு நீதிபதி, ஒரே நாளில் 111 வழக்குகளை பைசல் செய்திருக்கிறார் என்றால் உண்மையிலே பாராட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. சமீபத்திய நீதி துறையின் சாதனையாக இந்த நீதிபதி செயல்பட்டுள்ளார்.

காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பர் இதனால் இந்திய அளவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் மற்றும் சட்ட அமைச்சகம் அவ்வப்போது தமது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த கனவின் துளி அளவிலான செயலாக்கத்தை ஆந்திராவில் உள்ள நீதிபதி ஒருவர் வடிவம் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி. இவர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளை முடிக்க திட்டமிட்டார். இதன்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கும் படியான நீண்ட காலம் பெண்டிங்கில் உள்ள கேஸ் கட்டுக்களை தூசி தட்டி கோர்ட் மையத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதன்படி தூங்கி இருந்த கேஸ் கட்டுக்கள் நீதிபதி மேஜையில். ஒவ்வொரு வழக்காக விவரத்தை கேட்டு முடிக்கும் தருவாயில் உள்ள 111 வழக்குகள் மீது தீர்ப்பளித்து பைசல் செய்தார்.

இவர் வழங்கிய தீர்ப்புகள் எல்லாம் அபராதம் வழங்கியதாகவே இருந்தது. அதாவது திருட்டு, தெருச்சண்டை, மற்றும் சாலை விபத்து என111 வழக்கில் யாருக்கும் ஜெயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 78 வழக்குகளில் இவர் விதித்த அபராதம் மூலம் ரூ. 99 ஆயிரம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது . மொத்தம் 33 பேர் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். ஏனெனில் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொணடு திருந்துவதாக கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கினார் நீதிபதி. பொது தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்தை அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.



இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் : நீதிபதியாக இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த கோர்ட்டில் நிலுவையாக இருந்த ஆயிரத்து 850 வழக்குகள் தற்போது ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளதாம். இந்த மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதியாக கடந்த மே மாதம் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் சஞ்சீவரெட்டி புகழ்ந்துள்ளார்.

இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 80 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்னர். ஆனால் இந்த நீதிபதி 111 வழக்கை முடித்திருக்கிறார் என்பது நீதி துறைக்கு பெரும் வரப்பிரசாதம் .

தாமரைச்செல்வன் - தோஹா,கத்தார்
2010-08-21 14:24:08 IST
நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி உங்கள் சேவை வளர்க. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...
ஷிஹா - குவைத்,இந்தியா
2010-08-21 14:18:12 IST
வாழ்த்துக்கள்.....
Brindasri S - Coimbatore,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 13:52:23 IST
Our Best wishes to you. Let all other people learn from you and make India, the best country in the world......
சுவாமிநாதன்.S - CHENNAI,இந்தியா
2010-08-21 13:48:13 IST
REALLY GREAT!!!!!!!! TRY IMPLIMENT "MUDALVAN" FILM SYSTEM EVERY WHERE....
siva - pune,இந்தியா
2010-08-21 13:33:48 IST
கும்பிடுறேன் சாமி ! நல்லா இருங்க!...
Tamilan - Chennai,இந்தியா
2010-08-21 13:18:54 IST
முடியும் உங்களால் ஆனால் செய்ய மாட்டீர்கள் ..... இருந்தாலும் நன்றி !!! நீதிபதி அவர்களே ...... முன்பே செய்திருக்கலாம் .... இப்போவாவது கண் திறந்தீர்களே....
ஹே ராம் - பெங்களூரு,இந்தியா
2010-08-21 13:13:36 IST
இந்த நீதிபதி திருவாளர் சத்யநாராயணா மூர்த்தி-ஐ உயர் நீதி மன்றத்தில் தூக்கி, பெரும் பதவியில் போடவேண்டும் .. மின்னல் வேகத்தில் தீர்ப்புகள் வழங்கி சாதனை புரிவார் .. அரசு மற்றும் நீதி மன்றங்கள் இவரை உரிய முறையில் பாராட்ட வேண்டும் .....
M . துரைவேல் - Tiruchirappalli,இந்தியா
2010-08-21 12:53:37 IST
Hearty Congratulations to the Judge of Junior Civil Court of Guntur Mr SathiyaNarayana Murthy for his endeavour in clearing the cases . Keep it up and many more achievements in closing the old cases wherever you are assigned. It is appealed to all the Jury in all courts as well as the Junior , Senior advagates to take a vow in expedeting the cases to make the proceedings in a faster way to bring down the pending cases in the respective area so that the public also benefitted in getting the faster Judgement .. M Duraivel , Tiruchirappalli....
அன்புச்செல்வன் - லாஸ்ஏஞ்சலஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-21 12:43:42 IST
நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி போல நிறைய நீதிபதிகள் நம் நாட்டிற்க்கு தேவை. இவரைப்போல அனைத்து நீதிபதிகளும் நடந்து கொண்டால் அப்பாவி மக்கள் கோர்ட கேஸ் என அழைந்து அல்லல் படுவது குறையும். வாழ்த்துக்கள்!...
அனுசுயா - சென்னை,இந்தியா
2010-08-21 12:43:41 IST
வாழ்த்துக்கள் , இதேபோல் அனைவரும் செயல்பட வேண்டும்...
aaaa - chennai,இந்தியா
2010-08-21 12:41:18 IST
வெரி குட்...
SR George Fernandaz - DubaiUAE,இந்தியா
2010-08-21 12:27:34 IST
Wow .........! Realy great . I am salute you. If we have like this 10௦ Judges in our India , we can finish all pending cases with in few months ... Realy good .. and thanks Mr. Sathyanarayana Moorthy. S R George Fernandaz Dubai ....
p.manimaran - VAYALAIKEERANUR,இந்தியா
2010-08-21 12:23:13 IST
இவர் ஒரு முன்மாதிரி , சோம்பேறி நீதிபதிகள் திருந்துவார்களா...
ரபியுதீன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 12:22:21 IST
வாழ்த்துக்கள் சத்யநாராயண மூர்த்தி. உங்களைபோல் உள்ள நீதிபதிகள்தான் இந்திய நாட்டிற்கு முதல் தேவை....
சூரன் - மதுரை,இந்தியா
2010-08-21 12:18:56 IST
இருவருக்கு சண்டை என்றால், வழக்கு நடக்கிறது. தவறு நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அபராதம் போட்டு அரசு வசூலிக்கிறது. பாதிக்கப்பட்டவனுக்கு என்ன கிடைக்கும். அந்த அபராதம் அவனுக்கு அல்லவா போக வேண்டும்....
வை சுந்தரமகாலிங்கம் - சூளைமேடுசென்னை,இந்தியா
2010-08-21 12:14:52 IST
இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களுகு எல்லாம் ஏன் உடனடி முடிவு எடுக்க கூடாது. அப்படி இருந்தால் வழக்கு தேக்கம் இருக்காது தானே....
snatarajan - chennai,இந்தியா
2010-08-21 12:02:30 IST
இந்த ரூட்டில் , இன்டியா முழவதும், ஆயிரம் நீதிபதிகள் வேலை செய்தால், எல்லா கேஷ்களும் ஒரு வருடத்தில் முடிக்கலாமே !!...
ராஜேஷ் குமார் - பரமக்குடி,இந்தியா
2010-08-21 11:57:06 IST
இந்த மாதிரி நீதிபதிகள் இருந்தால் வாய்தா என்பதற்கு வேலை இல்லை....
மதன் - UAE,இந்தியா
2010-08-21 11:55:05 IST
எச்செல்லேன்ட்! Thiru. முர்த்தி. இந்தியா நீட்ஸ் பெர்சன் லைக் யு....
vasu - hsinchu,தாய்லாந்து
2010-08-21 11:42:18 IST
நன்றிகள்.....சார். இதேபோல் எல்லோரும் செயல் பட முன் வாருங்கள் அதிகாரிகளே......அப்பதான் நம் நாட்ட முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்..... இவண், த.வாசு....
சோமன் - தோஹா,கத்தார்
2010-08-21 11:33:01 IST
அய்யா சாமி, உங்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ? தினமலர் படிப்பீங்களோ, மாட்டீங்களோ தெரியாது... ஆனா மனசார குளிர்ந்து கைய தலைக்கு மேல தூக்கி கும்புடுறேன் சாமி. நீங்க இன்னும் பல வருஷம் நல்லபடியா இருந்து நல்ல தீர்ப்ப குடுத்து, உங்க பாதைல இன்னும் பலரை கொண்டு வாங்கய்யா..பாரத மாதா நல்ல புள்ளைங்களையும் பெத்திருக்காப்பா. சந்தோசமா இருக்கு படிக்கவே....

கருத்துகள் இல்லை: