இந்த ஆண்டும் இந்தியாவின் 64 சுதந்திர தினத்தை கொடியேற்றிக் கொண்டாடினார்.
இந்த நாளில் ஏழைப் பெண்களுக்கு புடவைகள், ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் என ஏராளமான உதவிகளை வழங்கினார்கள் அவரது ரசிகர்கள்.
இதற்கான நிதியை கமல்ஹாஸன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரசிகர்கள் மாணவர் நாப்கின் இயந்திரத்தை வழங்கினர். கர்நாடக ரசிகர்கள் குளிர்பதனப் பெட்டியையும், பாண்டிச்சேரி ரசிகர்கள் இரு ஏழைகளுக்கு தலா ரூ 15000 உதவித் தொகையும் வழங்கினார்கள்.
வட சென்னை ரசிகர்கள் இரு மாணவர்களுக்கு தலா ரூ 10000 வழங்கினர். ராசிபுரம் ரசிகர்கள் 330 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினர்.
ஜாஸ்மின் என்ற மாணவியின் மேற்படிப்புக்கு ரூ 10000 வழங்கினர் திருநெல்வேலி ரசிகர்கள்.
காது கேளாதோர் பள்ளியில் தண்ணீர் தொட்டி அமைக்க புதுக்கோட்டை ரசிகர்கள் ரூ 5000 வழங்கினர். கிழக்கு காஞ்சிபுரம் ரசிகர்கள் இலவச தையல் எந்திரம் மற்றும் புடவைகள் வழங்கினர்.
பதிவு செய்தது: 16 Aug 2010 6:36 am
இவனும்,ரஜினியும் சொந்தப்பணத்தை தான, தர்மம் பண்ணமாட்டானுங்க... ஆனா, இந்தியாவுக்கே ரோல் மாடல் மாதிரி act உடுவானுங்க...
பதிவு செய்தது: 16 Aug 2010 3:53 am
நற்பணிகள் செய்யறது நல்ல விசயம்தான் தப்பே இல்ல!ஆனா இங்கே உதவி பெற்ற ஏழை எளியவர்களை விட , பரம ஏழையா இருக்கும் ரசிகர்கள் உதவி செய்தவர்களில் இருக்கிறார்கள்! வீட்ல அடுப்பே புகைய வழி இல்ல ஆனா சொந்த காச செலவு செய்ஞ்சு கமல் ரசிகன் என்று பந்தா பண்ணுற கூட்டம் அது! கமல் சார் நீங்கதான் கோடிகணக்கில சம்பாதிக்கிறிங்களே,உங்க சொந்த பணத்தில் இதை ஏன் செயஞ்சிருக்க கூடாது ? கஷ்டப்படுறது ஏமாளி ரசிகன் கவர்ச்சியா போட்டோல சிரிக்குறது நீங்களா?உங்க கவர்ச்சி தொழிலுக்கு பின்னாடிபல ஏழை ரசிகன் குடும்ப கண்ணீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக