செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

திரும்பி வந்து விட்டதால் ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் 2வது கட்ட

குக்கிங் வித் ஸ்டெல்லா படத்திற்காக போய் விட்ட ஷ்ரியா திரும்பி வந்து விட்டதால் ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு  ரவுத்திரம். இப்படத்தில் அவருக்கு ஜோடி போடுகிறார் ஷ்ரியா. இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் தொடங்கிய நிலையில், குக்கிங் வித் ஸ்டெல்லா, டான் சீனு, சிக்குபுக்கு ஆகிய படங்களுக்குப் போய் விட்டார் ஷ்ரியா. இதனால் ரவுத்திரம் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இத்தனைக்கும் ஷ்ரியா இல்லாமலேயே முதல் கட்டப் பிடிப்பை முடித்துள்ளனர்.

தற்போது 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இப்போதாவது வர முடியுமா என்று ஷ்ரியாவிடம் கேட்க, ஓ.கே சொல்லி விட்டாராம் ஷ்ரியா. இதையடுத்து அவரும், ஜீவாவும் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறார்களாம்.

கருத்துகள் இல்லை: