செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

லாலு முதல்வர், பஸ்வான் தம்பி துணை முதல்வர்: பீகார் தேர்தலுக்கு கூட்டணி

புதுடில்லி:பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணி வென்றால், பீகார் முதல்வராக லாலு இருப்பார். துணை முதல்வர் பதவி பஸ்வான் தம்பிக்கு தரப்படும். பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிகளில் முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள் ளன. 

லோக் ஜனசக்தி கட்சிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே கூட்டணி அமைப்பதில் இழுபறி நிலவி வந்தது. இதையடுத்து, லோக் ஜனசக்தி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் - லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதுகுறித்து லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது: இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிடும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவியேற்பார்.

எங்கள் கட்சியின் பீகார் மாநில தலைவர் பசுபதி குமார் பராஸ் (பஸ்வானின் இளைய சகோதரர்) துணை முதல்வராக பதவியேற்பார்.கண்டிப்பாக இந்த கூட்டணி, தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் சேரப் போவதாகவும், நான் மத்திய அமைச்சராகப் போவதாகவும் வெளியான தகவல்கள் தவறானவை. இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.  லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், "எங்கள் கட்சியின் ஆட்சி நடந்தபோது, கட்சியில் இருந்த சிலரால் கெட்ட பெயர் ஏற்பட்டது. இனிமேல், அதுபோன்ற நபர்களை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம்' என்றார்.

மணி.வி - Chennai,இந்தியா
2010-08-17 07:05:40 IST
லாலு முதல்வர், பஸ்வான் தம்பி துணை முதல்வர் சரி...!அப்ப ராப்ரி தேவி? ஒ !! அடுத்த பிரதமரா?...
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்.யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-08-17 06:32:34 IST
எல்லா மாநிலங்களிலும் குடும்ப உறுப்பினர்களே தீவிர கட்சி தொண்டர்களாகவும் மந்திரியாகும் தகுதியோடும் இருப்பது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு பெருமையே.எவ்வளவு சீனியர் ஆனாலும் கட்சியில் தலைமை பார்த்து கொடுப்பதை மரியாதையாக ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை [அன்பழகன் ]அடைந்து விடுகிறார்கள்...ராஜாக்களை ஒழித்து விட்டு மன்னர் மானியத்தை ஒழித்த இந்திரா வுக்கு வாழ்த்து சொல்லி மகிழும் நமக்கு இந்த புதிய அவதார மன்னர்களை எப்படி தவிர்ப்பது ? அடுப்படியில் இருந்த மனைவியை ஒரே நாளில் முதல்வர் ஆக்கிய லல்லு திறமையே திறமை;;கட்சியில் வேறு சீனியர்களே இல்லையா ? கேட்க வேண்டிய ஊமைகள் செவிடர்களும் ஆகி விட்டனரோ ?...
கலா - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-08-17 02:40:11 IST
ஆமாம் லாலு, கெட்ட பேர் கொடுத்தவங்கள் லிஸ்ட்: ராப்ரி, லாலு மற்றும் உறவினர்....
C Suresh - Charlotte,யூ.எஸ்.ஏ
2010-08-17 00:31:48 IST
போயும் போயும் பாஸ்வான் கட்சியோடு சேரணுமா... தனியாகவோ காங்கிரஸ் ஓடவோ கூட்டு சேர்ந்துருகலாம்....

கருத்துகள் இல்லை: