வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

சம்பள உயர்வு ; போதாது என கூச்சல் போடும் எம்.பி.,க்கள்

அதிகரிக்குமா, அவ்வளவு கிடைக்குமா, இவ்வளவு கிடைக்குமா என்ற எம்.பி.,க்களின் சம்பள ஏக்கம் இன்று முடிவுக்கு வந்தாலும், இது போதாது என ரூ. 80 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என எம்.பி.,க்கள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். வீதிகளில்தான் சம்பள உயர்வு ‌கேட்டு போராட்டம் நடக்கும். லோக்சபாவில் மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய சம்பளம் உயர்வு கேட்டு கோஷம் எழுப்பியது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது என பார்லி., நடவடிக்கையை பார்க்க வந்தவர்கள் முகம் சுளித்தனர்.
நாட்டில் உள்ள எம்.பி.,க்களுக்கு மாதம்தோறும் ரூ. 16 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்.பி.,க்களை விட, அரசு செயலர்கள், கூடுதல் சம்பளம் வாங்குவதாகவும், இந்த சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் எம்.பி.,க்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தலாமா என பரிசீலிக்கப்பட்டது. இதற்கு நாட்டின் பொருளாதார நிலையை எடுத்துக்காட்டி ஒரு சில அமைச்சர்கள் இவ்வளவு சம்பளம் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சம்பளம் கணிசமாக உயர்த்தி வழங்கிட அமைச்சரவை இன்று ( வெள்ளிக்கிழமை ) ஒப்புதல் வழங்கியது.
இந்த சரத்துக்கள் கொண்ட மசோதா இன்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்படும். இதன்படி எம்.பி.,க்களுக்கு 50 ஆயிரமாக ( பழைய சம்பளம் ரூ. 16 ஆயிரம் ) உயர்த்தப்படுகிறது. நாள்தோறும் உள்ள படி ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாகவும், தொகுதி நிதி ரூ. 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். எம்.பி.,க்கள் சம்பளம் 300 சதவீதம் ( மும்மடங்கு) உயர்ந்துள்ளது.

பென்சன் தொகை 20 ஆயிரம் : வாகனம் வாங்கும் வகைக்கு வட்டியில்லாத கடன் ஒரு லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்படுகிறது. , பென்சன் தொகை ரூ 8  ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. எம்.பி.,க்கள் பயணம் செய்யும் பகுதிக்கு வழங்கும் பயணத்தொகையும் கி.மீட்டருக்கு 13 ல் இருந்து 16 ரூபாயாக உயர்த்தப்படும். ரயில் பயணத்திற்கு எம்பி.,க்களின் மனைவிக்கும் இலவச சலுகைகள் வழங்கப்படுகிறது. ரயில்வேயில் ஏ.,சி.,வசதி ‌கொண்ட ரயில் பெட்டியில் இலவச பயணம் வேறு.
இதுபோல அணு ஆயுத விபத்து இழப்பீடு மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதவில் அணு ஆயுத ஆலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் இழப்பீடு வழங்குவது, மற்றும் நிறுவனங்களுக்குரிய கட்டுப்பாடுகள் அடங்கிய சரத்துக்களை கொண்டது.
இதில் இழப்பீடு தொடர்பான விஷயத்தில் பா.ஜ.,வின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக பெரும் மகிழ்ச்சியை தரவில்லை. என்றும் , மார்க்., கம்யூ., பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி இன்னும் மாற்றங்கள் தேவைப்படுகிறது என கூறியுள்ளார். எடுத்துக்காட்டுக்கு போபால் விகாரத்தை விளக்குகிறார் இவர்.

சம்பள உயர்வு போதாது : சம்பள உயர்வு தங்களுக்கு போதாது என்று எதிர்கட்சி எம்.பி., க்கள் தங்களுக்கு வழங்கிய சம்பளம் போதாது என்று லோக்சபாவில் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பளம் 5 மடங்காக உயரும் என எதிர்பார்த்ததாகவும், இது போதாது என்றும் குரல் எழுப்பினர். 80 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்றும் குரல் எழுப்பினர் இதனால் சபை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அகாலிதள உறுப்பினர்கள் காஷ்மீரில் சீக்கியர்கள் மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். இது தொடர்பாக விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் , குழப்பம் நிலவியது. இதனைத்தொடர்ந்து லோக்சபா 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு அவை துவங்கியதும் மீண்டும் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார்.

சம்பள உயர்வு கேட்பவர்கள் யார் ? : தற்போது மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள ரூ. 50 ஆயிரம் சம்பளம் போதாது என பா.ஜ., இல்லாத அரசில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று லோக்சபாவில் சம்பளம் அதிகம் கேட்டு ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகள் வருமாறு: சமாஜ்வாடி (முலாயம் சிங்), ராஷ்டிரிய ஜனதாதளம் (லாலு பிரசாத் ) பகுஜன்சமாஜ் கட்சி (மாயாவதி) , ஐக்கிய ஜனதாதளம் ( நிதீஷ்குமார் ), சிவசேனா (பால்தாக்ரே) , அகாலிதள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்.பி.,க்கள் சம்பள உயர்வு தொடர்பாக பார்லி., விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பின்பற்றப்படவில்லை. சம்பள உயர்வு பார்லிமென்ட் மற்றும் எம்.பி.,க்களை இழிவுப்படுத்தும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். பா.ஜ., மட்டும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் ராஜ்குமார் - வேளச்சேரி,இந்தியா
2010-08-20 16:58:23 IST
நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதற்கு மக்கள் பணம் தேவை (சம்பளம் தேவை)...
INDRAJIT - Benares,இந்தியா
2010-08-20 16:51:28 IST
இவன் வேலையே பார்லிமெண்டில் மக்கள் பிரச்னையை எழுப்பிக் கேள்வி கேட்பதுதான். அதற்கும் ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று லஞ்சம் வாங்குகிறான். அடுத்தவன் மனைவியைத் தன மனைவி என்று சொல்லி அயல் நாட்டுக்குக் கூட்டிச் சென்று தவறான வழிகளில் சம்பாதிக்கிறான். இன்னும், அரசே தொகுதி வளர்ச்சிக்கென்று ஒதுக்கிய பணத்தைத் தன தொகுதிக்குச் செலவிடவே லஞ்சம் வாங்குகிறான். இது தவிரவும், லைசென்ஸ், பெர்மிட் வாங்கிக் கொடுப்பதிலும் லஞ்சம் பெறுகிறான். இந்தக் கள்ளப் பண வரவுக்கெல்லாம் என்ன கணக்கு. இந்தியா முழுவதும், அடுத்த தேர்தலில் ஓட்டுக் கேட்க வரும் இவர்களை மக்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து சாத்தித் தொகுதிக்கு உள்ளேயே வர முடியாதபடிச் செய்தால், ஒரு வேளை, நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வர வழி கிடைக்கும் ! தவறான மனிதர்களின் பின் சென்ற தலைமுறைத் தவறைத் திருத்தியே ஆகவேண்டியது, இன்றைய தலைமுறையின் தலையாய கடமை ! கலகம் பிறந்தால்தான் ஞாயம் பிறக்கும் ! இனி ஓட்டுப் போட்டு ஆட்சியை மாற்றுவதால் மட்டுமே ஒரு நன்மையையும் பெறமுடியாது. அப்படிச் செய்தால் ஒரு அயோக்கியன் சென்று அடுத்த வருவான். அவ்வளவே. கையூட்டுப் பெற்று ஓட்டுப் போடுவோரை வைத்துக் கொண்டு, இந்த நல்ல காரியத்தைச் செய்யவும் முடியாது. எனவே, மேற்சொன்னது ஒன்றே சிறந்த வழி!...
ஜிலேபி and ஜிலேபி - நிலக்கோட்டை,இந்தியா
2010-08-20 16:50:09 IST
அய்யா இந்த கணக்கெடுப்ப கவனமா பாருங்க ..... Govt. Concessions for a Member of Parliament (MP) Monthly Salary : 12,000 Expense for Constitution per month : 10,000 Office expenditure per month : 14,000 Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km) Daily DA TA during parliament meets : 500/day Charge for 1 class (A/C) in train: Free (For any number of times) (All over India ) Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A ..) Rent for MP hostel at Delhi : Free Electricity costs at home : Free up to 50,000 units Local phone call charge : Free up to 1 ,70,000 calls. TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [ i.e. 2.66 lakh/month] TOTAL expense for 5 years : 1,60,00,000 For 534 MPs, the expense for 5 years : 8,54,40,00,000 (nearly 855 crores) And this is the present condition of our country: 855 crores could make their life livable !! இது எப்படி இருக்கு ?????...
அம்பானி - n,இந்தியா
2010-08-20 16:36:58 IST
sukumar - பொள்ளாச்சி,இந்தியா ....நீர் எழுதினது சரி அனால் " எம்பிக்கள் முழு நாளும் மக்கள் பணியாற்றுகின்றனர்" என்று எழுதி உள்ளேரே ...இதை படிக்கும் MP ஏ தூக்கு போட்டு செத்து போவான் .............
vijay - chennai,இந்தியா
2010-08-20 16:36:02 IST
விலைவாசி பத்தி பேசல . மக்கள் பத்தி பேசல . ஆனா உனகு சம்பளம் கேடு ./...
இம்சைஅரசன் - ஈரோடு,இந்தியா
2010-08-20 16:32:01 IST
அடங் கொய்யாலே, இவனுக லோக் சபாவ நடத்தவிடாம பண்ணுறதுக்கு ஐம்பதயிரமா! ஏன்டா உங்களுக்கு சம்பளமே வேஸ்டு, இதுல சம்பள உயர்வு வேறைய? நியாயப்படி பாத்தா, நீங்கதான்டா பணம் கொடுக்கணும் அரசு பணத்த இப்படி வேஸ்டு பண்ணுறதுக்கு, பிக்காளிப்ப் பசங்களா....
2010-08-20 16:27:10 IST
செல்லாது....செல்லாது...வேலைவெட்டி இல்லாத, பார்லிமென்டுக்கே போகாத, அப்படியே போனாலும் அங்கே கூச்சலும் கும்மாளமும் போடுற, மக்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு(???!!!!) இந்த கூலி உயர்வு செய்தது செல்லாது..செல்லாது.....
Dr Kamala - .,இந்தியா
2010-08-20 16:23:45 IST
..மொள்ளமார்ரி ..பொறுக்கி MP ..ஏனுங்கோ MP ன்னா ..இதுதானுங்களா ..நான் தப்பா சொல்லிபுட்டேங்களா? மன்னிச்சுகோங்கோ.நான் ஒருஎழவும் படிக்காதது ..இப்போ புரியுது ..Kamala Dr...
சி.ராமசாமி - tup,இந்தியா
2010-08-20 16:13:49 IST
....சம்பளம் பத்தாதா...அடபாவிகளா....பேசாம ஒன்னு பண்ணுங்க நோட்டு அச்சடிக்கற மெசின் ஆளுக்கு ஒண்ணா வாங்கி வச்சுகிங்க......
KARUNANITHI - CHENNAI,இந்தியா
2010-08-20 16:13:17 IST
SPECTRUM ஊழலில் ராஜா அடித்த கொள்ளையை விட இந்த சம்பள உயர்வு ஒன்றும் பெரியது கிடையாது...
senkamalam - dharmapuri,இந்தியா
2010-08-20 16:03:13 IST
வோட்டுக்கு ரூபாய் வாங்கும் மக்கள் எம்பி க்கள் சம்பளம் பற்றி பேசலாமா...
praveen - bangalore,இந்தியா
2010-08-20 15:50:52 IST
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை. நமது குடிமக்கள் தான் என்ன நினைத்தார்களோ அதை மேலே சொல்லியுள்ளார்கள்....
Jey - chennai,இந்தியா
2010-08-20 15:36:13 IST
this all too much...
thiyagu - namakkal,இந்தியா
2010-08-20 15:17:46 IST
சண்டை போடறதுக்கும்,மைக்குகளை ஒடைக்குறதுக்கும் சம்பளம் மூன்று மடங்கு உயர்வு,என்ன கொடுமை சார்??????????????????????????????...
கைப்புள்ள - சென்னை,இந்தியா
2010-08-20 15:16:54 IST
வெட்ககேடான விஷயம்...
சிவசங்கர்.ந - chennai,இந்தியா
2010-08-20 15:02:30 IST
80000 இல்லடா 8000000 இலட்சம் கொடுத்தாலும் பத்தாதுன்னு தானே சொல்லுவிங்க...வேலை பார்க்கறது இல்ல, இதுல சலுகை மற்றும் சம்பளம் மட்டும் வேணுமா? சும்மா அமளி, வெளிநடப்பு னு அட்டுழியம் பண்ணிக்கிட்டு...து.....
கார்த்திக் - அபுதாபி,இந்தியா
2010-08-20 14:57:50 IST
பாவம் இவனுக இவள நாளா சோத்துக்கு பிச்சை எடுத்தணுக இப்ப சம்பளம் போடுறதுக்கு....மக்களே நாடு வளரவே வளராது....தமிழ்நாட்ட கலைஞர் வாரிசு பேருக்கு பட்டா போட்டுட்டு இருக்காறு நம்ம அவங்க எப்பட இலவசமா கொடுபங்கனு நிக்க வேண்டியது தான்......dmk ஒரு விஷபுழு........
tretre - salem,இந்தியா
2010-08-20 14:57:17 IST
பாவம், இவளவு நாள் கஞ்சி குடித்தவர்களுக்கு இனிமேல் ரெண்டு வேலை நல்ல சோறு கிடைக்கும். மக்களுக்காகவே வாழ்பவர்கள். நல்ல முடிவு. வாழ்க பாரதம். வளர்க நம் அரசியல் வாதிகளும் அவர்கள் குடும்பமும்......
வி.கே..லோகநாதன். - REDHILLSவிளாங்காடுபாக்கம்,இந்தியா
2010-08-20 14:49:15 IST
வீண் செலவு.வரிப்பணம் கரைய வழி ....
madhu - chennai,இந்தியா
2010-08-20 14:27:12 IST
எல்லாம் யாருக்காக?...
Sanks - Chennai,இந்தியா
2010-08-20 14:17:30 IST
மலைய விழுங்கிற மகாதேவனுக்கு மடு ஒரு அப்பளம். கொள்ளையடிக்கிற கூட்டத்துக்கு இது ஒரு பணமே அல்ல....................
venugopal - bangalore,இந்தியா
2010-08-20 14:15:32 IST
protocol -ல் 23 -ம் இடத்தில இருக்கும் காபினெட் செக்ரட்டரி ikku ரூபாய் 80000 ம் சம்பளம் இருக்கும் போது 21 -ம் இடத்தில இருக்கும் எம்பிக்கு ரூபாய் 80001 சம்பளம் கொடுத்தால் என்ன தப்பு! இதை நீ செப்பு...
MANOHARAN - ஈரோடு,இந்தியா
2010-08-20 14:08:19 IST
எல்லா எம்பிக்களும் வசதியானவர்கள் கிடையாது. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கும் மந்திரிகளுக்கு ஏழை எம்பிக்களின் கஷ்டம் தெரியாது. இந்த சம்பளம் பொதுமக்களுக்கு donation கொடுக்கவே போதாது....
தமிழன் - chaina,இந்தியா
2010-08-20 14:07:59 IST
பாவம் மிகவும் வருமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதனால் கண்டிப்பாக இந்த விஷத்தை வரவேற்க வேண்டும். இனிமேல் வாழ்க உங்கள் குடும்பம் வளர்க உங்கள் கட்சிகள்...
மன்னை விஜி - mannai,இந்தியா
2010-08-20 13:43:47 IST
கூச்சல் போடும் எம்.பி.,க்களுக்கு கூலி உயர்ந்தது . பொருத்தமான தலைப்பு...
sukumar - பொள்ளாச்சி,இந்தியா
2010-08-20 13:37:57 IST
mp சம்பள உயர்வை மட்டும் கேலி பேசுபவர்கள் தங்கள் ஊர் கோவில்களுக்கு நன்கொடை கேட்பதையும் , திருமண செலவிற்கு பணம் கேட்பதையும், குழந்தைகள் படிப்புக்கு பணம் கேட்பது மற்றும் பல்வேறு பண உதவிகள்கேட்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? அரசு ஊழியர்கள் எட்டு மணி நேரத்துக்கு குறைவாகவே வேலை பார்கிறார்கள். ஆனால் எம்பிக்கள் முழு நாளும் மக்கள் பணியாற்றுகின்றனர். எனவே இவர்களை விட அரசு ஊழியர்கள் அதிகமாக சம்பளம் பெறுவதையும் ஒப்பிட்டு பார்க்கலாமே!...
Perumal - Bangalore,இந்தியா
2010-08-20 13:33:04 IST
வெரி குட் டைட்டில் அண்ட் பாடு taste ....
லக்ஷ்மிநாராயண் - துபாய்,இந்தியா
2010-08-20 13:30:49 IST
MP சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை. ஆனால், அந்த சம்பளத்திற்கு அவர்கள் வேலை செய்ய டார்கெட் பிக்ஸ் செய்யப்பட்டு அந்த டார்கெட்-ஐ அடைந்தாலே சம்பளம் கொடுக்கப்படவேண்டும். சபை கூடும் நாட்களுக்கு அவர்கள் வர வில்லை என்றால் அந்த நாளுக்கு உரிய சம்பளம் தரக்கூடாது. ஒவ்வொரு வருடத்திற்கும் அவர்கள் பணி தனிப்பட்ட குழுமத்தினால் தணிக்கை செய்யப்பட்டு தரத்திகேற்ப அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படவேண்டும். பணி சரியாக செய்யாதவர்க்கு தண்டனை தர வேண்டும். இத்தனை சம்பளம் வாங்கியும் பின்னர் லஞ்சம் வாங்கினார் என்றால், அவரை ஒரு௦ வருடம் வெளியே வர முடியாத கடுங்காவல் தண்டனை கொடுத்து அவர்கள் சிறைக்குள் இருக்கும் வரை அவரவர் தன்மைகேற்ப வேலை செய்ய வேண்டும். இந்த தனிப்பட்ட குழுமத்தில் சமூகத்தின் எல்லா தரப்பட்டவரும் பங்கேற்குமாறு வழி வகை செய்யப்படவேண்டும். நடக்குமா? ஜெய் ஹிந்த், பாரத மாதாகி ஜெய்....
கே ராகவன் - அம்பத்தூர்chennai,இந்தியா
2010-08-20 13:13:44 IST
it is good news to all here after they will work for the pople. if any other person want pay revison they have wait for very long time. and they wont get morthen 300%. but for people who not even open the mounth they want this good...
கே.பிரேம் குமார் - மனமாபஹ்ரைன்,இந்தியா
2010-08-20 13:06:46 IST
என்ன கொடுமையடா சாமி!!!...
SUPPIAH - பிளார்மலேசியாகாரைக்குடி,இந்தியா
2010-08-20 12:57:27 IST
Where is going to my country ? now i am working in malaysia now i get inr 15000 only how is possible every mps get 50000 i cant belive this rich people get rich but i can say onthing india never improve compare with other world countries every one should be go to hell thats ஆல்....
அப்பாவி - சென்னை,இந்தியா
2010-08-20 12:45:51 IST
இதை தவிர பாராளூமன்றதில் கேள்வி கேட்பதற்கும் மாநிலங்கள் அவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கவும் அவர்கள் வாங்கும் சன்மானத்தை பற்றி எதுவும் சொல்லவில்லையே!!! அதெல்லாம் கணிக்கெடுத்தால் புது சம்பளமெல்லாம் பொறி கடலைக்கு ஆகாது.....
த.அருள்மோனி - சென்னை,இந்தியா
2010-08-20 12:38:31 IST
நல்ல காரியம். வாழ்க வளமுடன். நல்லபடியா இன்வெஸ்ட் பண்ணுங்க. லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிருங்கள்.நல்ல அரசு அமைய உதவிடுங்கள். இந்தியாவில் 40 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறவர்கள், சரியான குடி நீர் இல்லை. நிலம் மாசுபட்டு விட்டது . காடுகள் அழிந்து வருகிறது. பாலைவனம் விரிந்து வருகிறது. பூமி மக்கள் வாழ முடியாத இடமாய் மாறிவறுகிறது. நதி நீர் விரியமாய் கடலில் கலக்கிறது. வெள்ளம் மழை காலத்தில். வறட்சி கோடை காலத்தில். சரியான சேமிப்பு இல்லாமல் தானியம் அழிகிறது. சாதி,மதம் பெயாரில் சண்டைகள். பெண் அடிமை. விபச்சாரம். கொலை . சட்டம் ஒழுங்கு சீரழிவு. சிறுவர்கள் பெண்கள் உரிமை மீறல். லஞ்சம் வன்முறை வறுமை நக்சல் தாக்கம் இப்படி ஒரு இந்திய இருப்பது அறிந்து காந்தி கண்ட பாரதம் உருவாக்குங்கள். பார்லிமென்ட் நடக்க விடுங்கள். தொகுதி மக்கள் சந்திக்க தொகுதி பிரச்சினை தீர்க்க நேரம் ஒதுக்குங்கள். மக்கள் பிரச்னையும் இனி பார்லிமென்ட் இல் பேசுங்கள்....
Vinoth - Chenni,இந்தியா
2010-08-20 12:35:43 IST
சம்பளத்தை உயர்த்த இந்தியா ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகளுடன் கூச்சல் போடும் இவர்கள். மக்கள் பிரதிநிகளுக்கும் அதே போல் தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று ஒத்துமையாக சொல்வார்களா??? பி.கு.: அரசு செயலாளர்களாக பல ஆண்டு அனுபவமும் வேண்டும் அந்த இந்திய ஆட்சி பனி அதிகாரிகளுக்கு. எனவே அரசு செயலர்கள் உடனே இந்த அளவு சம்பளம் பெற்று விடுவதில்லை....
pugazhenthi - Thanjavur,இந்தியா
2010-08-20 12:07:53 IST
Dear editor, The title of the news is in very bad taste. Even though the behaviour of our MPs is bad, the print medium should maintain its own dignity....
Divaharan - Tirunelveli,இந்தியா
2010-08-20 11:57:23 IST
தூங்குபவர்களுக்கும், கையெழுத்து மட்டும் போடுபவர்களுக்கும், அதற்கும் முடியாமல் வராமல் இருப்பவர்களுக்கும், ஒரு கேள்வி கூட கேட்காதவர்களுக்கும் இந்த சம்பளம் பொருந்துமா என்று யோசிக்க வேண்டும்....
ராம் ஜ ராம் - chennai,இந்தியா
2010-08-20 11:51:24 IST
பாவம், இவளவு நாள் கஞ்சி குடித்தவர்களுக்கு இனிமேல் ரெண்டு வேலை நல்ல சோறு கிடைக்கும். மக்களுக்காகவே வாழ்பவர்கள். நல்ல முடிவு. வாழ்க பாரதம். வளர்க நம் அரிசியல் வாதிகளும் அவர்கள் குடும்பமும்

கருத்துகள் இல்லை: