திங்கள், 16 ஆகஸ்ட், 2010

’’சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளாக ரத்த வங்கி நடத்தி வருகிறார்

நான் ரத்தத்தை விற்றேனா? சிரஞ்சீவி ஆவேசம்

நடிகையும்,  நடிகர் ராஜசேகரின் மனைவியுமான ஜீவிதா, ’’சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளாக ரத்த வங்கி நடத்தி வருகிறார். அதில் தனது கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் இருந்து இலவசமாக ரத்தம் வாங்குகிறார். 
ஆனால் தனது வங்கியில் இருந்து 30 சதவீதம் ரத்தத்தை அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கி விட்டு மீதம் உள்ள 70 சதவீத ரத்தத்தை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்’’என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சிரஞ்சீவி பதில் அளித்துள்ளார்.
கடப்பா மாவட்டத்தில் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி, மக்கள் சைதன்யா யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பிரம்மாங்கரி மடம், பத்வலா, சித்திபடம், பாகராபேட்டை, ராஜம்பேட்டை, ரயில்வே கோடூரு ஆகிய இடங்களில் அவர் பேசும்போது,
’’கடந்த 6 ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து மக்களிடையே பிரசாரம் செய்தால் என் மீது வீண்பழி சுமத்தி வருகின்றனர்.
நான் ரத்தத்தை விற்று வருவதாக சிலர்  குற்றம்சாட்டி வருகின்றனர். எத்தனை பாக்கெட் ரத்தம் விற்றால் நான் கோடீஸ்வரானாவது.
சினிமாவில் பல கோடிகளை நான் சம்பாதித்து விட்டேன். ஆனாலும் சினிமா துறையை கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்தவன் நான். எனது ரத்த வங்கியின் சேவையை கண்டு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.

தொடர்ந்து 5 முறை எனது ரத்த வங்கி தேசிய விருது பெற்றுள்ளது. வரும்காலத்தில் பிரஜா ராஜ்யம் கட்சிதான் ஆந்திராவை ஆளும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: