விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேருக்கும் ஒரு வருட சிறைதண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பியண்ணா, செஞ்ஜேம்ஸ், ஜெயக்குமார், புஷ்பதனராஜ், பூமிநாதன் மற்றும் ரவிக்குமார் ஆகிய ஆறுபேருமே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தவர்களாவர். இவர்களை குற்றவாளிகள் என அடையாளம் சென்னை, தாம்பரம் நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு வருட சிறைதண்டைனையை விதிக்க தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கத்தில், தமிழ் நாட்டின் தென் பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட படகு ஒன்றின் மூலம் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு பயணிக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவர்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக