மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனத்தலைவர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம், ‘’மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட இருப்பதை வரவேற்கிறோம். அதே சமயம் அவருடைய நினைவிடம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் புதைந்து கிடப்பதாக வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து கண்டுபிடித்து உறுதி செய்து அங்கு அரசு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.அத்துடன் அருங்காட்சியகத்தில் உள்ள ராஜராஜசோழன் சிலையை தஞ்சை பெரிய கோயிலில் வைக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் எங்கள் கட்சியின் சார்பில் சென்னையிலும், கும்பகோணத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக