சரவண பவன் ஹோட்டல்அதிபர் அண்ணாச்சி ராஜகோபால்.
அண்ணாச்சியிடம் இப்போது ஏக மாற்றங்கள். முழு நேர ஆன்மிகவாதியாகமாறிவிட்டார்
ஹோட்டல் தொழிலில் தன்னை ஜாம்பவானாக நிரூபித்த ராஜகோபால் புது அவதாரத்திலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள பெரும் முயற்சி எடுத்துவருகிறார். தினம்தோறும் தன் ஹோட்டல் பதார்த்தங்களை ருசி பார்ப்பது முதல்ஊழியர்களின் குடும்ப விவகாரங்கள் வரை தனித் தனியாக நேரம் ஒதுக்குவதுஅண்ணாச்சியின் வழக்கம். ஆனால், அவர் வாரம் சென்னையில் இரண்டு நாட்கள்மட்டும்தான் தங்குகிறார். மற்ற ஐந்து நாட்களும் தூத்துக்குடிமாவட்டத்தில் இருக்கும் புன்னையடியில்தான் வாசம். ஒரு சில வருடங்களுக்குமுன்பு சுமார் 100 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்ய ஆரம்பித்த அவர், சொந்தஊரில் சிவன் அணைந்த பெருமாள் கோயிலைக் கட்டி முடித்துவிட்டார். தென்மாவட்ட சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியக் கோயிலாக சில மாதங்களிலேயேஇந்தக் கோயில் கருதப்படுகிறது. ராவணனை வதம் செய்த ராமன், ராமேஸ்வரத்தில்சிவலிங்கத்துக்குப் பூஜை செய்த கதையை அண்ணாச்சிக்கு எடுத்துச் சொல்லி,'கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீங்கள் ஒரு சிவ ஸ்தலத்தை ஸ்தாபிப்பது நல்லது' என்று ஜோசியக்காரர்கள் சொன்னார்களாம். இன்னொரு பக்கம், சிவனோடு பெருமாளும் இருப்பது ரொம்ப நல்லது என்று அட்வைஸ் எங்கிருந்தோ வர, ஜம்மென்று கோயில் கட்டிவிட்டார். அக்கம் பக்கம் இருக்கும் ஊர்களில் இருந்து கோயிலுக்கு பக்தர்களை வரவழைக்க, பஸ்களை இலவசமாக அனுப்பி, தரிசனம் செய்யவைத்து சாப்பாடும் போட்டு அனுப்புகிறார் அண்ணாச்சி. அதே கோயில் வளாகத்தில் தனக்கும் ஒரு சிலையை நிறுவிக்கொண்டார்.
காரணம், அந்தக் காலத்தில் கோயில் கட்டிய மன்னர்களின் சிலைகள் இப்போதும் அந்தக் கோயில்களில் இருக்கிறது என்பதால்தான். இதுவும் ஒரு ஜோஸியக்காரர்
அட்வைஸ்தான்!ஆனால், இந்தக் கோயில் கட்டுமானத்துக்கு இன்னொரு காரணத்தையும்அண்ணாச்சிக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். அதாவது, இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னைவிட்டுப் பிரிந்துபோன இரண்டாவது மனைவி கிருத்திகாவுக்கு கோயில், குளம் என்றால் ரொம்ப ஆசை. அவரைத் திரும்பவும் அழைத்து கோயில் நிர்வாகத்தை கவனிக்கச் சொல்லி சொந்த ஊரில் அவருடனேயே தானும் செட்டிலாகிவிட அண்ணாச்சிக்கு ஆசையாம். கிருத்திகாதான் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. இப்போது சென்னை மாம்பலத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருக்கும் கிருத்திகா, டைப்ரைட்டிங் லோயர் ஹையர் பாஸ் செய்துவிட்டு, இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் படிக்கிறார். ஏதாவது ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளுடன் தன் பொழுதைக் கழிக்க விரும்புகிறாராம் கிருத்திகா. சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் போன கிருத்திகாவைப் பார்த்த அண்ணாச்சி, ''பி.எம்.டபிள்.யூ.காரில் போக வேண்டிய அசோக் நகர் அம்மா இப்படிப் போறாங்களே?'' என்று வருத்தப்பட்டாராம். ஹோட்டல் நிர்வாகத்தின் மொத்தப் பொறுப்பையும் இப்போது கவனித்துக்கொண்டு இருப்பவர் அண்ணாச்சியின் இளைய மகன் சரவணன்தான்!
கே.கே.நகரில் சரவணபவன் தன் முதல் கிளையைத் தொடங்கியபோது அதன் காபி முதல் சாம்பார் வரை தனிப்பட்ட ருசியைக் கொண்டுவந்து சேர்த்தது காசியின் குடும்பம்தான். பிராமணக் குடும்பமான அவரது குடும்ப உறுப்பினர்கள்தான் ஹோட்டல் ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு அயிட்டத்துக்கும் செய்முறை வகுத்துக் கொடுத்தவர்கள். இதில் அண்ணாச்சியின் நண்பரான கணபதி அய்யர் குடும்பத்துக்கும் பங்கு உண்டு. இப்போதும், அண்ணாச்சி காசிக்கு மாத சம்பளமாக ஒரு தொகையைக் கொடுக்கிறார். சரவணபவன் இனிப்பு கார வகைகளை தயார் செய்யத் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பிக்க, அதைமுழுதாகக் கவனித்தது காசியின் சகோதரிகள்தான். ஆனால், இப்போது காசியைத் தவிர வேறு யாரும் சரவணபவனோடு தொடர்பில் இல்லை. இப்போது அவர்கள் தனியாக சிம்பிளாக ஒரு மெஸ் நடத்துகிறார்கள். அண்மையில் காசியின் மகளுக்கு வரன் பார்க்க, மொத்த செலவையும் அண்ணாச்சி ஏற்பதாகச் சொன்னாராம். ஆனால் வந்த வரனோ, 'ஓஹோ, நீங்க அந்தக் கொலையில சம்பந்தப்பட்டு இருக்கீங்களோ?' என்று மறுத்துவிட... அண்ணாச்சி நொறுங்கிவிட்டாராம். இந்த சம்பவம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லோர் குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் எட்டிப் பார்த்துக்கொண்டு இருப்பதில் அண்ணாச்சிக்குப் பெரும் வேதனை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக