புதன், 18 ஆகஸ்ட், 2010

செட்டிகுளம் நிலையத்தில் சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000ம் பேர் வரை இன்று செட்டிகுளம் கதிர்காமர் ந

செட்டிகுளம் வலயம் 4 நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து வந்த சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000ம் பேர் வரை இன்று (18.08.2010) புதன்கிழமை செட்டிகுளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்ற இருப்பதாகவும் உடனடியாக இதனை தடுத்து நிறுத்துமாறும் அம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோதரலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தங்கள் அனைவரையும் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி ஒரு மாதத்தினுள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்ததாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தங்களுக்கு இவ்விடயத்தில் எவ்வித உடன்பாடும் இல்லை என்றும் தங்களை இந்த முகாமில் வைத்து பின் மீள்குடியேற்றுமாறு அம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தங்களின் வேலைவாய்ப்பு இல்லாமல் போவதோடு மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் பாதிப்படையும் என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோதரலிங்கம் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: