புதன், 18 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சி மக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகள் மீளவும் கையளிக்கப்பட

கிளிநொச்சி மாவட்ட மக்கள் வங்கியில் வாடிக்கையாளர்களினால் அடகு வைத்த நகைகள் மீளவும் கையளிக்கப்பட்டவுள்ளது. 12 ஆயிரம்வரையிலான அடகு நகைகள் மீளவும் கையளி;க்கப்படவுள்ளது என மக்கள் வங்கியின் வன்னி மாவட்ட பொது முகாமையாளர் றஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்தார். பரந்தன், மாங்குளம், முல்லைத்தீவு மக்கள் வங்கி கிளைகளில் அடகு வைத்த நகைகள் யாவும் யுத்தகாலத்தில் காணாமல் போய்யுள்ளது என குறி;ப்பிட்ட அவர் இவர்களுக்கு தற்போதைய நகைபெறுமதியின் பிரகாரம் நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: