வவுனியாவில் நெலும்குளம் பிரதேசத்தில் இருந்து தனது மகளுடன் கொழும்புக்கு வந்த தாய் பொல்ஹேன்கொட கிருலப்பனை பிரதேசத்தில் வசித்து வந்த பிரபல சட்டத்தரணியின் வீட்டின் முன்னால் தனது மகளுக்கு நச்சு விதையை உட்கொள்ள கொடுத்ததுடன் தானும் நச்சு விதையை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனால் 11 வயதான அவரது மகள் கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா நெலும்குளம்வைச் சேர்ந்த 36 வயதான புஷ்பராணி பத்ரகெளரி என்ற பெண்ணாவார். கிருளப்பனை பொல்ஹேன்கொட 162/11 என்ற இடத்தில் உள்ள வீட்டுக்கு தான் செல்வதாக வவுனியாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடொன்றை செய்த பின் அப்பெண் நேற்று (19) ஆம் திகதி காலை மேற்குறிப்பிட்ட சட்டத்தரணியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
குறிப்பிட்ட சட்டத்தரணி வவுனியாவில் இருந்த காலத்தில் உயிரிழந்த பெண்ணின் காணி வழக்கொன்றில் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.அப்போது சட்டத்தரணிக்கும் அப்பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவு காரணமாக அப்பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக 5 இலட்சம் ரூபா வேண்டுமென்று அப்பெண் கேட்டுள்ளதாகவும் சட்டத்தரணி 2 இலட்சம் ரூபாவை கொடுக்க முன்வந்த போதும் அது போதாது என்று அப்பெண் கேட்டதாகவும் சட்டத்தரணி இதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே அவரது வீட்டின் முன் நச்சு விதையை உட்கொண்டு அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக