இந்தியாவில் 83. 8 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ. 20 கூட செலவழிக்கும் திறன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்ஜூன் சென் குப்தா குழு கூறுகிறது. அப்படியானால் இந்தியாவின் மிகப் பெருவாரியான மக்கள் மிகக் கொடிய வறு மையில் வாடுகிறார்கள் என்பதே பொருள்.
இவ்வளவு கொடிய வறுமையில் பெருவாரியான மக்கள் வாடும் இந்த தேசத்தில் தான் மிகப் பெரும் பணக்காரர் களும் பெருமுதலாளிகளும் வாழு கிறார்கள்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட விப ரங்களின்படி ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டிய லில் 52 இந்தியர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள்.
உலகளவில் முதல் 10 இடத்தை பிடித்த இந்திய பெரும் பணக்காரர்கள் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானி யும். மேற்கண்ட 52 பேரில் இடம் பெற் றுள்ள ஒரே தமிழர் கலைஞரின் பேரன் கலாநிதி மாறன். இந்த 52 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்தை கூட்டினால் தலை சுற்றுகிறது. 110 கோடி மக்களில் இந்த 52 பேரிடம் மட்டும் ரூ. 13 இலட்சத்து 80 ஆயிரம் கோடி செல்வம் குவிந்து கிடக்கிறது. இதை சாதாரணமான வட்டி விகிதத்தில் வங்கியில் போட்டால் கூட ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 கோடி வட்டிப் பணம் கிடைக்கும். இந்த வட்டிப் பணத்தை மட்டும் கொண்டு இந்தியாவில் வீடின்றி தவிக் கும் 2 கோடி விவசாயத் தொழிலாளர் களுக்கு நிரந்தரமான, வசதிகளோடு கூடிய வீடுகள் கட்டித்தர முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் அனைத்துக் கிராமங் களில் சகல வசதிகளும் கொண்ட சுகா தார மையங்கள், தாலுகா மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் போன்றவற்றை உருவாக்கு வதற்கு ரூ. 40 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும். அரசு அதற்கு பணமில்லை என்கிறது. ஆனால், இதைவிட 4 மடங்கு அதிகமான பணம் வெறும் 52 பணக்காரர் களின் கைகளில் புரளுகிறது.
ஒருபுறம் கோடிக்கணக்கில் பசித்த வயிறுகள்: மறு புறம் செல்வத்தில் புரளும் சில பெருமுதலாளிகள். இதுவே இன் றைய இந்தியா. 63 ஆண்டுகால சுதந் திரத்திற்குப் பின்னும் நீடிக்கும் இந்தியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக