வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

யாழ்ப்பாண நகரம் மரங்கள் ஏதுமின்றி அனல் கக்கும் பரிதாபம் மறுபுறம்

எரிக்கின்ற வெயில்; புகை கக்கும் வாகனம்; பாருங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தை
யாழ்ப்பாண நகரம் வாகன நெருசலிலும் மக்கள் கூட்டத்தாலும் திக்குமுக்காடுகிறது. எவரும் எதிர்பார்க்காத வகையில் இத் திடீர் மாற்றம்.இம் மாற்றம் யாழ்ப்பாண நகரத்தின் போக் கை மிக மோசமாக பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. இதற்கு மேலாக, மூலை முடுக்கெங்கும் வியா பார நிலையங்கள். காலாறுவதற்குக் கூட இட மில்லை எனும் அளவிற்கு யாழ்ப்பாண நகரத் தின் நெருக்கடி உள்ளது.
யாழ்ப்பாண நகரம் இப்போது நாவலர் வீதி, பிறவுண் வீதி, ஆஸ்பத்திரி வீதி, பலாலி வீதி, பருத் தித்துறை வீதி என்பவற்றால் வேகமாக முன் னேறிக்கொண்டு செல்கின்றது.இதனால் யாழ்ப் பாண நகரம் விஸ்தரிக்கப்படுகின்றது என்பதற் கப்பால் வீடுகள், ஆலயங்கள், அதன் சுற்றுச் சூழல் மற்றும் உறவுநிலை என்பன நகர மையத் திற்குள் அகப்பட எங்கள் இயற்கையின் எழிலழகை நாம் இழந்துபோகும் பரிதாபத்தில் இருக்கின்றோம்.
இதேநேரம் யாழ்ப்பாண நகரம் என்ற எல்லை கடந்து குச்சொழுங்கைகளில் உள்ள வீடுகளும் விடுதிகளாக மாறிப்போன பரிதாபம் அதிர்ச்சிக் குரியது. வருமானத்தை மட்டும் மையமாகக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கு வோரால் அயல்வீடுகள் அனுபவிக்கும் அசெள கரியங்கள் ஏராளம்.
இரவு வேளைகளில் விடுதிகளில் இருந்து வரும் பாட்டுக் கச்சேரியும் அதன் இம்சையும் தாங்க முடியாத துன்பம். என்ன செய்வது! எங்கள் தலைவிதி அப்படி யென்று நினைத்து ஆறுதலடையலாம் என்றால் ஆதவனின் கொடும் வெப்பம் தாங்கமுடியாமல் உள்ளது.
இயற்கையின் மாற்றமும் சீற்றமும் ஒருபுறம். மக்களையும் மாடிக் கட்டிடங்களையும் வாகனங் களையும் தாங்கி நிற்கும் யாழ்ப்பாண நகரம் மரங்கள் ஏதுமின்றி அனல் கக்கும் பரிதாபம் மறுபுறம் என்பதாக எங்கள் வாழ்க்கை கடந்து செல்லும் பாதையில் வரவேற்புத் தருவதற்காக நோய்கள் காத்திருக்கும் கதை வேறு. இதற்கு மேலாக வாகனங்கள் வெளிவிடும் புகை ஐயகோ! தாங்க முடியாது.
யாரிடம் சொல்வோம். யார்க்கெடுத்துரைப் போம். நாடுபூராகவும் கடும்புகை வெளிவிடும் வாகனங்கள் வீதியில் இறங்குவதற்கு தடை செய்யும் சட்டம் இருக்கும்போது யாழ்ப்பாணத் தில் மட்டும் இந்த நிட்டூரம் நின்றபாடல்லை.
அட! நாசமறுப்பு. கைகடித்தால் லைசன்ஸ் பார்க்கும் கலாசாரத்திற்குள் நீர் இன்னுமொன் றைப் புகுத்திவிட்டீர் காணும். இனிமேல் கக்குற புகைக்கும் ஒரு தொகை. உருப்பட விடமாட்டீரே!வாகன உரிமையாளர் கள் முணுமுணுப்பதும் கேட்கவே செய்கின்றது.

www.teavadai.wordpress.com 

கருத்துகள் இல்லை: