வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஒரு உயிரை பலி கொடுப்பது தப்பில்லை முன்னேஸ்வரம் அம்மன் கோவில் பூசகர் மகேந்திரசாமிதெரிவித்துள்ளார்.

முன்னேஸ்வர ஆலய காளி கோயிலில் மிருகவதை : பௌத்த பிக்குகள் எதிர்ப்பு சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காளியம்மன் கோவிலில் மிருக பலி கொடுக்கும் பூஜை தொடர்பில் பௌத்த பிக்குகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். பௌத்த நாடு என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான குற்றச்சாட்டை தேசிய பிக்குமார் சம்மேளனம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் இன்று கொழும்பில் வைதது கருத்து தெரிவித்திருந்த அதன் செயலாளர் எடிகல்லே விமலசார தேரர் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி பல மதத்தவர்களும் இந்த கோவிலில் மிருகங்களை பலி கொடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் பௌத்த மற்றும் இந்து மதங்களுக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காளி அம்மன் கோவில் பதில் பூசகர் மகேந்திரசாமி மனித உயிரை காப்பாற்றுவதற்கு ஒரு உயிரை பலி கொடுப்பது தப்பில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிருக வதைக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே இந்து சமயம் கொள்கை வகுத்துள்ளதாகவும், அனைத்துக் கோவில்களிலும் இந்த நிகழ்வு நடத்தப்படாமல் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சில ஆலயங்களிலேயே இந்த நிகழ்வு நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சில பௌத்த பிக்குகள் தாம் விரும்பிய இறைச்சி வகைகளை அனுப்பி வைக்குமாறு பக்தர்களிடம் நேரடியாகவே கேட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

கருத்துகள் இல்லை: