தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் குமரன் பத்மநாதனை (கேபி) கைது செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரினரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டு விமான நிலையத்திற்குள் செல்லும் வரையில் பாதுகாப்புச் செயலாளர் இது குறித்து அறிந்திருக்கவில்லை என சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பேர், குமரன் பத்மநாதனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதன் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பான சகல தரவுகளும் தமக்குத் தெரியும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக