தோண்ட, தோண்ட ஊழல் : காமன்வெல்த் போட்டிகளுக்கு "டிரெட்மில்' வாங்கியது, கம்ப்யூட்டர் வாடகைக்கு எடுத்தது, "ஏசி'மெஷின்கள் வாங்கியது, ஸ்டேடியங்கள் கட்டுமானப் பணி, மேம்பாட்டு பணிகள் என, அனைத்திலுமே ஊழல் நடந்துள்ளது, தற்போது வரிசையாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. காமன்வெல்த் போட்டியின் இன்றைய ஊழல் ஸ்பெஷல் என, கிண்டலடிக்கும் அளவுக்கு தினம் தோறும் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. போட்டிகளை நடத்தி முடிக்க 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப் படுகிறது என்றால், இதில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு 'ஊழல் நடந்திருப்பது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
ஏழைகளின் தேசம் : சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில்,"இந்தியாவில் 40கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர்'என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, ஆப்பிரிக்க நாடுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் ஒருவேளை உணவு கூட, கிடைக்காமல் பட்டினியால் சாவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் உத்தரவாதம் இல்லை. போதிய சுகாதார வசதிகள் இல்லை. வசிப்பதற்கு வீடுகள் இல்லாமல், கழிவு நீர் கால்வாய்களின் ஓரம், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டும். ஆனால், "இந்தியா வல்லரசு நாடு'என்ற "பில்டப்'களுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இதைக் கூறித் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். தற்போது விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதோடு, அதில் தாங்களால் முடிந்த அளவு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கின்றனர், ஊழல் பெருச்சாளிகள். இந்த நிதியை வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் மேம்பாட்டிற்காக செலவிடலாமே என, நேர்மையாளர்கள் கூறுவதில் நியாயம் இருக்கத் தானே செய்கிறது.
காமன்வெல்த் கூட்டமைப்பு கெடு : போட்டிகள் துவங்க இன்னும் இரண்டு மாதத்துக்கும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் மைக்கேல் பெனல் கூறியுள்ளதாவது:காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது. வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் டில்லி வரவுள்ளேன். அப்போது போட்டி நடக்கும் மைதானங்கள் அதற்கு தயார் நிலையில் உள்ளனவா, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என,நேரடியாக ஆய்வு செய்யவுள்ளேன். இதுகுறித்து கல்மாடி 18ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு பெனல் கூறியுள்ளார்.போட்டிகள் நடக்கவுள்ள இன்னும் சில மைதானங்கள் முழுமையாக தயாராகவில்லை. குறிப்பாக, ஹாக்கி போட்டிகள் நடக்கவுள்ள ஸ்டேடியத்தில் பணிகள் முடிவடையவில்லை. மைதானங்களின் தரம் குறித்தும் விளையாட்டு துறை நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். "மைதானங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, தற்போது தான் நடந்து வருகின்றன. மைதானங்களில் "கன்ட்ரோல்'அறைகள் இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை'என, ஆஸ்திரேலிய அதிகாரி ஜஸ்டின் பவுடன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
யார் இந்த சுரேஷ் கல்மாடி : தன்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சரமாரியாக அள்ளி வீசினாலும், கொஞ்சம் கூட அசராமல் அத்தனையையும் துடைத்து தூர எறிந்து விட்டு, காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் பதவியில் பிடிவாதமாக அமர்ந்து கொண்டிருப்பவர், சுரேஷ் கல்மாடி. இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது புனே லோக்சபா தொகுதியின் எம்.பி.,இவர் தான். காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். மூன்று முறை லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் இவர் தான். இந்த பதவிக்கு இவர், நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பர்கத் சிங், சுரேஷ் கல்மாடியை"ஸ்போர்ட்ஸ் மாபியா'என, கடுமையான வார்த்தைகளால் தாக்கிய காலம் உண்டு.
வீணடிக்கப்பட்ட நிதி : *டில்லியில் உள்ள நேரு விளையாட்டரங்கம், காமன்வெல்த் போட்டிகளுக்காக புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி 580 கோடி ரூபாய். தற்போது செலவிடப்பட்டது 890 கோடி ரூபாய்.
*யமுனா ஸ்போர்ட்ஸ் வளாகத்துக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி 200 கோடி ரூபாய். தற்போது செலவிடப்பட்ட நிதி 300 கோடி ரூபாய்.
*மல்கோத்ரா ஸ்டேடியம் கட்டுவதற்காக ஏற்கனவே 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான செலவு 150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
*தயான் சந்த் ஸ்டேடியத்துக்காக 212 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு 262 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
*போட்டிகளின் துவக்க விழா, நிறைவு விழாவுக்காக 106 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கான செலவு தற்போது 375 கோடி ரூபாயை எட்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
*உணவு தொடர்பான செலவுக்காக 85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கான செலவும் தற்போது 190 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரை கடந்த ஊழல் : *காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள் பயன்படுத்துவதற்காக, சாதாரண வகை டாய்லெட் பேப்பர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பேப்பர் ரோல் ஒவ்வொன்றும் தலா ரூ.4,138 ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், லண்டனில் தயாராகும், மிகவும் தரம் வாய்ந்த டாய்லெட் பேப்பரின் விலை எவ்வளவு தெரியுமா? 160 ரூபாய் தான்.
*டிரெட்மில் மிஷின்கள், 45 நாட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான வாடகைத் தொகை பத்து லட்ச ரூபாய் என, காமன்வெல்த் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், லண்டனில் விற்பனையாகும் தரமான டிரெட்மில்லின் விலை இரண்டு லட்சம் ரூபாய் தான்.
*அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக குளிர்சாதன பெட்டிகள், தலா 42 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ள ÷ஷாரூம்களில் குளிர்சாதன பெட்டிகள், 6,000 ரூபாய்க்கே கிடைக்கின்றன.
*காமன்வெல்த் போட்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாமல், எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 244 கோடி ரூபாய், போட்டிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
*விளையாட்டு மற்றும் டில்லி நகர கட்டமைப்புகளை தரம் உயர்த்துவதற்காக 7,242 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாவும், இதில் 2,477 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாவும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள நிதி எங்கே போனது?
*காமன்வெல்த் போட்டிக்கான நிதி, முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக 300க்கும் மேற்பட்ட புகர்õர்கள் வந்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகன் - Bangalore,இந்தியா 2010-08-15 13:41:14 IST
பழகி போய்விட்டது.........!!! இதை எல்லாம் எடுத்து சொல்லி எங்களை திருத்தி விடாதிர்கள்........
Madeswaran - Chennai,இந்தியா 2010-08-15 11:09:17 IST
வசிப்பதற்கு வீடுகள் இல்லாமல், கழிவு நீர் கால்வாய்களின் ஓரம், ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் பிளாட்பாரங்களில் வசிப்பவர்களின் (மலம் கழிப்பவர்களின்) எண்ணிக்கை பல கோடியைத் தாண்டும். ஆனால்,இந்தியா வல்லரசு நாடு'என்ற "பில்டப்'களுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இதைக் கூறித் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏன்டா...சீனா தன் நாட்டில் உள்ள வீரர்களை, திறமையை தன்னிடம் உள்ள அபரிதமான பணத்தைக்கொண்டு உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பிச்சா, நாம ஏன் ஒன்னுமே இல்லாம (Very sorry to say this..!) சும்மா வெளிச்சம் போடணும்? JAIHIND...
ஜி.பன்னாடை பாண்டியன் - wuxi,சீனா 2010-08-15 10:52:19 IST
மிக தரம் மிக்க டாய்லட் பேப்பர்கள் ஒரு ரோல் Rs .25 க்கு குறைவாகவே சீனாவில் கிடைக்கிறது. இவனுங்க வாங்கி இருக்கிற விலை என்ன மயக்கம் போடா வைக்குதையா ? ஏன்யா, ஊழல் செய்வதற்கு முன் கொஞ்சம் கோபாலபுரத்தில் ட்ரைனிங் எடுத்துக்க கூடாதா ?...
baalaji - Khartoumசூடான்,இந்தியா 2010-08-15 10:28:01 IST
இந்த லட்சணத்துல இவரு "அன்னை" சோனியா சொன்னதான் பதவி ராஜினாமா பண்ணுவாராம். அப்படின்னா.. இன்னொரு போபோர்ஸ் ஆஆஆஆ .......
ஐயப்பன் - நாகர்கோயில்,இந்தியா 2010-08-15 10:23:55 IST
காமன்வெல்த் போட்டியல்ல ...காங்கிரஸ் வெல்த் போட்டி ..உங்கள் கூட்டணி தலைவர்களுக்கு இந்த ஆலோசனை கொடுக்கவும்.முக்கியமாக மு.க.வுக்கு கடிதம் எழுதவும்."ஆசிய வளர்ச்சி வங்கி " தலைமையகம் "அறிவாலயம் "என்று சிறப்பித்து நீங்கள் ஒரு சிறப்பு தபால் தலை "வாழும் தலைவரின் "உருவத்தில் வெளியிடவும்.கட்டி முடிக்காத சட்ட சபையை திறந்து வைக்க வந்த அன்னையை கூட்டணி விருந்துக்கு அனுப்பி அவர் வலியை போக்கவும்......சுதந்திர தின வாழ்த்துக்கள்.கங்கை -- காவிரி இணைத்து எங்களை நேரடியாக கடலில் கலக்க திட்டமிடவும்."தங்கும் நாற்காலி திட்டம் "...
குண்டப்பா - போர்த்ச்மௌத்,யுனைடெட் கிங்டம் 2010-08-15 09:55:14 IST
ஏன்டா பாவிகளா நீங்க திருந்தவே மாட்டீங்களா ? இந்த காங்கிரஸ் காட்ச்சியும் பாரதீய ஜனதா என்ற தீவிர மதவாத கட்சியும் ஒழிந்தால் இந்திய உருப்படும்....
கடைநிலை இந்தியன் - Bangalore,இந்தியா 2010-08-15 09:51:04 IST
சுதந்திரம்? ஊழல் செய்யவா இந்த சுதந்திரம்? என்று திருந்தும் நம் இந்தியா?...
kalavani - n,இந்தியா 2010-08-15 08:17:07 IST
இவனுகள் பதவி பறிபதோடு மட்டுமில்லாமல் ...சிடிசன் படத்தில் சொல்வது போல தண்டனை குடுக்க வேண்டும் ...........நம்மால் இப்படி புலம்பத்தான் முடியும் ...தலையே சரி இல்லாவிடில் என்ன செய்ய முடியும் ........
தி.க.வைரவன் - madurai,இந்தியா 2010-08-15 08:16:58 IST
இது என்ன புதியதா? போபர்ஸ் முதல் commonwealth வரை சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.லஞ்சத்தையும் ஊழலையும் வெறும் செய்தியாக மட்டுமே இந்தியன் பார்க்கிறான் ,தன உடைமையையும் உரிமையையும் பாதிக்கின்ற ஒன்று என்று புரிந்துகொள்ல்லதா வரையில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது ....
மோடிதாசன் - bangalore,இந்தியா 2010-08-15 07:51:08 IST
இந்த காங்கிரஸ்காரர்கள் எப்பவுமே இப்படிதான்.... நாட்டோட பேர கெடுக்காம போட்டிய நடத்தி முடிச்சா செரி... மத்தபடி ஊழல் எல்லாம் எங்களுக்கு பழக்கமான ஒண்ணுதான்......
ramalingamr - chennai,இந்தியா 2010-08-15 07:44:51 IST
ஊழல் நிரூபிக்கபட்டால் குற்றம் புரிந்தவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் அவர்களது சொத்து முழுவதும் பறிமுதல் செய்வது மற்றும் ஊழல் புரிந்த குற்றவாளிகளுக்கு துணை புரிந்தவர்களுக்கு இதே தண்டனை கொடுக்கவேண்டும். முடியுமா இந்த அரசாங்கத்தால். முடியாது ஏனனில் இந்த அரசாங்கம் முழுவதும் இதே ஊழலை தானே செய்கிறார்கள். எங்க திருந்தபோவுது இந்த அரசாங்கம். நீதித்துறை தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும்....
கே.சுகவனம் - SALEM,இந்தியா 2010-08-15 07:24:24 IST
அதான் "நேர்மையாளர்" சென்ட் தெளிக்கப்போகிறாரே ஊழல் மணக்க.போங்கப்பா!!!!வேற வேலை இருந்தால் பாருங்க.வரி கொடுங்க.பணம் எங்கே போகுதுன்னு கேட்காதீங்க.கேட்டு பதில் வரும்,குற்றவாளிகளை இவர் கூண்டில் ஏற்றுவார் என்றெல்லாம் பகல் கனவு கண்டால் நாமெல்லாம் கேனையன்கள்....
Sathish - NinhBinh,வியட்னாம் 2010-08-15 05:10:50 IST
All the field there is corruptions. Finally its come to sports also. My god!! If the same continues in India will never become powerful country. Happy Independence Day !! Barath Matha ki Je!!...
V.Subbarao - Singapore,இந்தியா 2010-08-15 05:01:58 IST
2003 இல் ரூ.1,200/= கோடியாக அனுமதிக்கப்பட்ட அளவு ரூ.45,000/=கோடியாக மாற்றி அனுமதி தந்த மந்திரிசபை கூட்டம் எது, எப்போது, எவ்வாறு. ஒரு விளக்கமில்லாமலா அதிகரிக்கப்பட்டது. பார்லிமென்ட்டின் / திட்டக்கமிசனின் பார்வைக்காகவாவது இந்த செய்தி அனுமதிக்கப்பட்டதா . பலரும் பலப்பல வினாக்களை எழுப்பலாம் . பதிலளிக்கப்போவதும், பொறுப்புகளை ஏற்பதும் யார் ? ஒரு விடையில்லா பெரிய வினா !! வாழ்க, வாழ்க, நமது சுதந்திரம் , காங்கிரஸ் ஆட்சி திரு.மன்மோகன் சிங்க் (,Mr. CLEAN) திருமதி சோனியா தலைமையில்....
Sathish - NinhBinh,வியட்னாம் 2010-08-15 04:40:39 IST
India is big demarcate country, So the person who made corruption can escape very easily. Indian punishments are very less. Firstly need to correct the laws which containing serious punishments. So every body will scared to do the corruption and crimes. Ultimately crimes will come down. Need to cut the hands who made the corruption in the sports. Bharath Matha ki Jay!!...
ப.raj - chennai,இந்தியா 2010-08-15 01:59:35 IST
இளங்கோவன் கொள்கை-படி காமராஜர் ஆட்சி டெல்லி யில் நடைபெறுகிறதா ? கர்ம வீரர் ராகுல் (காந்தி என்று சொல்லாதீர் ), சோனியா (காந்தி என்று சொல்லாதீர் ) ஆகியோரை முதலில் காமராஜர் ஆட்சி அமைக்க சொல் . ஆந்திரா , மராட்டியம் , டெல்லி ....முதல்வர்கள் காங்கிரச்கும் , சோனியாவுக்கும் மாதம் எவள்ளவு கப்பம் கட்டுகிறார்கள் ? ஊழல் இவளவு சாதாரணமாக நடப்பதற்கு அதிக காலம் ஆட்சி செய்த காங்கிரெஸ் தான் முழு பொறுப்பு....
Ranjith Rajan - CHENNAI,இந்தியா 2010-08-15 01:58:31 IST
பேசாம இன்றைய ஊழல் ன்னு தினமலர் ல ஒரு பக்கம் ஒதுகிடுங்க. டிராபிக் போலீஸ் ல இருந்து பெரிய அரசியல்வாதி வரை யாரா இருந்தாலும் போட்டோ போட்டு அசிங்கபடுத்துங்க. MEDIA நீங்க செய்யலை ன்னா வேற யாரு செய்வா ?? சினிமா நடிகைகள் விபச்சாரம் பத்தி போட்டு வாங்கி கட்டுன மாதிரி ஆகாம வலுவான ஆதாரம் இருந்தா கண்டிப்பா இது மாதிரி செய்தி எல்லாம் போடுங்க. COME ON !! ரகசிய கேமரா எடுத்துகிட்டு ஊரை சுத்தி வாங்க !!...
அ நடராஜன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர் 2010-08-15 01:52:25 IST
இன்று ஆரம்பமான இளையோர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்ற சிங்கப்பூரை பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக