சம்பாஷணை: மேலோகத்தில் பிரபாகரனும் பாலசிங்கமும்.
மேலோகத்தில் பாலசிங்கம், பிரபாகரன், தமிழ்ச்செல்வன், நடேசன் மற்றும் புலிகளின் தளதபதிகள் கூடிக்கதைத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரபாகரன்: அண்ணை நீங்கள் போனபிறகு எல்லாமே தலைகீழாகப்போயிட்டுது. பார்த்தீங்களா நீங்க போன கொஞ்ச நாளிலேயே நாங்களும் உங்களிட்ட வந்திட்டம்.
பாலசிங்கம்: இப்பாவது புரியுதா 30வருடங்களாக இயக்கத்தை யார் கட்டிக்காத்து வைச்சிருந்தது என்று. பாலசிங்கத்தின் வாய் இல்லாவிட்டால் புலி இயக்கத்தை ஒரு நாயும் தேடியிருக்காது.
பிரபாகரன்: நீங்களும் தமிழ்ச்செல்வனும் அடுத்தடுத்து இல்லாமல் போயிட்டியள். நடேசனை அரசியல் ஆலொசகராகப்போட்டும் ஒன்றும் சரிவரவில்லை.
பாலசிங்கம்: நடேசனுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம். நடேசனை அரசியல் பிரிவுக்கு தலைவராக போட்டதை விட இயக்கத்தை கலைச்சிருக்கலாம்.
பிரபாகரன்: எல்லாப்படைகளும் எங்களிட்டை இருந்துது. ஆனால் முள்ளிவாய்க்கால் வரை தலை தெறிக்க ஓடி கடைசியில் ஒட்டுமொத்தமாக மாண்டு போனம். சர்வதேசமும் எங்களுக்கு உதவவில்லைத்தானே
பாலசிங்கம்: உனக்கு அரசியல் தெரியாது. ஆயதத்தை மட்டும் வைத்து சிங்களவனை வெட்டி விழுத்தலாம் என்று நினைச்சாய். நான் சொன்னதையெல்லாம் காதிலை விழுத்தவும் இல்லை. நோர்வேக் காரன் மாதத்திற்கு மூன்று முறை வந்தபோதும் அவனட்டை மாதம் மும்மாரி பொழிகிறதா என அவனைக் கேட்டுத் தொலைத்தாய். நீ திருந்தமாட்டாய் என அவனும் துண்டைக்காணேம் துணியைக்காணோம் என ஓடிப்போயிட்டான். இப்ப பார் மண்டையில கொத்து வாங்கி இஞ்ச வந்த சேர்ந்திருக்கிறாய்.
பிரபாகரன்: சரணடைஞ்சு பார்த்தன். அதுவும் சரிவரவில்லை
பாலசிங்கம்: நீ இந்தியாவைப் பேய்க்காட்டினாய், பிரேமதாசாவிற்கு ஆப்பு வைத்தாய். சந்திரிகாவிற்கு கண்ணைப் பறித்தாய். ரணிலை தோற்க வைச்சாய். ஆனால் ராஜபக்ஷ பிரதர்ஸை மட்டும் ஏமாத்த முடியவில்லை. நீ மற்ற ஆட்களுக்கு செய்ததை உனக்கு செய்து போட்டாங்கள்.
பிரபாகரன்: நீங்க போனபிறகுதான் உங்கட அருமை தெரிஞ்சுது. ஆனால் இவ்வளவு கெதிக்கு மேல வந்து சேருவம் எண்டு நான் நினைக்கவில்லை.
பாலசிங்கம்: நான் கண்ணை மூடுகிற கடைசித்தறுவாயில் தந்தை செல்வா சொன்னதுபோலத்தான் கடவுள்தான் உன்னை காப்பாத்த வேணும் என நினைச்சுத்தான் கண்ணை மூடினன். எனக்காவது மாலை மரியாதை எண்டு மிகப்பெரிய அளவில செத்த வீட்டை செய்து முடிச்சாங்கள். உனக்கு வந்த நிலமை ஒரு பிச்சைக்காரனுக்கு கூட வந்திருக்காது. இண்டை வரைக்கும் உனக்கு அஞ்சலி செலுத்த ஆளில்லை.
தமி;ழ்ச்செல்வன்: சாமி பட கிளைமாக்ஸ் மாதிரி தலைவர் தலைமறைவு என சனம் நினைச்சுக் கொண்டிருக்கு ஹி ஹி ஹி…….
பிரபாகரன்;: வெளிநாட்டில இருக்கிற நம்மட சனம் எல்லாத்தையும் செய்து பார்த்தும் சர்வதேச சமூகம் உதவிக்கு வரவில்லையே
பாலசிங்கம்: வெளிநாட்டில எங்கட சப்போர்ட்டசைப் பற்றி எனக்குத் தெரியாதா மாவீரர் உரையில் நாலு தூஷணப்பகிடியும் சந்திரிகாவை யார் வைச்சிருக்கிறது எண்டதைப் பற்றிக் கதை;தும் கைதட்டல் வாங்கேலேயா. அரசியல் விளங்காத மந்தைக்கூட்டங்களாத்தனே அவங்கள வைச்சிருந்தம். போராட்டம் எண்டால் எம்பசியை உடைப்பதும் ரோட்டில் படுத்து உருள்ற போராட்டத்தை நடாத்தினால் எந்த வெளிநாட்டுக்காரன் எமக்கு ஆதரவு தருவான். இந்த விசர்க்கூட்டங்கள் இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் கெடுத்துப்போட்டுதுகள்.
பிரபாகரன்: கடைசியா ஓபாமா கப்பல் அனுப்புவார் என நம்பியிருந்தன். அதுவும் சரிவரவில்லை.
பாலசிங்கம்: எப்படி அனுப்புவாங்கள். உன்னை மாதிரியான ஆட்களை கடைசியில் கைவிட்ட கதைகள் அமெரிக்காவின் சரித்திரத்தில் ஏராளம். இதை நீங்க படிச்சாய். பங்கருக்க இருந்து ஹாலிவுட் சண்டைப்படங்களைத்தானே பார்த்துக் கொண்டிருந்தாய்.
பிரபாகரன்: அப்பவெல்லாம் நீங்கள் என்னோடுதானே இருந்தனீங்கள். ஏன் என்னை அரசியல் சொல்லித்தரவில்லை.
பாலசிங்கம்: நான் ஏன் புலி இயக்கத்துக்குள் வந்தனான். முப்பது வருடமாக புலி இயக்கத்தைப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்தனான் எண்ட விஷயம் உனக்கு விளங்கக்கூடாது எண்டுதான் உனக்கு அரசியல் படிப்பிக்கேல.
பிரபாகரன்: அப்படியெண்டால் நீங்கள் உங்கட தேவைக்காகத்தானா எங்களைப் பயன்படுத்தீனீங்கள்.
பாலசிங்கம்: அதுதான் சர்வதேச அரசியல். தமிழ்மக்களைப்பற்றி எனக்கென்ன கவலை. அதுகள் சாகிறதைப்பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும். ஏகாதிபத்தியங்களுக்கு உன்னை மாதிரி முட்டாள்கள்தான் தேவைப்படுகிறார்கள்.
பிரபாகரன்: கடைசியில் எனக்கு கெட்டபெயர்தானா?
பாலசிங்கம்: அதிலென்ன சந்தேகம். ஒரு லட்சம் தமிழ்மக்களின் சாவுக்கான பழி எல்லாம் உன் தலையில்தான். நான் தப்பியிட்டன்.
பிரபாகரன்: நான் செத்தாலும் என் போல பலபேர் முளைப்பார்கள்.
பாலசிங்கம்: முளைப்பார்கள். ஆனால் உன்னைப்போல் இருக்கமாட்டார்கள். இப்ப பார். கே.பியே அரசாங்கத்துடன் போயிட்டான்.
பிரபாகரன்: என்னண்ணை சொல்றியள். கே.பி அரசாங்கத்துடன் சேர்ந்திட்டாரா?
பாலசிங்கம்: கே.பி மட்டுமல்ல. வெளிநாடுகளில் இருந்தும் எங்கட ஆட்கள் பலபேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக சேர்ந்திட்டாங்கள்.
பிரபாகரன்: இப்ப இயக்கத்தின்ர நிலமை எப்படி இருக்குது அண்ணை.
பாலசிங்கம்: தமிழீழத்தை நாடு கடத்தி விட்டாங்கள். ஆளையாள் தங்களுக்குள் அடிபடுறாங்கள். கொஞ்சப்பேர் வெளிநாட்டிலுள்ள இலங்கை எம்பசிகளில் தவங்கிடக்கிறாங்கள்
பிரபாகரன்: நான் இருக்கேக்க கட்டுக்கோப்பாக வைச்சிருந்தன். இப்படியாகும் என நினைக்கேல.
பாலசிங்கம்: உனக்கு யாழ்ப்பாணத்தானப் பற்றித் தெரியாது. முன்னுக்கு எவன் நிக்கிறானோ அவனுக்குப் பின்னால நிக்கும். அவன் விழுந்து விட்டால் அவனை ஏறி மிதிக்கும். அரசியல் தெரிஞ்ச படியால் விஷயம் விளங்குறதுக்குள்ள நான் மாலை மரியாதையோட இஞ்ச வந்து சேர்ந்திட்டன்.
பிரபாகரன்: இனி தமிழ்மக்களின்ர நிலமை என்னமாதிரிப் போகும் அண்ணை.
பாலசிங்கம்: நீ இஞ்ச வந்திட்ட படியால் நிம்மதியாக இருக்கும் கொஞ்சகாலத்திற்கு நீ விதைச்சு விட்டு வந்த தமிழ்த்தேசிய வெறி நிண்டு கூத்தாடும். ஆனால் அதுவும் நிண்டு பிடிக்காது. இன்னும் இரண்டு தலைமுறை போகவேணும்.
பிரபாகரன்: மேல நாங்க இனி வேறு இடம்தான் பார்க்க வேணும். எங்கு போனாலும் நாங்க போட்டுத்தள்ளினவங்கள்தான் நிக்கிறாங்கள். நல்ல பாதுகாப்பான இடம் இருந்தால் சொல்லுங்க அண்ணை
பாலசிங்கம்: இப்போதைக்கு சந்தனக்கடத்தல் வீரப்பன் இருக்கிற இடம்தான் பாதுகாப்பானது. அங்க போகலாம்
பிரபாகரன்;: அண்ணை கெதிக்கு இடத்தை காலிபண்ணுவம். தூரத்தில ஒராள் வருகுது.
பாலசிங்கம்: யாரது.
பிரபாகரன்: இரத்தினசபாபதி அண்ணை. கிட்ட வந்தால் போத்தலுக்கு காசு கேட்கும்.
உடனடியாக அங்கிருந்து அனைவரும் இடத்தைக் காலி பண்ணுகிறார்கள்
www.teavadai.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக