கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர்.
நான் அரசியலுக்கு வந்து 28 ஆண்டுகளாகின்றன. இதுபோல மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் எங்கும் பார்த்ததில்லை.தி.மு.க., ஆட்சியின் நான்கு ஆண்டு காலம் முடிந்து விட்டது. இப்போது தேர்தல் ஆண்டில் உள்ளோம். ஒன்பது மாதங்களில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் ஓட்டு போடுவது மக்களின் கையில் உள்ள சிறந்த ஆயுதம்.முதல்வர் கருணாநிதி, உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளார். அவரது சொத்துக்கணக்கை பார்த்தால், கால்குலேட்டருக்கும் கிறுக்கு பிடித்து விடும். கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசி மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த, அரசு எதையும் செய்யவில்லை. கேட்டால், மத்திய அரசு மீது பழிசுமத்துகிறார். மத்திய, மாநில ஆட்சியில் இருப்பது தி.மு.க., தான்.மறைமுகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டு, இல்லை என்கிறார். கர்நாடகாவை விட, தமிழகத்தில் குறைவு தான் என்கிறார். மின் கட்டண உயர்வு, ஆந்திராவை விட இங்கு குறைவு தான் என்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தை விலையைக் காட்டி, கருணாநிதி ஏமாற்றுகிறார்.
தமிழக விவசாயத்தை, காவிரியைக் கழித்து விட்டு கணக்கிட முடியாது. மொத்த பாசனத்தில் 85 சதவீதம் காவிரியை நம்பித் தான் உள்ளது. வறண்ட காவிரியை வற்ற வைத்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. 1924ம் ஆண்டு கர்நாடகா - தமிழகத்துக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. 50 ஆண்டுகள் அமலில் இருந்த அந்த ஒப்பந்தத்தை, 1974ம் ஆண்டு புதுப்பிக்க தவறி விட்டார் கருணாநிதி. ஒப்பந்தம் காலாவதியாவதை உணர்ந்த கர்நாடகா அரசு, அணைகளைக் கட்டியது. அதை தடுக்க கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, காவிரி விஷயத்தில் அவர் செய்த முதல் துரோகம்.அதன்பின், இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என 1971ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஆண்டில் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இது, இரண்டாவது துரோகம். 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியது மூன்றாவது துரோகம். ஐகோர்ட் உத்தரவின்படி 1990ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் சேர்த்து 192 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்கவேண்டும் என, 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது நான்காவது துரோகம்.
அதற்குக் காரணம், கர்நாடகாவில் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான வணிக சம்ராஜ்யங்களை பாதுகாக்க, கர்நாடகாவை விரோதிக்க விரும்பாமல், தமிழக விவசாயிகளின் உரிமைகளை துளியும் கவலையில்லாமல், தாரை வார்த்துள்ளார். நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சை, பாலைவனமாக மாறியுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தர, கருணாநிதி துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
இடையில், பல முறை பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கே அம்மாநில முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், காவிரி நீரைக் கேட்கவில்லை. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகு, காவிரியில் நீர் திறந்து விடக் கேட்டு, கர்நாடகா முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஆர்ப்பாட்டம் அறிவித்த பிறகே, மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு இருந்திருக்காது.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு : ஜெயலலிதா சூசகம் : காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு குறித்து ஜெயலலிதா பேசியதாவது:"தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு' என்று நான் சொல்வதற்கு கருணாநிதி கோபம் அடைகிறார். தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி முறையில் ஆட்சி அமைக்க மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஆனால், சபாநாயகர் தவிர தற்போது தி.மு.க.,விடம் 99 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மை இல்லாத தி.மு.க., தான் அரசு அமைத்து ஆட்சி நடத்துகிறது. இதை எப்படி மெஜாரிட்டி அரசு என்று சொல்லமுடியும்? காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதால் தான் கருணாநிதி அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரசை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய "பரந்த' மனம் கருணாநிதிக்கு இல்லை. ஆகையால், காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், தி.மு.க.,வினருக்கும் மட்டும் அமைச்சர் பதவிகளை அவர் மத்திய அரசிடம் வற்புறுத்தி பெற்றுக் கொண்டுவிட்டார்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.ஜெயலலிதா தன் பேச்சில், "பரந்த மனது கருணாநிதிக்கு இல்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார். அப்படி பரந்த மனது உள்ளவர் தான், பரந்த மனது இல்லாதவர் பற்றி குறைகூற முடியும் என்ற அடிப்படையில் பார்த்தால், "கண்டிப்பாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்ற அழைப்பு தான்' என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கருணாநிதியை எப்படி அழைப்பது? திருச்சியில் ஜெயலலிதா விளக்கம் : திருச்சியில் அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தியாவில் பெருமை மிக்க மாநிலமாக விளங்கிய தமிழகம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கீழாக மாறிவிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதை மாற்றும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. 1,000 ரூபாய் கொடுக்கிறார்களே என ஏமாந்து ஓட்டு போட்டு விட வேண்டாம். குடும்ப ஆட்சியை வீழ்த்தி புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆளும் கட்சியை கண்டித்து தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எங்காவது எதிர்க்கட்சியை கண்டித்து ஆளும் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு கேவலம் இங்கு நடந்துள்ளது. 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது என்மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டனர். 12 வழக்குகளில் இருந்து வெளிவந்து விட்டேன். நீதிமன்றமே தீர்ப்பு அளித்து விட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று கருணாநிதியால் போடப்பட்டது. பெங்களுரு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை ஏழு ஆண்டுகளாக இழுத்தடித்தது கருணாநிதி தான். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதனால், வழக்கை நான் தாமதப்படுத்துவதாக கூறி வருகிறார். நான் ஆமாம் என்று சொல்ல வேண்டும், சிறைக்குள் சென்று தண்டனை அனுபவிக்க வேண்டும், தேர்தலில் போட்டியில்லாமல் ஜெயித்து விடலாம் என கருணாநிதி நினைக்கிறார்.இப்படிப்பட்டவர் முதல்வராக இருக்கலாமா? கருணாநிதி பெயரை சொல்லுவதால் வேதனைப்படுகிறாராம்.
கோவையில் அ.தி.மு.க., கூட்டத்தை கண்டு மிரண்டு போய், பிரியாணி, மதுபாட்டில் கொடுத்து கூட்டத்தை கூட்டினார். 30 சதவீத அளவு கூட்டம் கூட அங்கு இல்லை. ஜெயலலிதா என்ற பெயரை என் பெற்றோர் எனக்கு வைத்தனர். நேரு, இந்திரா, காமராஜர் பெயரை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைக்கிறோம்.ஜெயலலிதா சொல்லும் போது கோபம் வருகிறது. எம்.ஜி.ஆர்., அழைத்த பட்டப்பெயர் சொல்லித் தான் இனி கூப்பிடப்போகிறேன். அது தான் தீயசக்தி. இனி, "திருக்குவளை தீயசக்தி' என்று தான் அழைப்பேன்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.தொடர்ந்து, தி.மு.க., ஆட்சியை கண்டித்து ஜெயலலிதா கண்டன கோஷங்கள் முழங்க, கட்சியினர் அவற்றை திரும்பக் கூறினர்.
அ.தி.மு.க., ஆர்ப்பாட்ட துளிகள் வருமாறு:* ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் என, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க.,வினர் வந்திருந்தனர்.
* நேற்று முன்தினமே அ.தி.மு.க.,வினர் திருச்சிக்கு படையெடுத்தனர். ஜெயலலிதா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோ, இல்லையோ போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* எம்.ஜி.ஆர்., இளைஞரணியினர் வெள்ளை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும், ஜெயலலிதா பேரவையினர் பச்சை நிற சட்டை, பேன்ட், தொப்பி அணிந்தும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை அண்ணா தொழிற்சங்க பேரவையினர் 350 பேர் சபாரி உடையணிந்து மேடையை சுற்றி பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
* மைதானத்தை சுற்றியிருந்த மரங்கள், ப்ளக்ஸ் போர்டுகளில் தொண்டர்கள் ஏறி அமர்ந்திருந்தினர். சிலர் ஸ்பீக்கர் மீது ஏறிநின்று மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர் பாலகங்கா மேடையில் இருந்தபடி அவர்களை கீழே இறங்கும்படி கூறினார்.
* மதியம் ஒரு மணியிலிருந்தே குழந்தைகள், முதியவர், பெண்கள், ஆண்கள் என லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்தனர். கடும் வெயில் வாட்டி வதக்கியதையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கானோர் ஜெயலலிதா வரும் வரை மைதானத்தில் காத்திருந்தனர். ஜெயலலிதா பேசத் துவங்கிய சிறிது நேரத்தில் மேடை பின்புறம் இருந்த தொண்டர்கள் கலைந்தனர்.
* ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்கு போதிய குடிநீர் வசதி செய்யப்படவில்லை. நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்ததாலும், குடிநீர் இல்லாததாலும் மேடை அருகே மூன்று பேர் மயங்கினர். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பெண்கள், முதியவர்களை போலீசாரும், ஜெ., பேரவையினரும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்தனர்.
* ஜெயலலிதாவை காண மேடையைச் சுற்றியிருந்த வீடு, வீட்டு மாடி, ப்ளக்ஸ் போர்டு, மரங்களில் தொண்டர்கள் ஏறிநின்றிருந்தனர். மேடையின் இடதுபுறம் பெரிய அளவில் ஜெயலலிதாவின் ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில், சிலர் ஏறிநின்றனர். அப்பகுதியில் தான் பத்திரிகையாளர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ப்ளக்ஸ் போர்டு லேசாக ஆடியதால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டனர்.
அமர் - Chennai,இந்தியா
2010-08-15 17:51:01 IST
ஒருவர் கூறியது போல், என் கண்கள் கலங்கியது இந்த கூட்டத்தை பார்த்து, இந்த அரக்கனின் ஆட்சியை மாற்றக்கூடிய சக்தி ஒரு பெண்ணிடம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. எனது உறவினர் நேற்று திருச்சியிலிருந்து வந்து கொடுத்த தகவல், காவல் துறையினர், திருச்சியின் எல்லா நுழவுப்புதியிலும் வாகனங்களை அனுமதிக்காமல் திசை திருப்பினர். அதே சமயம் அதிமுக வெற்றிபெறும் என்பதும் நிச்சயமல்ல. தானியங்கி வாக்கு பதிவு திமுகவுக்கு ஒரு நல்ல வரப்ரசாதம், பல இடைதேர்தல்களில் இது தெரியவந்தது....
guru - tirupur,இந்தியா
2010-08-15 17:40:56 IST
கோயமுத்தூரில் கூடிய ஜனத்திரளைக் காட்டிலும் பன்மடங்குக் கூட்டம்....! எங்கெங்கு காணினும் மனிதத்தலைகள்...! கோயமுத்தூரைப் பின்னுக்குத் தள்ளியது திருச்சி ! பணத்திற்கோ, பாட்டிலுக்கோ, பிரியாணிக்கோ கூடிய கூட்டமல்ல என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது அதிமுக.. இதையெல்லாம் விட ஜெயலலிதாவின் கேள்விக்கணைகள் மென்மேலும் கூராகி வருகிறதே....கோயமுத்தூர் விட்டது குத்து என்றால் திருச்சி கொடுத்திருப்பது கும்மாங்குத்து...! சபாஷ் அம்மா! {அம்மா எப்போதுமே ஒப்பிட முடியாதவர் }...
பில்லா பெரியசாமி - கரூர்.,இந்தியா
2010-08-15 17:26:08 IST
அ.தி.மு.க கோவையில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்ட கூட்டத்தைக் கூட்டினர். போட்டிக்கு தி,மு.க வும் அதே அளவில் கூட்டத்தைக் கூட்டியது.திருச்சியில் அ.தி.மு.க வின் மாபெரும் கூட்டம்.தி. மு.க வும் இதே கூட்டத்தைக் கூட்டும். கூடிய கூட்டமென்றால் இவர்களுக்கெல்லாம் வேறு பொழைப்பே இல்லையா! கூட்டிய கூட்டமென்றால் இரு கட்சிகளுக்கும் செலவு செய்ய இவ்வளவு பணம் ஏது ?...
சாமுவேல் - uk,இந்தியா
2010-08-15 17:24:57 IST
எங்கள் அம்மா வின் ஆப்பு தொடரும்...
kannan - bahrain,இந்தியா
2010-08-15 17:04:09 IST
அம்மா ஆச்சி வந்தால் தான் தமிழகம் நல்லா இருக்கும் கருணாநிதி ஆச்சி வந்தால் வெட்டு குத்து தான் அதிகம் அதனால் ஆச்சி மாறுவதே
Shabeer - Manama,பஹ்ரைன்
2010-08-15 16:42:18 IST
வேண்டாம் ஜெயா, இன்னும் ஓர் முறை உன் ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் தாங்கமாட்டார்கள்.நீயும் கொடநாடு எஸ்டேட்ல் நிம்மதியாகயிரூ, தமிழ் மக்களும் நிம்மதி....
ரமேஷ் ம - ஜெட்டாஹ்,இந்தியா
2010-08-15 16:34:33 IST
இவர் சொல்ற எல்லா பிரச்சனையும் இவர் ஆட்சியுல்ம் இருக்கத்தான் செய்ஞ்சது சும்மா மக்களோட மறதிதான் இவங்களோட பலம்....
அம்மா விசுவாசி - ராஜபாளையம்,இந்தியா
2010-08-15 16:30:50 IST
அம்மா சூப்பர் நீங்க பேசுனது அனைத்தும் அவர்களுக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருக்கும்.... வாழ்க அம்மா.... வளர்க அவரது பணி.......
பி.பட்டுராஜ் - துபாய்,இந்தியா
2010-08-15 16:24:38 IST
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நாடு செழிக்க மக்களின் அடிப்படை தேவைகள் (கல்வி,உணவு,வசிப்பிடம்),உள்கட்டமைப்பு(சாலை வசதிகள்),சுகாதாரம் ஆகியவை முக்கியம்.இந்த மூன்றும் ஜெயலலிதா ஆட்சியில் செய்ததைவிட கருணாநிதி ஆட்சியல் அதிகமாக மக்களுக்கு கிடைத்துள்ளது.திமுக அதிமுக இருவரது ஆட்சியிலும் யார் திருடாமல் இருந்துள்ளார்கள்.திருடர்களை தேர்ந்து எடுத்ததே நாம் தான்.ஆகையால் அவர்களை குற்றம் சொல்லிபயனில்லை.நல்லவர்களை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்....
நத்தம் சா.சுரேஷ்பாபு. - chennai,இந்தியா
2010-08-15 16:22:41 IST
திருச்சியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரு மாற்றத்தை விரும்பி கூடிஉள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. கருணாநிதியின் மாய்மாலம் இனி பலிக்காது.ஆட்சி மாற்றம் நிச்சயம் வரவேண்டும்....
ஜ.ஸ்ரீனிவாச ரங்கன் - Dubai,இந்தியா
2010-08-15 16:16:28 IST
இவர் என்ன செய்தாரம் முதல்வராக இருந்த பொழுது .இவர் பேசுவது எல்லாம் மக்களை முட்டாள் என்று நினைத்து கொண்டு .ஜெயலலிதா டோடல் வேஸ்ட்...
ப சித்தார்த்தன் - டாஹ்,கத்தார்
2010-08-15 15:38:05 IST
கலைஞர் ஆட்சியில்தான் சென்னையில் நிறய மேம்பாலங்கள் பெருகின. கத்திபாரா பாலம் ஒன்றே போதும். நல்ல போக்குவரத்து வசதிகள்.அதிகமான தொழிற்சாலைகள் . ஏழை மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. கல்வியில் தமிழகம் சிறந்த மாநிலம். மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலை கழகம் என்று மாநிலத்தில் நல்ல வளாச்சி உள்ளது. தமிழத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெற போவது என்னமோ திமுகதான்....
லோகநாதன் - ஹைதராபாத்,இந்தியா
2010-08-15 15:34:59 IST
புரட்சிதலைவி ஜெயலலிதா அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியமானதுதான் இலவசம்! இலவசம்!! என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்.. இலவச காஸ் அடுப்பு கொடுத்து காஸ் விலையை உயர்த்துகின்றனர் கேட்டால் மத்திய அரசை சாடுகிறார். அவர் மத்ய அரசில் அங்கம் வகிப்பதை மறந்து விட்டார் போல் தெரிகிறது.... சொகுசு பேருந்து என்று சொல்லி பேருந்து கட்டணத்தை உயதுகின்றனர் மறைமுகமா....சரியான மிசாரம் இல்ல ஆனால் மின் கட்டணம் மட்டும் உயரும்... இந்த அவல நிலை மாற வேண்டும் தமிழகத்தில்... இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகம் இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது .......
Kannan - Chennai,இந்தியா
2010-08-15 15:34:29 IST
எப்பொழுது, இளைஞ்சர்கள்,நீங்கள் என்னவாக விரும்புகின்றீர்கள் என்கின்ற கேள்விக்கு, பெருமைக்குரிய அரசியல்வாதியாக விரும்புகின்றேன் என்று பதில் கூறுவார்களோ அன்று தான் நமக்கு பொற்காலம் எனக்கூறலாம். அந்த நாள் நமது சந்ததிகளுக்கு கிடைக்குமானால் அதுவே நாம் நமது பிள்ளைகளுக்கு விட்டுச்சென்ற வசந்த வாழ்வாக நாம் கொள்ளலாம்....
D.ஜெயசங்கர் - மறைமலைநகர்,இந்தியா
2010-08-15 14:37:32 IST
ஒவ்வொரு தமிழனும் ஒரு தகுதியுள்ள நபர் ஒருவருக்கு வாக்களிக்க பழகும்போது தானாக ஒரு நல்ல தலைவர் உருவாகுவது நிச்சயம். அதுவரை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சொன்னது போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றை தான் ஆட்சியில் அமர்த்த முடியும். அதற்கு இந்த சுதந்திர நன்னாளில் சபதம் எடுப்போமா? அல்லது எல்லாரையும் போல, அன்றைய தின கூலிக்காக அதிகம் செலவழிக்கும் நபருக்கு ஒட்டு போடபோகிறோமா?...
ரா.தங்கதுரை - கடலூர்,இந்தியா
2010-08-15 14:32:46 IST
அம்மா ஜெய்க்கனும் அரசியல்ல மாற்றம் வரணும் தமிழ் நாடு முன்நேரனும்...
palay kannan - திருநெல்வேலி,இந்தியா
2010-08-15 14:24:26 IST
admk must try to convert this as vote bank by joining with the other parties who are identical to their idiology kannan...
மீகண்ணன் - Chennai,இந்தியா
2010-08-15 14:23:49 IST
எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்ட பெயர் தான் இவருக்கு, பொதுவாக முதல்வர்கள் நல்லது செய்வபர்களுக்கே மட்டுமே நல்லது செய்வார்கள் ஆனால் இவர் கெட்டது செயய்தவர்க்கும் நல்லது செய்யும் ஒரே முதல்வர். பல தோல்விகளை கண்டாலும் கடின உழைப்பால் இன்று இந்த நிலைக்கு முநேரியவர். வேறு யாரையும் உதாரணம் சொல்லமுடியுமா?...
ramasami - chennai,இந்தியா
2010-08-15 13:52:16 IST
அட நாம என்ன சொரனைகெட்ட தமிழர்கள் என்று நிரூபிக்கனுமா? DMK அல்லது ADMK வை விட்டால் நமக்கு நாதியே இல்லையா ?...
சுரேஷ் - singapore,இந்தியா
2010-08-15 13:42:36 IST
மக்கள் கூட்டம் என்ற ஒரே காரணத்தைமட்டும் வைத்து இப்போதே முடிவு செய்ய முடியாது. ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு செய்யும் பணியே முக்கியமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் உங்கள் ஆட்சியின் அவலத்தை பற்றி மீண்டும் இதே தினமலரில் கருத்து சொல்லி சொல்லி.. நேரமே வீண் மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள் கடைசியாக பாதிக்கப்படுவது நாம்....
ராஜேஷ்குமார் - திருச்சி,இந்தியா
2010-08-15 13:23:47 IST
எத்தன கூட்டம் வந்துச்சோ அத்தனை ஓட்டுதான் தமிழ்நாட்டுல மொத்தமா உங்களுக்கு விழப்போகுது. வட்ட மாவட்டங்கள் எல்லாம் உட்டதை அப்புறம் ஆட்சிக்கு வந்ததுக்கப்புறம் புடுச்சுக்கலாம்ன்னு நெனச்சு கையில் இருந்ததை எல்லாம் தொண்டரடிப்பொடிகளின் தண்ணிக்கும் கோளிபிரியாணிக்கும் லாரி வாடகைக்கும் செலவு பண்ணினதுதான் மிச்சம். திருச்சி நகரம் நாறுனதுதான் மிச்சம்....
மு.கா.அப்துல் அலி தமிழன் - அபுதாபி,இந்தியா
2010-08-15 12:19:54 IST
நாடுமுன்னேற நாட்டுமக்கள் நலம்பெற நல்லாச்சிவெண்டும் தமிழகத்தில் தற்போது ரவுடிசம் கொலை கொள்ளை மீண்டும் அதிகரித்துவிட்டது மேலும் கல்விக்காக பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு அதாவது வசதி இல்லதவகளுக்கு அரசு முலு ஆதரவு அளிக்கவேண்டும் ஆகயால் சுதந்திரநாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் ஜாதி மதம் பார்க்காமல் மக்களோடு மக்களாய் மக்களின் தலைவியாய் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்...
எம். இஸ்மாயில் லிபியா - திருச்சிராப்பள்ளி,இந்தியா
2010-08-15 12:13:10 IST
அம்மையார் எப்படியும் சி எம் நாற்காலிக்காக தமிழக மக்களை முட்டாளாக்க வேண்டி நாடு தோறும், மாவட்டம் தோறும் ஆர்பாட்டம் போன்ற செயல்களில் ஈடு பட்டு பவர்க்கு வர துடிக்கிறார் அனால் என் தமிழ் நாட்டு மக்கள் உன்னையும் உன் கூட்டத்தார்களையும் மறக்கவும் நன்னிக்கவும் மாட்டார்கள் நடத்துங்கள் உங்களின் கபட நாடகத்தை, உங்களுக்கு தான் மரண அடி விழும்....
simbu - cuddalore,இந்தியா
2010-08-15 12:03:59 IST
nee mudhalil rm veerappan eluthiyathi padi. appa thanintha pombalaa evvalavu mosamanavannu therium...
BABU - DELHI,இந்தியா
2010-08-15 12:00:00 IST
கருணாநிதியின் ஊழல் ஆட்சி முடியும் நேரம் வந்து விட்டது. மக்களை பணம் கொடுத்து வாங்க நினைத்தாலும் இனி அது நடக்காது. இமாலய அளவு ஊழலில் மட்டும் தான் தமிழகம் முன்னேறி உள்ளது. குடும்ப ஆட்சியை மக்கள் நன்று புரிந்து கொண்டு விட்டார்கள். தமிழக மக்களை இலவச விநியோகத்தின் மூலம் பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டார்கள். மணல் கொள்ளை, நிலம் ஆக்கிரமிப்பு, கல்வி, உரம் எல்லாவற்றிலும் கொள்ளை. உதய சூரியன் அஸ்தமிக்கும் நாள் வேறு தூரம் இல்லை....
தஞ்சை.முத்துகுமாரசாமி. - dubaiUAE,இந்தியா
2010-08-15 11:59:52 IST
நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் இனி எப்படை வெல்லும்? நாளை நமதே!! மலரட்டும் நல்லாட்சி உங்கள் தலைமையில்.!!! தஞ்சை.முத்துகுமாரசாமி....
ஆறுமுகம் - Madurai,இந்தியா
2010-08-15 11:58:31 IST
எனது கருத்து.,ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும்., இல்லை என்றால் இவர்களை கை பிடிக்க முடியாது. தவறுகள் அதிகரிக்கும்......
செந்தில் முருகன் - madurai,இந்தியா
2010-08-15 11:52:44 IST
காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என்று கூறும் திமுக அல்லகைகளே, ஏன் உங்களால் கோவையில் போட்டி மாநாட்டில் கூட்டத்தை சேர்க்க முடியவில்லை? பேச வேண்டும் என்றால் பேசிகொண்டே போகலாம், கூட்டம் சேர்ந்தது என்பதை விட அம்மா ஜெயலலிதா எடுத்து வைத்த குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.... மக்கள் இந்நேரம் இந்த குற்றச்சாட்டுக்களை யோசித்து பார்பார்கள். நண்பர் சந்தோஷ் சொன்னது போல், உங்கள் கூற்றுப்படி வந்தவர்கள் எல்லாரும் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் ஐம்பது. சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் போதும். வந்த பத்து லட்சம் மக்களில் நான்கு லட்சத்து ஐம்பது ஆயிரம் பேர் திமுகவுக்கு வாக்களித்தாலும், மீதம் இருக்கும் ஐந்து லட்சத்து பத்து ஆயிரம் வாக்குகளே போதுமே வெற்றி பெற.... சந்தோஷ் அவர்களே கலக்கிட்டீங்க போங்க. கூட்டி வந்த கூட்டத்துக்கும், தானாக வந்த கூட்டத்துக்கும் வித்யாசமே உங்களுக்கு தெரியல, நீங்க எல்லாம்?????????...
ச. ASHOK - chennai,இந்தியா
2010-08-15 11:52:41 IST
எல்லோருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் - கூட்டத்தை நம்பி எடை போடாதீர்கள். மக்கள் அறிவாளிகள் ....
தி க - துபாய்,இந்தியா
2010-08-15 11:48:14 IST
அம்மா சொல்வது சரி தான் இன்று ஆசியாவிலே கருணாநிதி குடும்பம் தான் நம்பர் 1 பணக்காரர்... அடுத்த ஆட்சி அம்மா ஆட்சிதான்...
ராஜன் சி திருச்சி - Altakamol,சூடான்
2010-08-15 11:37:22 IST
அம்மா உங்கள் நல்லாட்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை , எனவே கூட்டணியை பலபடுத்து , அண்ணா, எம்கிஆர் கண்ட கனவை நிறைவேற்றுக ....
சிவகுமார் - Dubai,இந்தியா
2010-08-15 11:36:31 IST
ஆணவம், அகங்காரம், பிறரை மதியாமை, கர்வம், தான்தான் என்ற இருமாப்பு, சென்ட்ரல் பிஜேபி கோவேர்ந்மேன்ட் காலை வாரியது மட்டும் தான் ஜெயலலிதா ஆட்சியின் சில சிறப்புகள்....
தினேஷ்குமார் - Erode,இந்தியா
2010-08-15 11:33:28 IST
கண்டிப்பாக admk...
கிருஷ்ணா மூர்த்தி - சென்னை,இந்தியா
2010-08-15 11:32:00 IST
இரண்டு பேருமே கொள்ளை அடிச்சவங்கதான்.. உங்க தொகுதில எவன் நல்லது செய்வான்னு நினைகிரின்களோ அவங்களுக்கு ஒட்டு போடுங்க... கட்சிய ஜாதிய எதையும் பார்காதிங்க... ஒரு ருபாய் கொள்ளை அடிச்சாலும் தப்புதான்... கோடி ருபாய் கொள்ளை அடிச்சாலும் தப்பு தான்... ஆனா எனக்கு ஒரு சந்தேகம் நம்ம அய்யாவுக்கு அவரு குடும்பம் மட்டுமே சம்பாதிக்கணும்னு ஆசை... அம்மாவுக்கு ( இவ அம்மாவை ) அய்யா மாதிரி கொள்ளை அடிக்க முடியலன்னு வருத்தமோ.... அதான் 4 வருஷமா ஜனகளை பத்தி கவலை படல.. எப்போ என்னவோ ஜனகள மேல அக்கறை வந்துடுச்சோ... 2 பெரும் உள்ளுக்குள்ள கூட்டு .. தமிழ் நாட்டை மாதி மாதி கொள்ளை அடிசுகலம்.. வேற அவனையும் விட கூடாதுநு நல்ல எண்ணம்.. போன 5 வருஷம் இவங்க தான் ஆட்சி செய்தாங்க.. அப்பவே இவங்க தண்டனை வாங்கி குடுத்து இருக்கலாம்ல.. 2 பெரும் நல்லா மக்களை ஏமாத்தி நீங்க சுகமாத்தான் இருக்கீங்க.....
கரியமாணிக்கம் ரவி - Mumbai,இந்தியா
2010-08-15 11:31:14 IST
என்னால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடிலயவில்லை. வருந்துகிறேன். நோ. ௨. கரியமாணிக்கம், திருச்சி....
ns kumar - ஈரோடு,இந்தியா
2010-08-15 11:21:04 IST
இனி நல்லது நடக்கும்......
சேகர் - kovai,இந்தியா
2010-08-15 11:20:52 IST
கோவையில் அதிமுகாவிர்க்கு கூடியகூட்டத்தைவிட அதிக கூட்டம் திமுகாவிற்கு கூடியது என்பது தான் உண்மை...
arun - chennai,இந்தியா
2010-08-15 11:11:40 IST
நாடாளுமன்ற தேர்தலில் திருக்குவளை தீயசக்தி பெற்றது போலி வெற்றி , அம்மாக்கு கூடிய கூட்டம். மிக விரைவில் தமிழகத்தில் "அம்மா" ஆட்சி "புனித ஜார்ஜ் கோட்டையில்" மலரும், திமுக பா..............., last தேர்தல் 2011...
ஆஸ்டின் - டல்லாஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-15 10:58:07 IST
இங்கே அ தி மு க காரனுங்க எல்லாம் ஒரே பீலிங்க்சுலே இருக்கானுவோ. ஒன்னு மட்டும் உறுதி . ஜெயா கரணம் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை....
பாவப்பட்ட தமிழன் - kodanaadu,இந்தியா
2010-08-15 10:55:21 IST
நல்லா பொழுது போகணும் என்றால் கொடநாடு. பொழுது போகலைன்னா இப்படி ஊர் ஊரா போய் மீட்டிங் போடுவது......மவராசி.....நீ பேசாம நிரந்தரமா கொடனாட்டுலே இரு....
Raja - SATTANKULAM,இந்தியா
2010-08-15 10:51:39 IST
தமிழ்நாட்டில் நல்ல நிர்வாகத்திறன் கொண்ட ஆட்சி வேண்டும்! அது உண்மையில் மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்களால் மட்டுமே தரமுடியும்!! மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள்!!! இந்த சுதந்திரத்திருநாளில் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் மீண்டும் நலாட்சிஅமைய வாழ்த்துகிறேன்!!!! வாழ்க தமிழகம்!!!!! வெல்க இந்தியா!!!!!! ஜெய்ஹிந்த் !!!!!!!!!! எஸ் .ராஜா...
John - Chennai,இந்தியா
2010-08-15 10:47:49 IST
Hello ADMK Guys ..Don't too much and dream..She is never going to be power for ever...
Joseph lawrance - NOWSINGAPORE,இந்தியா
2010-08-15 10:45:48 IST
இந்திய அரசியல்வாதிகள் யாவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்...
மரம் வெட்டி - Thailapuram,இந்தியா
2010-08-15 10:39:58 IST
ஜெயா அவர்களே. கூடும் கூட்டம் அனைத்தும் வோட்டுக்கள் என்று நினைத்தால் அது அரை வேக்காட்டுதனம். இப்போ இருக்கும் சூழ்நிலையில் காமெடி நடிகர் வையாபுரி கூட்டம் போட்டாலும் கும்பல் கூடும். இப்போ நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் உங்கள் ஆட்சியிலேயே தீர்வு கண்டிருக்கலாமே? நீங்களும் இரண்டு முறை முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவர் தானே? சும்மா நேரத்தை போக்க ஊர் ஊருக்கு கூட்டத்தை கூட்டி அதனால் உங்கள் கட்சி இரண்டாம்கட்ட தலைவர்களை ஆண்டி ஆக்குவது தான் உங்களுடைய நோக்கம்....
arumugam - singapore,இந்தியா
2010-08-15 10:39:32 IST
ADMK காரர் DMK வும் ,DMK காரர் ADMK வும் சாடுறது பொழைப்பா போச்சு , இதுல மக்கள்தான் முட்டாள் ,PMK காரர் அவர்கள நம்புனவர வித்துசாப்புடறது பொழப்பு ,இதுல மக்கள் தான் புத்திசாலிதனமா யோசிக்கணும்.குட்டி அரசியல்வாதிக்கு இன்னும் ஒரு வருசத்துக்கு நல்ல பிரியாணி காலம்தான் வெளுதுகட்டுங்கள் ....
உஸ்மான் பாய் - மேலகாவேரி,இந்தியா
2010-08-15 10:31:48 IST
இரண்டு முறை ஜெயா ஆட்சி நடத்தி அடித்த கேலி கூத்துகளை நாடு இன்னும் மறக்கவில்லை. ஜெயா மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது பகல் கனவு....
அசோக் - மதுரை,இந்தியா
2010-08-15 10:27:56 IST
ஏன் கண்கள் கலங்கிவிட்டானே இந்த மாபெரும் மக்கள் கூட்டம் அதை பார்த்து என் மனம் பறக்கிறது இது தான் மக்கள் சக்தி......
ram - madurai,இந்தியா
2010-08-15 10:27:25 IST
அரசு ஊழியர் டிஸ்மிஸ் -கைது, சாலை பணியாளர் பணி நீக்கம், சுடுகாடு கூரை ஊழல் , வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணம், கஞ்சா வழக்குகள், மன்னார்குடி குடும்ப கொள்ளை , மிடாஸ் மது பான ஆலை கொள்ளை அனைத்தையும் தமிழக மக்கள் மறக்கவில்லை...
தஞ்சை.ஞான.ஜெயராஜ் - துபாய்ஐக்கியஅரபுஅமீரகம்.,இந்தியா
2010-08-15 10:22:47 IST
தமிழ்நாட்டில் நல்ல நிர்வாகத்திறன் கொண்ட ஆட்சி வேண்டும்! அது உண்மையில் மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்களால் மட்டுமே தரமுடியும்!! மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள்!!! இந்த சுதந்திரத்திருநாளில் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் மீண்டும் நலாட்சிஅமைய வாழ்த்துகிறேன்!!!! வாழ்க தமிழகம்!!!!! வெல்க இந்தியா!!!!!! ஜெய்ஹிந்த் !!!!!!!!!! தஞ்சை.ஞான.ஜெயராஜ்....
AR - korea,தென் கொரியா
2010-08-15 10:21:17 IST
தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக பிடிக்கவில்லை. ஆனால் பிடிக்காத மக்கள் நிறைய பேர் வெளி நாடுகளில் தான் வசிகிறார்கள். அதனால், election நேரத்தில் தங்கள் ஓடுகளை வெளிநாட்டிலிருந்து அனுப்பினால் நல்லது. அல்லது நம் ஓட்டுகள் அனைத்தும் கள்ள ஓட்டாக திமுக-வுக்கு தான் போகும்....
ச.Mohamed yubas - திருச்சிதமிழ்நாடுஇந்தியா,இந்தியா
2010-08-15 10:21:08 IST
விரைவில் அமையும் நல்ல அரசு ஆட்சி அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .......
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-15 10:18:01 IST
ஜெயா பேச்சின் சிறப்பே "ஜனநாயகமுறையில்" வெற்றிபெறுவோம் என்பதே. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தலை ஜனநாயகமுறையில் எதிர் கொள்ளும் ஓரே கட்சி அதிமுக மட்டுமே. என்னதான் இந்த தி மு க எடுபிடிகள் ஜெயாவை திமிர் பிடித்தவள் என்று கூறினாலும் அராஜகவழியில் தேர்தலை சந்திக்கமாட்டார். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் லட்சோப லட்சம் தொண்டர்கள் குவிந்தனர். ஜெயா பேச்சின் இன்னொரு சிறப்பு அம்சம் கூட்டத்தின் கிளைமாக்ஸ் வரிகள். தொண்டர்களை பார்த்து தமிழ் நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது என்று கூறியதே. இந்த வார்த்தைக்கு நிச்சயம் பொது மக்கள் தலை வணங்குவார்கள். அமைதியான, சீரான வாழ்க்கை விரும்பும் ஒவ்வொரு மக்களின் இதயத்தையும் இந்த வார்த்தை நிச்சயம் உரசி பார்க்கும். பத்திரிகை, மீடியாக்களின் போதிய சப்போர்ட் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் தன்னம் தனியாக போராடும் ஜெயா நிச்சயம் வெற்றிபெறவேண்டும். போராடுவது அவருக்காக அல்ல. மக்களுக்காக என்பதை இனியாவது புரிந்துகொள்ளவேண்டும். ஆண்டவனை தினம் வேண்டிகொள்கிறேன் ஜெயா வெற்றி பெற. நாட்டு பற்று, மக்கள் பற்று உள்ள ஒவ்வொரு பத்திரிகைகளுக்கும் ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இனியாவது பத்திரிகைகள் ஒன்று பட்டு மக்களை காத்திட வேண்டுகிறோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக