வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

புலியாதரவாளர்கள் புலிக்கொடியுடன் ஐ.நா.கு முன்னால போனாலே ஐ.நா.சபைக்காரர்கள் முகம் சுழிக்

சிவநந்தனின் நடைக்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்.

நடைபயணம், ஊர்வலம், உண்ணாவிரதம். தீக்குளிப்பு, அமைதிப்பேரணி, சாவிலும் எழுவோம், அலைகடல் போல் எழுவோம், குதித்து எழுவோம், ஓயமாட்டோம் என பல்வேறு வகையான போராட்டங்களை போர் முடிவடைவதற்கு முன்னரான கடைசி 3மாதங்களில் தலைவரையும் தலைவரின் போராட்டத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக புலம்பெயர் புலியாதரவாளர்கள் மேற்குலக நாடுகள் முழுவதும் நின்று போடாத கூத்துக்களும் ஆடாத ஆட்டங்களும் இல்லைபுலியாதரவாளர்கள் புலிக்கொடியுடன் ஐ.நா.சபைக்கு முன்னால போனாலே ஐ.நா.சபைக்காரர்கள் முகம் சுழிக்க வெளிக்கிட்டிருவார்;கள். காசுக்காக புலிகளை ஆதரித்த நாடுகளை சில தவிர கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ்... போன்ற நாட்டினர்களுக்கு புலிக்கொடியை கண்டாலே அலர்சியாகிவிடும். முக்கியமாக ஜெனிவா நகர் வாழ் சுவிஸ் மக்களுக்கு இந்த புலிகொடியுடன் திரியும் கூட்டங்களை கண்டாலே, பயணம் செய்யும் போது பூனை குறுக்கால போறமாதிரி பார்ப்பார்கள்.

புலிகள் இலங்கையில் மே மாதம் 18திகதி அழிக்கப்பட்டதோடு அந்த நிலமை முற்றாக மாறிவிட்டிருந்தது. ஜெனிவா வாழ் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள். இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியுள்ளது. லண்டனிலிருந்து சிவந்தன் என்ற பூனையோடு (புலிகள்) சேர்ந்து இன்னும் கொஞ்ச பூனைகள் ஜெனீவா நகருக்கு குறுக்கால போவதற்கு வந்துகொண்டிருக்கிறார்களாம். அதுவும் புலிக்கொடியுடன் வருகிறார்களாம்.

சிவந்தனின் நடைபயணத்தை நாம் கொஞ்சம் உற்றுநோக்குவோமானால் இந்த நடைபயணத்தின் நோக்கம் என்னவெண்பது புரியும். அதாவது இந்த மாதரியாக புலியாதரவாளர்கள் செய்யும் நடவடிக்கைகள் யாவும் தங்களுக்கு தமிழ் மக்களிடையே ஒரு pரடிடiஉவைல யை தேடுவதும், பதுக்கி வைத்திருக்கும் புலிகளின் காசுகளை தங்களின் உல்லாச நடவடிக்கைகளுக்கு செலவழிப்பதுமே தான் இவர்களின் குறிக்கோளாகும். இதை தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கபோவதில்லை.

சிவந்தனின் நடை பயணத்தை நாம் அவதானித்த வரை இது ஒரு சுற்றுலா நடவடிக்கையாகவே இதை பார்க்க கூடியதாக உள்ளது. சிவந்தன் ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக உடையுடுத்திக்கொண்டு, இரவில் நல்ல உல்லாச விடுதிகளில் தங்கிக்கொண்டு, வடிவாக குடித்து சாப்பிட்டுக்கொண்டு வரும் வழிகளில் நல்ல இடங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு வருகிறார். எங்கெங்கு தங்கவேண்டும், எந்தெந்த இடத்தில் நடக்கவேண்டும், எந்தெந்த இடங்களில் துர்ங்கவேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே ஓழுங்கமைக்கப்பட்டபடியே சிவந்தனின் நடையோடு நடைபெற்று வருகின்றன. இவரின் இந்த நடைப்பயணத்துக்கு ஆதரவளிப்பவர்கள் நாடுகடந்த அரசமைபினராகும்.

கிட்டதட்ட 1000கிலோமீற்றர்கள் நடைபயணமாக வருபவர் எப்படியிருப்பார் என்ன மாதிரியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும், சும்மா ஊரை பேய்காட்டுவதற்காக நடந்துவருபவர் எப்படியிருப்பார் எப்படியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை நீங்கள் ஒருமுறை கண்ணுற்றால் நான்சொல்லுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை புரிந்துகொள்வீர்கள்.
ஒருவிடயம் தெளிவானது. இந்த புலிக்கொடியை தூக்கிகொண்டு யார் எந்தனை மைல்கள் நடந்து அல்லது தவண்டு போய் ஐ.நா.சபை முன் போய்நின்றாலும் எதுவும் நடக்கவோதில்லை. இப்படி வீணாக செலவழிக்கும் காசுகளை சிவந்தன் கொண்டுபோய் வன்னியில் உள்ள மக்களுக்கு கொடுத்தால் பெரிய புண்ணியமாக இருக்கும்.
http://www.youtube.com/watch?v=El8PpFK0fM0&feature=player_embedded
சிவந்தனின் இந்த நடைபயண காணொளியை நீங்கள்கொஞ்சம் கண்ணுற்றால் நான் மேலே கூறியவிடயங்கள் எந்தளவு உண்மை என்று உங்களுக்கு புரியும்.

நன்றி. ரவி பிரான்ஸ்<

கருத்துகள் இல்லை: