கோவில் திருவிழாவிற்கெல்லாம் தாய்த்திருவிழாவாம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்த திருவிழா இன்றையதினம் (15) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்றையதினம் மாலை பாரம்பரிய வழக்கத்தின்படி செங்குந்த மரபினரால் அலங்கார தேரில் எடுத்துவரப்பட்ட கொடிச்சீலையானது கந்தனுக்கு அரோகரா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர கோஷம் எழுப்பிய நிலையில் இன்றையதினம் காலை பத்து மணிக்க ஏற்றப்பட்டது.
நல்லூர் தேவஸ்தான சுற்றாடலில் சுகாதாரம் குடிநீர் மருத்துவம் பாதணி பாதுகாப்பு முதலுதவி மற்றும் ஏனைய தேவைகள் சேவைகள் அனைத்தும் சீராக இடம்பெறுவதுடன் சுமார் நாற்பது கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்திற்கென நான்கு பவுஸர்கள் ஆயத்தநிலையில் இருப்பதுடன் ஆலயச்சுற்றாடலில் நீர்விசிறும் நடவடிக்கைகளும் இடம்பெற்றவண்ணமுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றின் தொண்டர்கள் முதலுதவிக்கான ஏற்பாடுகளில் தயார் நிலையில் இருப்பதுடன் முதலுதவி சிகிச்சைக்கு மேலதிகமாக அவசர தேவையின் நிமித்தம் தேவை உடைய நோயாளரை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் முகமாக அம்புலன்ஸ் வாகன ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக