வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

7-ம் அறிவு படக்குழுவினருக்கு பெரிய ஆச்சரியமாகஒரே ஷாட்டில் ஓகே பண்ணும் ஸ்ருதி!

7-ம் அறிவு படக்குழுவினருக்கு பெரிய ஆச்சரியமாகத் திகழ்கிறாராம் படத்தின் நாயகியும் கமல்ஹாஸனின் மகளுமான ஸ்ருதி ஹாஸன்.

சினிமா, இசை, வசனம் என எந்த விஷயமாக இருந்தாலும் விரல் நுனியில் விவரம் வைத்திருக்கிறாராம்.

அதைவிட முக்கியம், எவ்வளவு சிரமமான காட்சியாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிடுகிறாராம் ஸ்ருதி. இதை படப்பிடிப்புக் குழுவினர் சொல்லிச் சொல்லி வியக்கிறார்களாம்.

இதற்கிடையே ஏழாம் அறிவு படத்தை இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். அந்தப் படத்தையும் உதயநிதி ஸ்டாலின்தான் தயாரிக்கிறார். முருகதாஸ் இயக்குகிறார். இதில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அதில் இப்போது மாற்றம். பிரபல இந்தி நடிகர் ஒருவரையே நடிக்க வைக்கப் போகிறார்களாம். ஆனால் ஹீரோயின் இதே ஸ்ருதிதான்.

ஸ்ருதி நடித்த முதல் இந்திப் படம் லக் சரியாகப் போகாததால், இப்போது 7-ம் ஆறிவு படத்தின் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்யப் பார்க்கிறாராம் அப்பா கமல்ஹாஸன்.

கருத்துகள் இல்லை: