வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பளை முதல் கே.கே.எஸ். வரை ரயில் பாதையில் குடியேறியோரை

பளை முதல் கே.கே.எஸ். வரை
ரயில் பாதையில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற உத்தரவு
பளை தொடக்கம் காங்கேசன்துறை வரை செல்லும் ரயில் பாதையில் அத்து மீறிக் குடியேறியவர்களை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கிராம சேவையாளர்கள் முலம் கட்டளையிட்டுள்ளார். இதுபோன்ற கட்டளை கடந்த வருடமும் விடப்பட்டது நேயர்கள் அறிந்ததே. சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தம்மிடம் இருந்த பணம் முழுவைதையும் சிறிய வீடுகளைக் கட்டுவதில் செலவு செய்துவிட்டதாகவும் தாங்கள் போய் குடியேற காணியில்லை என்றும் சொல்லுகின்றனர். தமக்கு நட்டஈடு அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் வாதிக்கின்றனர். யாழ். தேவி காங்கேசன்துறை வரை வரவேண்டும் என்றால் யாராவது ஒரு பகுதி விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே பொதுவான அபிப்பிராயமா கும

கருத்துகள் இல்லை: