செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பொன்னர் சங்கர்.... வாங்கினார் லாட்டரி மார்ட்டின்!

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் திரைப்படத்தை வாங்கினார் பிரபல லாட்டரி வர்த்தகரான மார்ட்டின்.

அவரது மார்ட்டின் புரொடக்ஷன் ஏற்கெனவே முதல்வர் [^] கருணாநிதி [^] கதை வசனத்தில் உருவாகும் இளைஞன் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரசாந்த் நடிக்க கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் மற்றொரு பிரமாண்ட வரலாற்றுப் படமான பொன்னர் சங்கரையும் வாங்கியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தை தியாகராஜனே தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்னர் சங்கர் படத்தில் ராஜ்கிரண், சினேகா, குஷ்பு, சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், மற்றும் ஜெயராம் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. படப்பிடிப்பு [^] தொடர்ந்து நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை: