திங்கள், 30 டிசம்பர், 2024

திரு. மன்மோகன்! RSS, BJP இந்துத்துவ கும்பல், நாட்டின் சாபக்கேடு.!


Kandasamy Mariyappan 
:  முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் அவர்கள்.!
திருமதி. இந்திரா மற்றும் திரு. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, திருமதி. சோனியா அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற முடிவோடு ஒதுங்கியிருந்தார்.!
திரு. நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்று, புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார்.!
ஆனாலும், இந்துத்துவ கும்பலால் அமைதியாக இருக்க முடியவில்லை.! 

May be an image of text

எனவே காங்கிரஸ் கட்சிக்குள் சரத்பவார், அர்ஜூன் சிங், நட்வர் சிங், கருப்பையா மூப்பனார், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூலமாக மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.!
கடைசியாக சீத்தாராம் கேசரி மூலமாக காங்கிரஸை படுகுழியில் தள்ளி, பாஜக ஆட்சிக்கு வந்தது.!
100 கோடி மக்களை கொண்ட,  மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, மதவெறி பிடித்த இந்துத்துவ கும்பலின் கைக்குள் போவதை உணர்ந்த, திருமதி. சோனியா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்துத்துவ கும்பலை எதிர் கொண்டார்.!


இந்த முடிவை சிறிதும் எதிர்பாராத இந்துத்துவ கும்பல், திருமதி. சோனியா அவர்களை அயல் நாட்டுக்காரர், ரஷ்ய ஏஜென்ட், இத்தாலிய கிறித்துவ கைக்கூலி என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.!
எல்லா விமர்சனங்களையும் புறந்தள்ளி, 2004ல் வலுவான கூட்டணி ஆட்சியை நிறுவினார்.!
இதன்மூலம், இந்துத்துவ கும்பலின் கனவை தகர்த்தெறிந்தார், திருமதி. சோனியா அவர்கள்.!
வெற்றிகரமாக தொடர்ந்த கூட்டணி ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவ கும்பல், தங்களுடைய விஷ ஆயுதமான துக்ளக் ஊடகங்கள் மூலமாக கூட்டணி ஆட்சியின் நெருக்கடியை, நாட்டின் நெருக்கடியாக மாற்றி, கூட்டணி ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்க வைத்தனர்.!
அன்றைய பிரதமர் திரு. மன்னோகன் அவர்களை, திருமதி. சோனியாவின் அடிமை என்று விமர்சனம் செய்தனர்.!
ஆனால், 2004 - 2014ல் திரு. மன்னோகன் அவர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தொழில் முதலீட்டுக் கொள்கையால், இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது.
ஆனாலும், வன்மம் பிடித்த இந்துத்துவ கும்பல், திருமதி. சோனியா அவர்களை விமர்சிக்க முடியாமல், திருமதி. சோனியாவின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்த திரு. மன்மோகன் அவர்களை சிறுமைபடுத்த முயற்சிக்கிறது.!
RSS, BJP இந்துத்துவ கும்பல், நாட்டின் சாபக்கேடு.!

கருத்துகள் இல்லை: