சனி, 28 டிசம்பர், 2024

Dr. இராமநாதன் அர்ச்சுனாவின் (MP) வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு

  Arunthathy Gunaseelan : சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா!
அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு.
மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே!
கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே!
அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்..
இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.


மேலும் Dr. அர்ச்சுனா கூறியதாவது:
நான் கடந்த அரசுகளில் சுகாதார அமைச்சில் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது ஒரு அமைச்சரை சந்திக்க வேண்டுமென்றால்,  consultants உட்பட எல்லோருமே பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த NPP அரசில் (ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில்).....
இவ்வாறான ஒரு சுமூகமான பொதுமக்கள் அமைச்சர் சந்திப்பை எனது மருத்துவ நிர்வாக காலத்திலோ அல்லது மருத்துவனாக வேலை செய்யும் காலத்திலோ நான் கண்டதில்லை.!
இதன் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் உண்மையிலேயே என்னை மதித்து என்னுடைய குரலுக்கு மதிப்பளித்து என்னை வரவேற்று எங்களுடைய சகல சுகாதார ஊழியர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை நேரடியாக கேட்டு அறிந்து அவர்களுக்கு உரிய பதிலை வழங்கியதற்கு தேசிய அரசாங்கத்திற்கும் மதிப்பிற்குரிய சுகாதார அமைச்சருக்கும் அது தவிர பிரதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் அவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் மனமார்ந்த நன்றிகள்!
சந்தர்ப்ப சூழ்ச்சிகளால் நலிந்து போனாலும், உண்மைகளுக்குத் துணை போகிறவர்கள் ஒரு போதும் வீழ்ந்து விடுவதில்லை

கருத்துகள் இல்லை: