jaffnamuslim.com : பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை யொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று,
அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.க்கள் சென்ற இரு வாகனங்களையும் சுற்றிவளைத்த மக்கள், அவர்களையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையின் அதிகாரிகள் குழுவைச் சந்தித்து இருவரும் வெளியேற்ற முற்பட்ட போது, குழுவொன்று சுமார் அரை மணித்தியாலம் இருவரையும் சுற்றி வளைத்து ஆவேசமான வார்த்தைகளைக் கூறி அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததால் எங்களை ஏன் இப்படி செய்கிறார்கள் என்று திட்டியதாக தெரிகிறது.
சம்பவத்தின் பின்னர் பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எம்.பி.க்களின் ஓட்டுனர்கள் மீதும் கலவரக்காரர்கள் குற்றம் சாட்டியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி இது தொடர்பில் குளியாபிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்கவிடம் விஜேசிறி பஸ்நாயக்கவிடம் நடத்திய விசாரணையில், ஆடைத்தொழிற்சாலையின் தலைவர்களுடன் தாம் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த சிலர் தனது சட்டையின் காலரை இழுத்து தாக்கியதாகத் தெரிவித்தார்.
தன்னுடன் அங்கு சென்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானையும் அந்த குழுவினர் துன்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக