திங்கள், 16 டிசம்பர், 2024

கடைசி கண்டி அரசன் ஆங்கில படையினரால் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்படும் தருணம்

May be an image of 1 person

 Sinnakuddy Thasan   :   றொபேட் நொக்ஸ் என்ற ஜரோப்பியன்  கண்டியில்  இரண்டாம் ராஜசிங்கன் அரசாண்ட காலத்தில் 16 வருசம் திறந்த வெளி கைதியாக இருந்தான்
பின்னர் ஒரு வழியாக தப்பி ஒல்லாந்தர் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து ஜரோப்பா வந்து சேர்ந்தான்
அவன் எழுதிய நூலிலிருந்து  கண்டி அரசனின் ஆட்சி முறை ,வாழ்க்கை முறை பற்றிய சில குறிப்புகள் கீழே
றொபேட் நொக்ஸின் நூலிலிருந்து
 இரண்டாம் இராசசிங்கன்; ஆட்சிமுறை; வாழ்க்கைமுறை:
இராசசிங்கன் என்ற பெயர் சிங்க அரசன் எனப் பொருள் படும்: இவன் முறையான வம்சவாரிசு அல்லது இரத்த உரிமையுடையவனல்லன். உயரமான தோற்றம் உடையவனல்லன், கறுப்பு நிறத்தவன், எந்த நேரமும் கண்களை அங்குமிங்கும் நோட்டம் விட்டபடியிருப்பான். பெருத்த வயிறினை யுடையவன்.


 
இவனது வயது எழுபதிற்கும் எண்பதிற்கும் இடைப்பட்டதாகவிருந்தாலும் செயலிலும் முகத் தோற்றத்திலும் அவ்விதம் தோன்றவில்லை

இவனது அரண்மனை இரவுபகலாகப் பலத்த காவலுக்குட்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவினரதும் காவல் முறை முடிவடைந்ததும் தாரை, பறையடித்து அரசனுக்கு மரியாதை செலுத்துவதுடன் மக்களையும் விழிப்பாகவிருக்கச் செய்வர்.
x
 வேலையாட்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர்களாகவும், பையன்களாகவும் இருப்பர். திசாவைகள் மூலம் நல்ல வாட்ட சாட்டமான உயர்ந்த வம்சத்திலுள்ள பையன்களைத் தெரிவு செய்வான். x அரண்மனையில் சமையல் செய்வதற்கு இளம்வயதினரான திருமணமான, திருமணமாகாத பெண்களையே தெரிவு செய்வர். அவர்கள் பின்னர் திரும்ப அனுப்பப்படுவதில்லை.
"அரசனுக்கு உண்பதற்காகக் கொண்டுவரப்படும் உணவுகள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கும். அவற்றினைப் பரிமாறுபவர்களின் வாய் துணியினால் கட்டப்பட்டிருக்கும்"
 x x
அரசனைக் காண வருபவர்கள் அரசனின் முன் நிலத்தில் வீழ்ந்து பல முறை வணங்கிப் பின் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள் தொப்பிகளைக் கழற்றி முழங்காலில் நிற்கும்படி பணிக்கப் படுவார்கள்.
 x
தூதுவர்கள் பகட்டானமுறையில் அரசமரியாதைகளுடன் வரவேற்கப்படுவர். அவர்களுக்கான செலவுகள் யாவும் அரசனினாலேயே மேற் கொள்ளப்படும். தூதுவர்கள் கொண்டு வருகின்ற வெகுமதிகளை அரசன் தனது ஆட்களைக் கொண்டு தூக்கிவரச் செய்வான். தூதுவர்களுடன் மற்றவர்கள் கதைக்கவும் அனுமதிப்பதில்லை.
 x x
கொடூரமான தண்டனைகள் அரசனால் வழங்கப்படும்.  வழங் கப்படும் இடத்தில் சிலர் கம்பங்களில் கொல்லப்பட்டிருப்பர்; மரங்களில் தொங்க விடப்பட்டிருப்பர்; யானையால் கொல்லப்பட்டிருப்பர். கைதிகள் பொதுச் சிறைச்சாலைகளில் வைக்கப்படுவர். சிலர் பிரபல்யமானவர்களின் பாதுகாப்பில் விடப்படுவர். அரண்மனையைச் சுற்றியுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு கைதிகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டுவரப்படுவர்
Z
 இவனது ஆட்சி கொடூரமானதும் தன்னிச்சையானது மாகும். தனது விருப்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ப ஆட்சிபுரிந்தான். தானே தனக்கு ஆலோசகனாக விளங்கினான். தனது கொடூரமான ஆட்சிக் கெதிரான சதியாலோசனைகளையும் சதித் திட்டங்களையும் விழிப்புடன் அடக்கி வந்தான். இரவில் முரசுகனதும் பறைகளினதும் சத்தம் இவனையும் மக்களையும் விழிப்பாகவிருக்க செய்யும்
இரவிலேயே முக்கியமான கருமங்களை மேற்கொள்வான்; தூதுவர்களைச் சந்தித்தல்; கடிதங்கள் வாசித்தல், நியமனங்கள் வேலையுயர்வுகள் மேற்கொள்ளுதல், தண்டனைகள் வழங்குதல் போன்ற முக்கிய கருமங்கள் மேற்கொள்ளப்படும்.
x கிறிஸ்தவ சமயத்தினரை அரசன் கௌரவித்தான், இவனது சகோதரியிறந்தபோது நாடு முழுவதும் சோகத்திலிருக்க கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலீடுபட்ட ஒல்லாந்தரைத் தண்டிக்கவில்லை.
X
புதுவருடத்தினையொட்டிய கொண்டாட்டத்தின் போது பிரதானிகள் பிரபல்யமானவர்கள், புதுவருட வெகுமதிகளையும் வரிகளையும் அரசனுக்கு அளிப்பார்கள். அதிகாரிகள், திசாவைகள் குற்றம் செய்தவர்களை விசாரித்துத் தண்டனைகள் வழங்கினாலும், மரண தண்டனை அரசனாலேயே வழங்கப் படும். யுத்தங்களுக்காக அல்லது வேறு கருமங்களுக்காகப் படைகளை அனுப்பும் போது அரசன் தூதுவர்கள் மூலம் கட்டளைகளைக் கூறி டுவான். சில சமயங்களில் நேரே அழைத்துக் கட்டளைகளைப் பிறப்பிப்பான். எழுத்துமூலம் ஒருவித கட்டளைகளும் விடுக்கப்படுவதில்லை. போர் வீரர்களும் தளபதியும் சிலசமயங்களில் எந்த நோக்சுத்திற் காகச் செய்கிறோம் என்பது தெரியாமலே படையெடுப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருக்கும்படி கூறிவிட்டுப் பின்னர் அரசன் கட்டளைகளை அனுப்புவான் I பிரதம தளபதியாக ஒருவரும் நியமிக்கப்படுவதில்லை. போர்வீரர்கள் வெவ்வேறு பிரிவுகளாகத் தலைவர்களின் கீழ் செய்வர்.
 இவர்கள் இணைந்து செயற்பட்டால் தனக்கெதிராகச் சதிசெய்வர் என்ற பயம் அரசனிடமிருந்தது. சிங்களவர்களை எங்கிருந்து வந்தவர்கள் எனக் கேட்ட போது அவர்களால் கூறமுடியவில்லை.
 தமது நாட்டில் பேய்களே முதலில் குடியேறியதாகக் கட்டுக்கதைகளையே கூறினர். மலைநாட்டிலும் தாழ்நாட்டிலும் வாழும் சிங்களவர்களின் இயல்புகள் மாறுபட்டவை. தாழ்நாட்டிலுள்ளவர்கள், இரக்கமுள்ளவர் கள் நேர்மையானவர்கள், உதவி செய்பவர்கள், அன்னியர்களை ஆதரிப்பவர்கள், ஆனால் மலைநாட்டிலுள்ளவர்கள் இதற்கு நேர்மாறனவர்கள்
 x
சிங்களவர்கள் செயலிலும் நடத்தையிலும் போத்துக்கீசரைப் போன்றவர்கள். எண்ணங்கள் அவர்களின் தந்திரமானவை. வஞ்சகமுடையவை. பேச்சில் மரியாதையும் முகத்துதியும் நிறைந்திருக்கும்
. திருமணம் செய்யும்போது குறைந்த சாதியினரைத் திருமணம் செய்யமாட்டார்கள். குலப் பெருமையை நோக்குவார்களே தவிர செல்வத்திற்கு முக்கியம் கொடுப்பதில்லை. கணவன் உண்ணும் போது மனைவியே பரிமாறுவான்; மனவி கணவனுடன் சேர்ந்து உண்பதில்லை. கணவன் உண்ட பாத்திரத்தில் எஞ்சியதையே மனைவி உண்பாள்;
சாப்பிடும்போது அதிகமாகக் கதைப்பதில்லை. திருமணங்கள் பெற்றோர்களினாலேயே நிச்சயிக்கப்பட்டன. பெண்களும் ஆண்களும் பொதுவாக மூன்று நான்கு தரம் திருமணம் செய்வார்கள்.
கணவனும் மனைவியும் பிரியும்போது பிள்ளைகளிருந்தால் ஆண் குழந்தைகளைக் கணவனும், பெண் குழந்தைகளை மனைவியும் பொறுப் பேற்கவேண்டுமெனப் பொதுக் சட்டம் விதித்தது.
 இரவில் அதிகம் நித்திரை கொள்வதில்லை. இரவில் பல தடவைகள் எழும்பி வெற்றிலை உண்பார்கள். புகையிலை புகைப்பார்கள். பின்னர் நித்திரையாகு மட்டும் பாடல்கள் பாடுவார்கள்.
x இறந்தவர்களுக்காகப் பெண்கள் புலம்பும் போது தலைமயிரைக் குலைத்துக் கீழ தொங்கலிட்டு இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்துக் கொண்டு பயங்கரமான சத்தத்துடன் இறந்தவர்களின் பெருமைகளைக் கூறி அழுவார்கள்,
ஓவியப்படம் - 1903 ஆண்டு லண்டன் டைம்ஸ் பத்திரிகையின் முகப்பு அட்டை படமாக வந்தது
கடைசி கண்டி அரசன் ஆங்கில படையினரால் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்படும் தருணம்

கருத்துகள் இல்லை: