Balasubramania Adityan T. : எங்க அப்பாவுக்கு 60 ஆம் வயதில் தான் நான் பிறந்தேன்...
எனக்கு சுமார் 15 வயது இருக்கும் போது தினத்தந்தியின் நிர்வாக டிரஸ்டி, சன் பேப்பர் மில் நிர்வாக இயக்குனர், மாலை முரசு இப்படி எத்தனையோ நிர்வாகத்தை தன் பெயரில் வைத்து இருந்தார்கள்.
அப்போது எங்கள் வீட்டில் 4 கார்கள் உண்டு.
தனது தம்பி சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள் உடன் சிறு வயது முதல் வேலை செய்த மாதவடையான் என்பவரை கயவர்கள் கொலை செய்தனர்.
எப்போது பணத்திற்காக ஒருவரை கொலை செய்ய உன் குடும்பம் துணிந்ததோ அந்த ரத்தக்கரையில் உள்ள ஒரு தம்படி பணம் கூட எனக்குத் தேவை இல்லை. என் பெயரில் உள்ள நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நீயே பெற்றுக் கொண்டு உன் குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள் என்று கூறவே, சி.பா.ஆதித்தன் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த பேப்பர்களில் உடனே கையெழுத்துகள் அனைத்தையும் வாங்கினார்.
நான்கு கார்களும் எங்கள் வீட்டை விட்டுப் போயின.
அன்றைய கால குறைவான டவுண் பஸ்ஸில் காத்து இருந்து பஸ்ஸில் தொத்திக் கொண்டு ஏறும் பரிதாப நிலையில் ஒரு இந்திய தியாகியும், இந்திய அரசியலமைப்பு தேர்தலில் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்ட முதல் பாராளுமன்ற அசெம்ப்ளி உறுப்பினராக இருந்த என் வயதான அப்பா.
15 வயது பள்ளிச் சிறுவனாக ஒன்று செய்ய இயலாத வேடிக்கை பார்க்கும் அவல நிலையில் நான்.
ரூ80 க்கு தவணை முறையில் வாங்கிய 141, பெருமாள்புரம் வீடு மட்டுமே அன்றைய 2 லட்சம் விலையில் இருந்து அதையும் பின்னர் வேறு வழி இல்லாமல் விற்றோம்.
1976 ஆம் ஆண்டு அனைத்தையும் இழந்த அரிச்சந்திர மகாராஜா போல நிற்கதியாய் நின்ற என் அப்பாவிடம் என் அம்மா, உங்களுக்கு 60 வயதில் நாம் ஒரு பிள்ளையை பெற்று இருக்கிறோம்.
எல்லாவற்றையும் கொடுத்து விட்டீர்கள். 15 வயதாகும் உங்க சின்ன மகனை என்ன செய்யப் போகிறோம் என்று என் அம்மா சோமசுந்தரி ஆதித்தன் கண்ணீர் மல்க கேட்டார்கள்.
அதற்கு "என் முருகன் உன் மகனை பார்த்துக் கொள்வார்" என்றார்கள் என் அப்பா.
அது மட்டும் அல்ல.
"நாம் சேர்த்த பணம் தானே நம்மை விட்டு போனது !
ஆண்டவன் நமக்கு கொடுத்த இரண்டு கால்கள் இருக்கு.
இரண்டு கைகள் இருக்கு.
சிந்திக்க மூளையும் இருக்கு.
மனதில் நம் முருகன் தந்த தெம்பும் இருக்கு.
திரும்பவும் நாம் சம்பாதித்து விடலாம். நீ கவலைப் படாதே" என்றார்கள் அம்மாவிடம் என் அப்பா.
அப்போது என் அப்பாவுக்கு 72 வயதை தாண்டி இருந்தது.
வயதின் காரணமாக என் அப்பாவால் மீண்டு எழ இயலவில்லை.
அப்பாவால் உயர்வு பெற்ற வஞ்சகர்கள் அந்த நிலையில் கூட என் அப்பாவை கை விட்டனர்.
ஆனால் என் அப்பா சொன்னது போலவே எங்கள் முருகரும், எங்கள் குல தெய்வம் முப்பிடாரி அம்மன், வேல் உகந்த அம்மன், கற்குவேல் ஐயனார், சுந்தரநாச்சி அம்மன் என்னை காப்பாற்றினர்.
என் அப்பா வேத வாக்காக கூறியது போல மனிதனின் இரண்டு கால்கள், இரண்டு கைகள், மூளை உதவி கொண்டு தனி ஒரு மனிதனாய் இறைவனின் ஆசி உடன் எழுந்தேன்...நடந்தேன்.
14 மொழிகள் கற்ற என் அப்பா சுப்ரீம் கோர்ட் S.T..ஆதித்தன் அளவுக்கு ஞானம் இல்லை என்றாலும் அத்தனை கட்சிகளுக்கும் ஓணர் ஒரே ஒரு குடும்பம் தான் என்கிற உண்மையையும், அரசியல், சினிமா,ஆன்மிகம் பெயரில் அந்த உலக ஒற்றை குடும்பம் செய்யும் சூதையும் அறிந்து கொண்டேன்.
ஆமாம்ங்க.
எங்க அப்பா சொன்னது போலவே கடவுள் நமக்குத் தந்த இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரு மூளை நமக்காக இறைவன் கொடுத்த மூலதனம் தான் என்பதில் ஐயமே இல்லை.
93 வயது வரை இயற்கையான வாழ்வியல் வாழ்ந்து எனது 24 தொழிலில் நான் அடைந்த பாதாள வீழ்ச்சியையும், பின்னர் இறைவன் தந்த 2 கால்கள், 2 கைகள், மூளையால் நான் பெற்ற வெற்றியையும் கண்ட பிறகே கண் மூடினார்கள் என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம் என்று
நேர்மையானவர்கள் எங்கு சென்றாலும் பிரச்சனை தான். ஏன் எனில் அவர்களுக்கு நடிக்கவும் தெரியாது. நடிப்பவர்களை ஏற்றுக் கொள்ளவும் தெரியாது.
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்.
பகிர்வோம்.
1 கருத்து:
மனசாட்சியுள்ள மனிதர் இந்த பின்புலத்தில், இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது திருச்செந்தூர் சுப்பிரமண்ய சுவாமி வைரவேல் வழக்கிலேயே தெரியுமே, தந்தியை போல் நன்றி கெட்ட கும்பல் எவருமில்லை
கருத்துரையிடுக