புதன், 25 டிசம்பர், 2024

கச்சத்தீவு Vs வெட்ஜ்பேங்க் தீவு = Wadge Bank ச்சத்தீவை விட வெட்ஜ் பாங் தீவு வளம் நிறைந்தது

 Kalidasan Swaminathan  :  Katchatheevu and Wadge Bank
கச்சத்தீவு vs வெட்ஜ்பேங்க் தீவு =  Wadge Bank
‘வெட்ஜ் பேங்க்’ என்று ஒரு தீவு.
குமரி முனைக்கு தெற்கே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள தீவு.
அதன் பரப்பளவு 4000 சதுர மைல் அதாவது 6400 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. அதைச்சுற்றி மீன்வளம் மிகவும் அதிகம். அந்த தீவில் ஹைட்ரோ கார்பன் வளம் மிக அதிகம். 1976 இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பு வரை அந்த தீவு யாருக்கு சொந்தம் என்று தீர்க்கப்படவில்லை.
குமரி மாவட்டத்து மீனவரும், இலங்கை மீனவரும் மீன் பிடித்து வந்தனர். கச்சதீவும் அதுபோல் தீர்க்கப்படாத ஒன்றாக இருந்தது. கச்சத்தீவை வெட்ஜ் பேங்குடன் ஒப்பிடும் போது , கட்ச தீவு ஒரு வறண்ட தண்ணீரற்ற தீவு. அதைச்சுற்றி மீன் வளம் கிடையாது. எரி பொருள் வளமும் கிடையாது.


1974 ஒப்பந்த பேச்சுவார்த்தை நடக்கும் போது இலங்கை கச்சதீவு மற்றும் வெஸ்ட் பேங்க் தீவையும் சேர்த்து கேட்டிருக்கிறது. இந்திய தரப்பு இதை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக கச்சத்தீவை மட்டும் 1974 இல் இலங்கையிடம் ஒப்புவித்து சில உரிமைகளை தன்னிடம் வைத்துக்கொண்டது.
இலங்கை கடல் எல்லையை வரையறுக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டியது. அப்படி வரையறுக்கும் போது இலங்கை வெட்ஜ் பேங்க் தீவு தனக்கு வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.  ஆனால் இந்தியா ஏற்கவில்லை. கச்சதீவு ஒப்பந்தத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டியது வரும் என்றது.
கச்சத்தீவை சுற்றி மீன் பிடிப்பவர்கள் ஈழத்தமிழர்கள். சிங்கள மீனவர்கள் அங்கு மீன் பிடிப்பதில்லை. கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் மற்றும் அந்த நிலம் யாவும் யாழ்ப்பாணம் ஆர்.சி. பிஷப் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆகவே 1974 ஒப்பந்தப்படி கிடைத்த கச்சத்தீவை விட்டுக் கொடுத்தால் தங்களுக்கு ஆதரவான ஈழத்தமிழர்களின் ஆதரவும் போய்விடும் என்ற நிலையில் மறு பரிசீலனையில், கச்சத்தீவுக்கு பதிலாக வெட்ஜ் பேங் தீவை இந்தியாவுக்கு கொடுக்க இலங்கை ஒத்துக்கொண்டது.
ஆகவே 1976 இல் இரண்டு நாட்டுகளுக்குமான International maritime boundary ஒப்பந்தத்தில் கச்சத்தீவும் வெட்ஜ் தீவும் முறையே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சொந்தமாக்கப்பட்டுவிட்டன.
இப்பொழுது மோடி கச்சத்தீவு பற்றி பேசியதால் இலங்கையின் முன்னாள் அயலுறவு அமைச்சர் இதுபற்றி கூறி மோடியை அவர்கள் இறையாண்மையில் தலையிடுவதாக எச்சரித்துள்ளார். தேர்தலுக்காக இப்படி பேசும் மோடி , தேர்தல் முடிந்தபின் இப்படி பேசுவாரா என்கிறார்.
1976 ஒப்பந்தத்தின் படி நன்மை அடைந்தது இந்தியாதான். கச்சத்தீவு , வெட்ஜ் தீவு ஒப்பந்தங்களுக்கு முன்பிருந்தே தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் அடிதடிகள் கொலைகள் நடுக்கடலில் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்கு 1930 களிலேயே சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து இந்திய விடுதலையின் போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கச்சத்தீவை கொடுத்ததனால்தான் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப் படுவதாகக் கூறுவது தவறு. இதில் ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொள்வது இரண்டு நாட்டையும் சேர்ந்த தமிழ் மீனவர்கள்.
குறிப்பு :  ஜெயலலிதா ஆட்சியிலிருக்கும் போது இரண்டு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசி முடிவுக்கு கொண்டுவர ஒரு இருதரப்பு பேச்சுவார்த்தை ஏற்பாடாயிற்று. அதில் இரு நாட்டின் அரசு சார்பாளர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் தனக்கு பெயர் கிடைக்காது என்பதனால் தமிழக அரசு கலந்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தார். இதை தோற்கடிக்க துடித்த கூட்டம் ஜெயாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். ஆகவே இலங்கை சார்பாக அங்குள்ள துறை சார்ந்த அமைச்சர் தலைமையில் மீனவ சார்பாகவும், தமிழகம் சார்பாக மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் தமிழக மீனவ பிரதி நிதிகள் சந்தித்தனர். அது தோல்வியில் முடிந்தது.
த.க. நிதி

கருத்துகள் இல்லை: