சனி, 12 மார்ச், 2022

இமயமலை மர்ம சாமியார் இவர்தானா? உண்மையை போட்டுடைத்த CBI..!

tamil.goodreturns. :  இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தையில்

ஒன்றான தேசிய பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள், பங்கு சந்தை முதலீட்டாளர்களிடையெ பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இன்றும் முக்கிய எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் தேசிய பங்கு சந்தையில் மிகப்பெரிய அளவில் முதலீடுகளும் இருந்து வருகின்றது.
இப்படி ஒரு மாபெரும் நம்பகமான எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றாக இருந்து வரும் NSEயில் நடந்த மோசடிகள், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
அதிலும் நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒரு சாமியாரின் முடிவினைக் கேட்ட பிறகு அறிவிக்கப்பட்டவை என்பது தான் முதலீட்டாளர்களை இன்னும் அதிர வைத்தது.
மர்மமான இமயமலை சாமியார்   

என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குனராக 2013 - 2016 வரையில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி தரப்பு வாதம் கூறியது. குறிப்பாக என்.எஸ்.இயின் முக்கிய முடிவுகள் அனைத்தும் யாரோ ஒரு இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டு நடந்துள்ளது. அனுபவமில்லாத ஆனந்த் சுப்ரமணியன் பணியமர்த்தல் என்எஸ்இ ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது.
யார் அந்த இமயமலை யோகி
யார் அந்த இமயமலை முறைகேடு வழக்கில் யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.


ரகசிய தகவல்கள் பகிர்வு
இந்த நிலையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் இமயமலை சாமியார் எனவும், அவர் தான் சாமியார் போல் நடித்துள்ளதாகவும், அவரிடம் தேரிந்தே சித்ரா ராமகிருஷ்ணன் பல ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல மர்மமான சாமியார் வேடத்தில் உள்ள சுப்ரமணியனே பங்கு சந்தை முடிவுகளிலும் தலையிட்டுள்ளார். சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் அழிப்பு
மேலும் இந்த மோசடி தொடர்பாக 832 ஜிபி தகவல்களை திரட்டியுள்ளதாகவும், சில தகவல்களை அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் தனது உத்தரவை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ்
முன்னதாக என்எஸ்இ விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, கடந்த மாதம் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்ஓசியும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மன ரீதியாக பாதிப்பா?
கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா அந்த சமயத்தில் படிக்க பகவத் கீதையை கேட்டதாகவும், என்.எஸ்,இ-யில் எடுத்த முக்கிய முடிவுகளை நினைவுகூற சிரமப்படுவதாகவும், மன ரீதியாக பாதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும கூறப்பட்டது.
கோ லோகேஷன் ஊழல் வழக்கு
யார் என்றே தெரியாத முகம் தெரியாத ஒரு சாமியாரிடம் இந்தியாவின் மிகப்பெரிய நிதி புழக்கமுள்ள, ஒரு பங்கு சந்தை எக்ஸ்சேன்ஞ்சில் இப்படி நடந்துள்ளது பல தரப்பிலும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இமயமலை யோகி ஆனந்த் சுப்ரமணியன் என்பது இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
என்எஸ்இ ரகசிய தகவல்களை முன் கூட்டியே பங்கு தரகு நிறுவனங்கள் சர்வலிருந்து எடுக்க உதவியதாக கூறப்படும் கோ லோகேஷன் ஊழல் வழக்கில், என்எஸ்இ-யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் பல முக்கிய அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்பட்டது.
வர்த்தகர்களின் கோரிக்கை
யோகி யார் என்று தெரிந்து கொள்வதோடு, கோ லோகேஷன், high-frequency trades உள்ளிட்டவற்றை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
பல வருடங்களான இருந்து வந்த இந்த பிரச்சனை தற்போது தான் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. ஆக ஒவ்வொரு தவறும் களையப்பட வேண்டும். மோசடியாளார்களின் முகத் திரை கிளித்தெரியப்பட வேண்டும் என்பதே முதலீட்டாளார்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை: