நக்கீரன் செய்திப்பிரிவு : எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் உரிய சான்றிதழ்களுடன், கடந்த பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி அன்று அந்தமான் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்பிடி விசைப்படகில் சென்றனர். பின்னர், அங்குள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, இந்தோனேசியா கடல் எல்லைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எட்டு மீனவர்களையும் இந்தோனேசியா கடற்படையினர் சிறைப்பிடித்து கைது செய்தனர். மேலும், மீனவர்களை அழைத்துச் சென்று, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக