BREAKING | இயற்கை முறையில் பிரசவம் பார்க்க பயிற்சி என விளம்பரம் செய்து ..
இலவச பயிற்சி என கூறி ஒவ்வொருவரிடமும் நபருக்கு 5000 கட்டணம் வாங்கியதாக ஹூலர் பாஸ்கர் மீது புகார்
மாலைமலர் : வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள பயிற்சி அளிக்க முகாம் நடப்பதாக விளம்பரம் செய்த நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை: சமீபத்தில் திருப்பூரில் யுடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொண்ட பெண் பலியானார். இதனை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வீட்டிலேயே சுகப்பிரசவம் மேற்கொள்ள கோவையில் இலவச பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இணையதளத்தில் ஒரு போஸ்டர் உலா வந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறைக்கு புகார் சென்றதை அடுத்து இந்த முகாம் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், இந்த முகாமை நடத்தும் நிஷ்டை என்ற அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் இன்று கைது செய்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக