நக்கீரன் : சுந்தர பாண்டியன்<
புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ளது திரௌபதியம்மன் கோயில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தலித் பெண் நுழைய முயன்றார். அப்போது ஊர் மக்கள், கோவில் நிர்வாகிகள் அப்பெண்ணை அனுமதிக்க மறுத்தனர். அதனால் அப்போது ஊர் மக்களுக்கும், தலித் மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதான பேசியதனடிப்படையில் அப்பிரச்னை தற்காலிகமாக திர்வு காணப்பட்டது. இந்நிலையில் இன்று தின்டாமை எதிர்ப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கையாக கோயில் அருகிலுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேசமயம் தலித் அமைப்புகளின் ஆலய நுழைவு அறிவிப்பினை கண்டித்து கூனிச்சம்பட்டு ஊர் மக்கள், பெண்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆலயத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லேசான தள்ளு முள்ளும், தடியடியும் நடந்தது.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சவுத்ரி விஜய், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தரப்பினரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக